கனவு காணுங்கள்
இது அப்துல் கலாம்
போதனைதான்.
கனவு காணும்
உரிமையும் கூட
இருக்கத்தான் செய்கிறது
எல்லோருக்கும்.
முதலிடத்தை தட்டிச்
 செல்ல
எல்லோருக்கும் ஆசைதான்.
ஆனால் முதலிடமாய்
ஒன்று மட்டும்தானே
இருக்க முடியும்.
முதலிடக் கனவுக்காய்
முடிந்தவரை  முயலுங்கள்,
கிட்டாமல் போனாலும்
கவலையில் மூழ்காதீர்.
காயப்படவும் துணிந்த
 பின்னே
கனவு காண
 தொடங்குங்கள்.
இல்லையென்றால் 
நனவாகாத கனவு
இருப்பதையும் 
பறித்து விடும்.
 
 
No comments:
Post a Comment