Wednesday, February 5, 2014

இவர் சிங்கம் 3 கதாநாயகர் இல்லை






மேலே படத்தில் உள்ளவரை பார்த்தீர்களா?

பார்த்தால் ஏதோ சிங்கம் 3 படத்தில் கதாநாயகராக நடிப்பவர் உள்ளது அல்லவா? படத்தில் நடிப்பதற்காக மீசை வளர்த்துக் கொண்டவர் போல தோன்றுகிறது அல்லவா?

ஆனால் உண்மை மிகவும் வித்தியாசமானது.

இவர் எங்களது மதுரைக் கோட்டத் தோழர் ஆர்.தண்டபாணி. மதுரை கோட்டத்தின் சுடர் கலைக்குழுவின் முக்கியமான தோழர். அடுத்த படத்தில் உடன் இருப்பவர் எங்கள் மதுரைக் கோட்டத் தலைவர் தோழர் ஜி.மீனாட்சி சுந்தரம். தோழர் தண்டபாணி ஆசையாய் மீசை வளர்ப்பார். ஆனால் அந்த ஆசை மீசையை சுடர் கலைக்குழு நடத்தும் முருக விஜயம் நாடகத்திற்காக அவ்வப்போது எடுத்து விடுவார். என்ன செய்வது முதன்முதலாக  முருகர் படத்தை படைத்தவர்கள் முருகருக்கு மீசை வைக்கவில்லையே!


காசு கொட்டும் நடிப்பிற்காக மீசை வளர்த்து எடுப்பது பெரிய விஷயம் அல்ல. கொள்கைகளைச் சொல்வதற்காக மட்டுமே நடத்தப்படும் நாடகங்களுக்காக ஆசையாக வளர்க்கும் மீசையை துறப்பது பாராட்ட வேண்டிய விஷயமல்லவா?

என்ன சொல்கிறீர்கள்?


4 comments:

  1. ராமன் அவர்களே ! அந்தப் படம் R.தண்டபாணி அவர்களுடையது ! அவர் பீப்பிள்ஸ் தியட்டர் குழுவினரின் வீதி நாடகங்களில் அந்தக்கலத்திலேயே பெண் வேஷத்தில் நடித்தவர் ! அவர் தந்தை திரு ராமசாமியும் எல்.ஐ சி யின் பாரம்பரியத்தைஸ் சேர்ந்தவர் ! இப்போது அவர் "தப்பு " தண்டபாணி யாகியுள்ளார் ! "தீக்கதிர் "50 ம் ஆண்டு விழாவில் அவ்ர் தப்பு அடித்துக்கொண்டு ஆடிய ஆட்டமின்ரும் எங்கண்ணில் நிழலாடிக் கொண்டு இருக்கிறது !---கஸ்யபன்.

    ReplyDelete
  2. இப்படிப்பட்ட வாசிப்பாளர்களுக்கு தேவை இல்லாத தகவல் பதிவுகள், அடுத்து உங்க தளத்துக்கு வரணுமா என்கிற கேள்விய எழுப்புது. உபயோகமுள்ள விஷயத்தை எழுதுங்க.

    ReplyDelete
  3. வாங்க அனானி, இப்படி பெயரில்லாம எழுதறதுக்கு பதிலா, உங்க பெயரு, உங்க வலைப்பக்க முகவரி இதெல்லாம் கொடுத்திருந்தா நீங்க எழுதுவதை படிச்சுட்டு எப்படி உபயோகமுள்ள விஷயம் எழுதறதுனு உங்க கிட்டு கத்துக்கிட்டு எழுதுவேனே. அதுக்கு வாய்ப்பில்லாம பண்ணிட்டீங்களே... இல்லை யாரையாவது பாராட்டினா, சிலருக்கு சம்பந்தமே இல்லாம வயிறெரியும். அந்த மாதிரி பொறாமையா?

    ReplyDelete