காங்கிரஸ்
கட்சி முதல்வர்களை சுற்றி நேற்று ஒரே நாளில் ஒரே விதமான சம்பவங்கள் ஆனால் மாறுபட்ட
முறையில் நடந்துள்ளது.
ஹரியானா மாநில
முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை ஒரு வேலையில்லா இளைஞன் கன்னத்தில் அறைந்து
விட்டார்.
அதே நேரம்
ஹிமாச்சல் பிரதேச முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரீஷ் ராவட் காங்கிரஸ் கட்சி
தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறைந்து விட்டார்.
வேலை
கிடைக்காத விரக்தியும் அரசின் மீதான கோபமும் அந்த இளைஞனை முதல்வரை அறைய வைத்து
விட்டது.
உற்சாகக்
கொண்டாட்டத்தில் தொடர்ந்து முழக்கமிட்டதே முதலமைச்சரை வெறுப்பேற்றி தொண்டரை அறைய
வைத்து விட்டது.
முதலமைச்சரை
அறைந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
ஆனால்
தொண்டரின் கன்னத்தில் அறைந்த முதலமைச்சரோ அது அறை கிடையாது, செல்லமான தட்டும்
என்று சாதிக்கிறார்.
குற்றம்
ஒன்றுதான்
ஆனால் தண்டனை
என்னவோ ஒருவருக்குத்தான்.
இதுதான் நம்
இந்தியா.
இந்த
முரண்பாடுதான் நம் இந்தியா.
No comments:
Post a Comment