நாக்பூரில் நடைபெற்ற எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
மீதான விவாதத்திலிருந்து
எங்கள் இதழ் சங்கச்சுடருக்காக தொகுத்தது
எங்கள் இதழ் சங்கச்சுடருக்காக தொகுத்தது
மேற்கு
வங்கத்தில் நடைபெற்ற மாற்றம் 103 தற்காலிக ஊழியர்கள் நிரந்தரப் பணி பெறுவதை
பாதித்து விட்டது. அசன்சால் கோட்டத்தில் தேர்வு நடைபெறுவதை திரிணாமுல் குண்டர்கள்
தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். தேர்வு மையத்திற்கு காவல்துறை வரவில்லை. ஆனால்
ஆளும்கட்சி குண்டர்கள்தான் வந்தார்கள். இதுதான் மேற்கு வங்கத்தின் இன்றைய நிலை.
-
தோழர்
ஜெயந்தோ முகர்ஜி,
கிழக்கு மண்டலம்
பல
பேராசிரியர்களை விட நமது கிளைச்செயலாளர்கள் கூடுதல் ஞானம் உள்ளவர்கள். முனைவர்
பட்டத்திற்கான பல ஆய்வுக்கட்டுரைகளை விட இன்சூரன்ஸ் வொர்க்கரில் வெளியாகும்
கட்டுரைகள் உன்னதமானவை
தோழர்
சந்தோஷ் குமார் மொகபத்ரா,
கிழக்கு
மத்திய மண்டலம்
லால்
பகதூர் சாஸ்திரி “ ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்ற முழக்கத்தை முன்வைத்தார். ஆனால்
இன்றோ ஒரு மத்திய அமைச்சரால் “கொல்லப்படுவதற்காகவே ராணுவ வீரர்கள்
பணியமர்த்தப்படுகிறார்கள்” என்று தைரியமாக சொல்ல முடிகிறது.
இன்சூரன்ஸ்,
வங்கி ஆகிய துறைகள் அரசின் வசமே இருக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர்
எழுதினார். ஆனால் அவரை பின்பற்றுவதாக சொல்லும் பலர் அதன் முக்கியத்துவத்தை புரிந்து
கொள்ளவில்லை.
தோழர்
வி.எஸ்.நால்வாடே,
மேற்கு
மண்டலம்
விவசாயிகள்
தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் விதர்பா பகுதியின் அவுரங்காபாத் நகரில் ஒரே
நாளில் 152 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் விற்பனையாகியிருக்கிறது. பென்ஸ் கார்
வாங்க 7 % வட்டியில் கடன் தரும் வங்கிகள், விவசாயத்திற்கு அவசியமான ட்ராக்டர்
வாங்க மட்டும் 14 % வட்டி வசூலிக்கிறார்கள்.
தோழர்
எம்.கிரிஜா,
தென்
மண்டலம்
எப்படி
உலகமயமாக்கலுக்கு வேறு மாற்று இல்லை என்று கதைத்தார்களோ, அது போலவே ஊழியர்
பற்றாக்குறையை சமாளிக்க கட்டாய இட மாறுதலைத் தவிர வேறு மாற்று கிடையாது என்று
நம்மைத் தவிர மற்ற அனைவரும் சொல்லி வந்தார்கள். புதிய பணி நியமனம் மட்டுமே தீர்வு
என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி போராடியதால்தான் இன்று பொது இன்சூரன்சில் 2600
உதவியாளர்கள் பணி நியமனம் நடந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்
அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ளதால் நாக்பூர் நகரை காவிக்கோட்டை என்று
சொல்வார்கள். அந்த காவிக்கோட்டையில் சிவப்புக் கொடியை பறக்க விட்ட பெருமை நமது
சங்கத்திற்குத்தான் உண்டு. பேரணி செல்லும் வழியெல்லாம் நாக்பூரை சிவக்க வைத்த நம்
நாக்பூர் கோட்டத் தோழர்களுக்கு
பாராட்டுக்கள்.
தோழர்
ஜி.ஆனந்த்,
பொது
இன்சூரன்ஸ்
450
பில்லியன் டாலர்கள் வரக்கூடிய அளவிற்கு 1986 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்
நரேந்திர மோடி கையெழுத்திட்டார். ஐம்பத்தி நான்கு லட்சம் வேலைகள் உருவாகும்
என்றும் சொன்னார்கள். ஆனால் அவையெல்லாம் வெறும் காகித ஒப்பந்தங்களே தவிர நிஜத்தில்
எதுவும் நடக்கவில்லை என்பது குஜராத்தைச் சேர்ந்த எங்களுக்குத்தான் தெரியும்.
தோழர்
பிரம்ம பட்,
மேற்கு
மண்டலம்
மாற்றம்
வந்த பிறகு மேற்கு வங்கத்தில் எங்கள் மாவட்டத்தில் மட்டும் 1024 பெண்கள் பாலியல்
தொல்லைகளை அனுபவித்துள்ளனர். 200 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள்.
அதிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் 24 பெண்கள். ஆனால் எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆனால்
பாலியல் தொல்லைக்கு 20,000 ரூபாய், பாலியல் வன் கொடுமைக்கு 60,000 ரூபாய் என்று
இழப்பீடு தொகையை முதலமைச்சர் பெருமையோடு அறிவிக்கிறார்.
த்ரூபஜோதி
கங்குலி,
கிழக்கு
மண்டலம்.
படேலின்
சிலைக்கு இரும்பு சேகரிப்பவரை தேச பக்தர் என்று பாராட்டுபவர்கள், பொதுத்துறை
நிறுவனங்களை பாதுகாக்கும் போராட்டத்திற்கு நிதி திரட்டுபவர்களை கம்யூனிஸ்டுகள்
என்று கிண்டல் செய்கிறார்கள். இவர்களின் கண்ணோட்டத்தின்படி தேச பக்தராக இருப்பதை
விட கம்யூனிஸ்டாக இருப்பதே பெருமைக்குரியது.
நிதி
அடிப்படைவாதிகளுக்கு மூலதனம்தான் மதம்.
மத
அடிப்படைவாதிகளுக்கு மதம்தான் மூலதனம்.
இந்த
இருவருமே இப்போது கைகோர்த்துக் கொண்டுள்ளார்கள்.
இராக்கின்
சதாம் ஹூசேனை வில்லனாக சித்தரித்த ஊடகங்கள், நரேந்திர மோடியை அவ்வாறு
சித்தரிப்பதில்லை. ஏனென்றால் ஊடகங்களின் சந்தைக்கு அவர் தேவைப்படுகிறார்.
தோழர்
ஸ்ரீகாந்த மிஸ்ரா,
கிழக்கு
மத்திய மண்டலம்
முதலாளித்துவம்தான்
சிக்கலின் அடிப்படை. முதலாளித்துவத்தை அகற்றும் போது மக்களும் தங்களின் பிரச்சினைகளிலிருந்து
விடுவிக்கப்படுவார்கள்.
ஊதிய
உயர்வு, பென்ஷன், எல்.ஐ.சி தனியார்மயம், புதிய நியமனம் என எல்லாமே அடிப்படை
கொள்கைப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள், தேர்தலோடும் தேர்ந்தெடுக்கப்படும்
அரசின் கொள்கைகளோடு இணைந்த பிரச்சினைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ், பாஜக விற்கு மாற்றாக இடதுசாரிகள் மட்டுமே இருக்க முடியும் என்பதை
இன்சூரன்ஸ் ஊழியர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் வலிமை
அதிகரிப்பதுதான் நமக்கு நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
குத்துச்சண்டை
போலவோ, மல்யுத்தம் போலவோ விளையாட்டு அரங்கில் இருவர் மோதிக் கொண்டு முடிவு
செய்வதல்ல பிரதமர் பதவி.
தோழர்
பி.சன்யால்,
மத்திய
மண்டலம்
செக்காஸ்லோவாகியா
நாட்டின் புரட்சியாளர் தோழர் ஜூலியஸ் ஃபூசிக், சிறைச்சாலைக்குள் இருந்தபடி தனது
“தூக்கு மேடைக் குறிப்புகளை” எழுதத் தொடங்கிய போது “ நான் இதனை எழுதி
முடிப்பதற்குள் தூக்குக் கயிறு என் கழுத்தை இறுக்கினாலும் இதன் மகிழ்ச்சியான
நிறைவுப் பகுதியை எழுத லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள் இன்னும் இருக்கிறார்கள்”
என்று குறிப்பிடுகிறார். தொழிலாளி வர்க்கத்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற
அவரது நம்பிக்கையை அவரது வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது. இந்திய உழைப்பாளி
மக்களின் ஒரு பகுதியாக உள்ள நாமும் அதே நம்பிக்கையோடு நம் கனவுகளை செயலாக்க
முன்னேறுவோம்.
தோழர்
எஸ்.ராமன்,
தென்
மண்டலம்
பொது
இன்சூரன்ஸ் நிறுவன பங்கு விற்பனைக்கு எதிராகவோ, புதிய பணி நியமனம், ஊதிய உயர்வு,
பென்ஷன் திட்டத்தில் இணைய வாய்ப்பு, முன்னேற்றங்கள் ஆகிய கோரிக்கைகளுக்காக இதுவரை
எந்த முயற்சியும் எடுத்திராத அமைப்புக்கள், ஏ.ஐ.ஐ.இ.ஏ வின் முயற்சிகளால் கொண்டு
வரப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை சீர்குலைப்பதற்காக மட்டும் அரசு அதிகாரிகளை
சந்திக்கிறார்கள். அவர்களாகவே தங்களின் போலித்தனத்தை அம்பலப்படுத்திக்
கொள்கிறார்கள்.
தோழர்
ஜே.குருமூர்த்தி
பொது
இன்சூரன்ஸ்
பள்ளிப்
படிப்பை தொடராத பெண் குழந்தைகளின் தேசிய சராசரி 47 % என்றால் குஜராத்தில் மட்டும்
55 %. ஆயிரம் ஆண்களுக்கு 930 பெண்கள் என்பது தேசிய சராசரி என்றால் குஜராத்தில் 886
பெண்கள்தான். இந்த அவலமான நிலையைத்தான் மோடியின் அதிசயம் என்று பாராட்டுகிறார்கள்.
தோழர்
வி.காமேஸ்வரி
தென்
மத்திய மணடலம்
அபத்தமாக
உளருவதே மேற்கு வங்க முதல்வரின் வாடிக்கையாக மாறி விட்டது. அதை சுட்டிக்காட்டும்
தைரியம் கூட எந்த ஊடகத்திற்கும் கிடையாது. மம்தாவால் பாதிக்கப்பட்ட மாணவி,
பேராசிரியர், விவசாயி ஆகியோர் அவர்கள் கண் முன்னால் நிற்கிறார்களே. போராட்டங்களை
முடக்க வேண்டும் என்பது அவர் ஆசை. அதனால் வேலை நிறுத்தங்கள் வெற்றிகரமாக நடக்கும்
போது அவர் வெறி கொண்டவராய் மாறி விடுகிறார்.
தோழர்
கௌதம் மைத்ரா,
பொது
இன்சூரன்ஸ்
சுஷ்மிதா
சென், ஐஸ்வர்யா ராய் போன்ற உலக அழகிகள் இருப்பதாலா இந்தியா அழகாக இருக்கிறது?
மலைகளும் நதிகளும் கடல் அலைகளுமா இந்தியாவை அழகாகக் காண்பிக்கிறது? இயற்கைக்
காட்சிகளும் எழில் மிகுந்த கட்டிடங்களுமா இந்தியாவின் அழகிற்குக் காரணம்?
கங்கையும்
காசி விஸ்வநாதர் கோயிலும் இருக்கும் வாரணாசியை விட்டு நான் வேறு எங்கும் வர
மாட்டேன் என்று புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை பிஸ்மில்லாகான் எப்போதும் கூறுவார்.
பர்வீன்
சுல்தானா பாடும் மீரா பஜனைக் கண்ணீர்
மல்கக் கேட்காதவர்கள் யாராவது உண்டா?
கே.ஜே.யேசுதாஸின்
குருவாயூரப்பன், ஐயப்பன் பாடல்களைக் கேட்டு உருகாதவரும் உண்டோ?
பல்வேறு
இனம், மொழி, மதம் என்று இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று என்ற இந்தியாவின் பாரம்பரியக் கலாச்சாரமே இந்தியாவை
மிகவும் அழகாக காண்பிக்கிறது.
தாய்நாடு
சொர்க்கத்தை விடவும் முக்கியமானது, புனிதமானது.
தோழர்
எஸ்.கே.கீதா,
தென்
மத்திய மண்டலம்
Comrade excellent compilation. Brought back memories of AIIEA conf. Only now did I realise, why you always find a place in minutes comm. Great work. Kalaiselvi,Salem
ReplyDeleteதாய்நாடு சொர்க்கத்தை விடவும் முக்கியமானது, புனிதமானது.
ReplyDeleteChina?
இராக்கின் சதாம் ஹூசேனை வில்லனாக சித்தரித்த ஊடகங்கள், நரேந்திர மோடியை அவ்வாறு சித்தரிப்பதில்லை.///////
ReplyDeleteஸ்டாலின்,, மாவோ போன்ற வில்லன்களும் -சில மூடர்களால் நாயகன்களா சித்தரிக்கப்படுவதில்லையா..
ReplyDeleteபல்வேறு இனம், மொழி, மதம் என்று இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று என்ற இந்தியாவின் பாரம்பரியக் கலாச்சாரமே இந்தியாவை மிகவும் அழகாக காண்பிக்கிறது. - சபரீசன் இந்த வார்த்தைகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இல்லை அப்படி ஒன்றுபட்ட இந்தியா இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? கம்யூனிச எதிர்ப்பாளர்கள் ஏன் வக்கிர புத்தி உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்?
ஆரிய இனம் என்று வெறி பிடித்து அலைந்த ஹிட்லரின் சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டியதால் ஒரு வெறி பிடித்த
ReplyDeleteமூடர் வரலாற்று நாயகர்களான ஸ்டாலினையும் மாவோவையும்
வில்லன் என்று பிதற்றி விட்டு போயிருக்கிறார்.
தோழர் கலைச்செல்வி, உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தொடர்ந்து கணினியில் செயல்படுவதால் கையால் எழுதுவது மிகவும் சிரமமாக உள்ளது. அந்த கஷ்டத்தை நாக்பூரில் நன்றாகவே உணர முடிந்தது. இந்த மாத சங்கச்சுடர் இன்று அனுப்பியுள்ளோம்.
ReplyDelete