Friday, February 7, 2014

இவர்கள்தான் இந்தியாவை காப்பாற்றப் போகிறார்களாம்?


இன்றைய மன்மோகன் அரசும் சரி, நேற்றைய வாஜ்பாய் அரசும் சரி இந்திய பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவே தங்கள் கொள்கைகளை வகுத்து வைத்துள்ளனர்.

சாமானிய மனிதனுக்கு ரேஷன் அரிசி கொடுப்பதற்கோ இல்லை எரிவாயு சிலிண்டருக்கோ செலவாகும் தொகையை மானியம் என்று கொச்சைப் படுத்தி அதனால் எங்களின் உறக்கமே தொலைந்து போகிறது என்று புலம்பிக் கொண்டே பெரு முதலாளிகளுக்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் நேரடியாக வாரி வாரி வழங்குவார்கள்.

இதைத்தவிர ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, இத்யாதி இத்யாதி என்று அடிமாட்டு விலைக்கு ஒதுக்கீடு செய்வது தனி. இந்த முதலாளிகளுக்கு வாரி வாரி வழங்கினால் அவர்கள் தொழில்களில் முதலீடு செய்து அது அப்படியே சொட்டு சொட்டாக வடிந்து கடைசி மனிதனுக்கு வந்து சேரும் என்று வியாக்யானமும் செய்வார்கள்.

அப்படி அரசு வாரி வாரி கொடுப்பதை பெற்றுக் கொள்பவர்கள் தங்கள் முதலீடுகளை எப்படி செய்கிறார்கள் என்று ஒரு சின்ன சாம்பிள் பாருங்கள்.

2011 – 12 நிதியாண்டில் சில இந்திய பெரு முதலாளிகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் செய்த முதலீடுகளின் பட்டியல் கீழே உள்ளது.

எண்
பெயர்
உள் நாட்டில் செய்த முதலீடு
(டாலர்களில்)
வெளி நாட்டில்
செய்த முதலீடு
(டாலர்களில்)
1
முகேஷ் அம்பானி
2.7 பில்லியன்
8 பில்லியன்
2
அனில் அம்பானி
400 மில்லியன்
3 பில்லியன்
3
ரத்தன் டாடா
200 மில்லியன்
3 பில்லியன்
4
சுனில் மிட்டல்
2 பில்லியன்
16 பில்லியன்
5
சஷி ரூயா
200 மில்லியன்
1.2 பில்லியன்

இவர்கள்தான் இந்தியாவை உய்விக்க அவதாரம் எடுத்தவர்கள் என்ற ரீதியில் அரசுகள் செயல்படுகிறது. அவர்கள் தங்கள் லாபத்தை பெருக்கிக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் வறுமையில் வாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

பிரதமர் கனவில் மிதக்கும் மோடியும் ராகுலும் இந்த பண நாயகர்களின் எடுப்பார் கைப்பிள்ளைகள்தான்.

ஜனநாயகத் தேர்தலில் உங்களின் வாக்கு ராகுலுக்கோ, மோடிக்கோ சென்றால் அது இந்த பண நாயகர்கள் தழைக்க செலுத்தும் வாக்காகவே அமையும்.  உங்கள் வாக்கு விரயமாக வேண்டுமா?

சிந்திப்பீர், இடதுசாரிகள் சொல்லும் மாற்றுக் கொள்கைகளை ஆதரிப்பீர்.

6 comments:

 1. Left asks to vote for Jayalalitha.Ridculous.

  ReplyDelete
 2. வாங்க கே.கே.கே ரொம்ப நாளா இந்த பக்கம் காணோம்? திமுக வில் ஏதாவது பதவி கிடைத்ததா? இல்லை இதயத்தில் மட்டும்தான் இடமா? நாடகமே உலகமாக வாழும் திமுக உடன்பிறப்புக்களுக்கு மற்றவர்களைப் பற்றி பேசவே தகுதி கிடையாது. முதல்ல அண்ணன் தம்பி பஞ்சாயத்தை முடிங்க.

  ReplyDelete
 3. 1.I can see kalaignar in you by the way of your reply. Anyway Ieft parties asking us to vote for Jaya is ridiculous.
  2. Annan thambi panchayathu-- dont you feel ashamed of talking about these irrelevant issues!!! That is why Ma Ka Ika term you people as Poli hal.

  ReplyDelete
 4. Mr KKK It is you who made an irrelevant comment to my post and why you are irritated when i speak truth?

  Is it not ridiculous on the part of the DMK to ask for Congress Support to Kanimozhi after coming out of the alliance? is it not shameful?

  We Put forth certain alternative policies and support parties which also agree on it. What ridiculous is there?

  For persons in the sinking ship, it will appear so. All Stomach Burning.

  மக்களோடு இணைய முடியாத போலிப் புரட்சியாளர்கள் ம.க.இ.க

  ReplyDelete
 5. Where is the policy agreement?
  Walmart has got a big ware house in Oragadam.
  Thousands of Govt employees were sent out in single stroke.
  When every small scale industry is suffering wIthout electricity , every multinational giants are enjoying trouble free electricity.
  Sand mafia Vaikunda rajan is one of the power centers.
  CPIM is fighting for Chidambaram temple,.Of course Subramaniam samy s policy and Jayas policy are in agreement in this issue.
  In sethu project BJP and AIADMKs policies are in agreement.
  Your alternate policy agreement is a comedy Tomorrow after the elections Left will realise the hidden agreements of Jaya and BJP.
  So for this elections Jaya will THROW some money and left can dance to the tunes of Jaya for now.After the elections left can realise its foolishness( of course it will be safe with the MOOLADHANAM generated ) but we people will be suffering.
  This is the real NENJERICHAL.

  ReplyDelete
 6. ஊழலில் கின்னஸ் சாதனை படைத்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிறகு மற்றவர்களைப் பற்றி குறை கூற உங்களுக்கெல்லாம் அருகதையே
  கிடையாது. ஜெ மீது நீங்கள் சுமத்தும் எல்லா குற்றச்சாட்டுக்களும் உங்கள் மீதும் உள்ளது. நாங்கள் எந்த கட்சியிடமும் பணம் வாங்கிவதில்லை. ஆக மூலதனம் என்பது உங்களின் மூன்றாம்தர கற்பனை. காங்கிரசின் எல்லா உலகமய சட்டங்களுக்கும் கைதூக்கிய களங்கம் உடையவர்கள் நீங்கள்.

  ReplyDelete