சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நான் அவ்வளவாக பார்ப்பதில்லை.
இன்றும் கூட முழுமையாக பார்க்கவில்லை. ஆனால் திவாகர்
என்ற பையன் பலே பாண்டியா படத்தின் சிறந்த பாடல்களில்
ஒன்றான " நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்ற பாடலை
பாடத் தொடங்கிய போது இது ரொம்ப கஷ்டமான பாடலாச்சே
என்று பார்க்க உட்கார்ந்தேன்.
ஹா, என்ன பாட்டு...
பையன் நல்லாவே பாடினான், எம்.ஆர்.ராதா, சிவாஜி ரெண்டு
பேருமே கண் முன்னாடி வந்தாங்க. ஜதி, ஸ்வரம் இரண்டையுமே
அனாசயமாக பாடி அசத்தினான். சூப்பர்
ஜானகியம்மா மேடைக்கு வந்து திவாகரை உச்சி முகர்ந்து
ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து வாழ்த்தியதே
சூப்பர் சிங்கர் விருது வென்றதாக கருதுகிறேன்.
திவாகருக்கே அந்த விருதும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
http://www.dailymotion.com/video/k73uCnzflQVU5N5jXh3?start=1
ReplyDeleteஇதே பாடலை பழைய சூப்பர் சிங்கரில் சாய் சரண் மிக அசத்தாலகப் பாடியிருக்கிறார். யூடியூபில் பார்த்து ரசியுங்கள்.
ReplyDeleteநான் தற்போதெல்லாம் இது போன்ற வியாபார நோக்கில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை
கோபாலன்
இதே பாடலை பழைய சூப்பர் சிங்கரில் திவாகர் .மி க அசத்தாலகப் பாடியிருக்கிறார். யூடியூபில் பார்த்து ரசியுங்கள்.நான் தற்போதெல்லாம் இது போன்ற வியாபார நோக்கில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை
ReplyDeleteபோபாலன். 02 02 2016
Kalakalathulla thoongarata vituttu... enaa ethu....
ReplyDeleteஇன்று யூடியூபில் பார்க்க எவ்வளவோ முயன்றும் திவாகரின் பாடல் கிடைக்கவில்லை.
ReplyDeleteநான் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பல வருடங்களாகப் பார்ப்பதில்லை. இதில் முழுக்க முழுக்க பணம்தான் விளையாடுகிறது.
நான் சிறுவன் ஆஜித்தின் பரம ரசிகன். ஆரோமலே, சந்தனத் தென்றலை என்ற பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. சாய் சரணின் பாடலையும் நான் யூடியூபில்தான் பார்த்தேன்.
நீங்கள் சொல்ல வந்தததை வெளிப்படையாகக் கூறலாமே.
கோபாலன்
திரு ராமன்,
ReplyDeleteஅந்த நபர் என்ன கூற வருகிறார் என்று உங்களுக்காவது தெரியுமா.
கோபாலன்
அனானி, காலாகாலத்தில தூங்கறதோ, இல்லை தூங்காம புலம்பறதோ, இல்லை புலம்பறத எழுதறதோ என் கவலை. உன் வேலையப் பாத்துட்டு போ. பேர் சொல்லிட்டு கமெண்ட் போடு.
ReplyDeleteகோபாலன் சார், நானும் இந்த நிகழ்ச்சியை நேற்றுதான் பார்த்தேன். அதுவும் திவாகர் பாடும் போதுதான். ஜானகியம்மாவின் பாராட்டே விருதை விட மேல் என்பதைத்தான் சொல்ல வந்தேன்
ReplyDeleteராமன் சார்,
ReplyDeleteதமிழர்களில் உங்களைப் போன்ற சிலர் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
சாய் சரணின் பாட்டுக்கு இணையாக இது இருந்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன். எவவளவு முயன்றும் யூடியூபில் இதுவரை கேட்க முடியவில்லை.
நன்றி
கோபாலன்