Wednesday, February 26, 2014

இலங்கைப் பிரச்சினையில் இந்திய தலையீடு - இத்தகவல் உங்களுக்கு தெரியுமா?

இதுவும் நான் முன்பு எழுதிய ஒரு பதிவுதான்.

இந்திய அரசு எவ்வளவு திட்டமிட்ட முறையில் நடந்து
கொண்டுள்ளது என்றும் அதன் பலன் தமிழர்களுக்கு
கிடைக்கவில்லை என்பதையும் உணர்வீர்கள். 

இந்த இணைப்பை படியுங்கள்.

 

5 comments:

 1. அய்யா,

  தயவு செய்து சமையல் பதிவோட உங்க "எழுத்து திறமைய" வச்சிக்கலாம், இது போல "கதை"எழுதுறேன்னு, மொக்கைய ஏன் போடுறீங்க :-))

  ஒரு ராணுவம் ,அண்டை நாடுகளின் மொழியை அறிந்துக்கொள்ளாமலே எப்படி இருக்க முடியும்னு கூட புரிஞ்சிக்கிற காமன் சென்ஸ் இல்லாமல் ,பினாத்திக்கிட்டு, அதுல சதி இருக்கிறாப்போல அதை வேற ஒருப்பதிவு எழுதிட்டிங்களாம், எங்கே யாரும் படிக்காம போயிடக்கூடாதுனு, மெனக்கெட்டு நாலுவரியில இன்னொரு பதிவு எழுதி அதுக்கு லின்க் போட்டுக்கிட்டு ,ஆயுள் காப்பீட்டு கழக சம்பளம் வெட்டியா போகுதுங்க அவ்வ்!

  ReplyDelete
 2. அய்யா வவ்வால் நான் ஒப்புக் கொள்கிறேன். உங்களைப் போன்ற எழுத்து திறமை எனக்கு கிடையாது. சம்பந்தமே இல்லாமல் நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை போட்டு வளவளவென்று ஜவ்வு மாதிரி இழுக்கும் உங்களின் திறமை எனக்கு வரவே வராது. சமூகப் பொறுப்போடு மொக்கையாக எழுதுபவர்களைக் கண்டால் உங்களைப் போன்ற மூத்த பதிவர்களுக்கு கோபம்தான் வரும்.

  வெளியுறவுத்துறையில் மொழிபெயர்ப்பாளர்கள் என்று ஏராளமானவர்கள் இருப்பது தெரியுமா அதி புத்திசாலியே?

  திடீரென ராணுவத்தில் உள்ள பலருக்கு சிங்கள மொழி மட்டும்
  கற்றுக் கொடுப்பதன் நோக்கம் என்ன என்று புரிந்து கொள்ள
  முடியாமல் பினாத்தியிருப்பது யார்?

  ஆமாம், உமக்கு ஆண்கள் சமைப்பதில் அவ்வளவு என்ன பொறாமை? நீர் வீட்டில் இடி வாங்கினீரா?

  ராத்திரி பத்து மணிக்கு வலைப்பக்கம் எழுதுவதால எல்.ஐ.சிக்கு
  என்ன பிரச்சினை? அதுல என் சம்பளம் வெட்டியா போகும்?

  உங்கள மாதிரி ஆளுங்களோட வன்மமான பின்னூட்டத்திற்கு பதில் போடுவதிலதான் என் நேரம்தான் வெட்டியா போகுதுங்க.


  Same Blood

  ReplyDelete
 3. அய்யா,

  தாங்கள் சமூகப்பொறுப்போடு எழுதுவதன் மீதெல்லாம் கோபம் கொள்ளும் அளவுக்கு "சமூகவிரோதியல்ல" அவ்வ்!

  #//வெளியுறவுத்துறையில் மொழிபெயர்ப்பாளர்கள் என்று ஏராளமானவர்கள் இருப்பது தெரியுமா அதி புத்திசாலியே?//

  ராணுவக்கூட்டு நடவடிக்கை மற்றும் பயிற்சிகளின் போதெல்லாம் களத்தில் வெளியுறவுத்துறை மொழிப்பெயர்ப்பாளர்களை இழுத்துக்கொண்டு ஓட முடியாதே!

  பொதுவாகவே அண்ட நாடுகள் மற்றும் உடன்ப்பாடான நாடுகளின் மொழியை ராணுவத்தில் சிலருக்கு கற்றுக்கொடுப்பது வழக்கம்.

  சீனம், ரஷ்ய மொழி எல்லாம் அப்படி கற்றுக்கொண்ட ராணுவத்தினர் இருக்காங்க.

  எனவே இலங்கையின் மொழியை கற்றுக்கொள்ள வைத்தது ஒன்றும் அதிசயமல்ல. இன்னும் சொல்லப்போனால் 80களுக்கு முன்னரே கூட சிங்களத்தை கற்றுக்கொடுத்திருப்பார்கள், 80 இல் நடந்ததை அறிந்தது வைத்து அதெல்லாம் இந்திய அமைதிப்படையை அனுப்ப போட்ட திட்டம் என்றால் என்ன செய்ய?

  இந்திய அமைதியப்படைய அனுப்பும் எண்ணம் மத்திய அரசுக்கே இருந்திருக்குமானு தெரியாது, படைய அனுப்பனும் என அப்போதைய திமுக அரசு ,இன்னும் ஈழ ஆர்வலர்கள்(பழ.நெடுமாறன் உட்பட) போராட்டம் கூட நடத்தி இருக்காங்க,, வைக்கோ நாடாளுமன்றத்தில் தம் கட்டி பேசி , படைய அனுப்ப சொன்ன வரலாறுலாம் அறிவீர்களா :-))

  அப்போ கலைஞர், நெடுமாறன் ,வைகோ கூட இந்திய அமைதிப்படைய அனுப்ப ஆரம்பத்துலவே சதி செய்தார்களா?

  அமைதிப்படை போய் , புலிகளுக்கு எதிரானதாக மாறியதால் ,அது வேண்டாத வேலையாக இப்போ பார்க்கிறிங்க, இதுவே சாதகமாக நடந்திருந்து ,ஒரு தீர்வு எட்டியிருந்தால், அதெல்லாம் "இந்திய அரசின்" ராசதந்திரம், 80 லவே சிங்களம் படிக்க வச்சுதுது பதிவு போட்டிருப்பீங்க :-))

  #//ஆமாம், உமக்கு ஆண்கள் சமைப்பதில் அவ்வளவு என்ன பொறாமை? நீர் வீட்டில் இடி வாங்கினீரா?//

  நல்லா சமைங்க, சமையளுக்கே "நளபாகம்"னு ஆண் பெயரு தானே அவ்வ்!

  //ராத்திரி பத்து மணிக்கு வலைப்பக்கம் எழுதுவதால எல்.ஐ.சிக்கு
  என்ன பிரச்சினை? அதுல என் சம்பளம் வெட்டியா போகும்?//

  உங்க ஆற்றல் வீணா செலவாகுதுல்ல அதை சொன்னேன் அவ்வ்!

  //உங்கள மாதிரி ஆளுங்களோட வன்மமான பின்னூட்டத்திற்கு பதில் போடுவதிலதான் என் நேரம்தான் வெட்டியா போகுதுங்க.//

  இத நான் தான் சொல்லணும்,நாலு வரி பதிவுக்கு நாப்பது வரியில பின்னூட்டம் போட்டிருக்கேன் அவ்வ்!

  ReplyDelete
 4. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான் எண்டு எங்கட அப்பு அப்பப்பச் சொல்லும், உங்கட ராணுவம் 3 வருஷத்தில சிங்களம் படிச்சயினம், ஆனா எங்கட பொடியல் மூண்டே வாரத்துல சிங்களத்தை படிச்சு கொழும்புல கண்ட இடத்துலயும் குண்டை வச்சவ தெரியுமா. இந்தக் கதை எல்லாம் பழசப்பு, இதையே எத்தன நாளைக்குத் தான் கிண்டிக் கொண்டு இருப்பீங்கள், போங்கோ உங்கட நாட்டுல உள்ள விடயத்தைப் போய்ச் சொறிஞ்சு கொள்ளுங்கோ, எழுத எதுவும் கிடைக்கேல எண்டால், பழய சோறை திண்டுபோட்டு குப்புற விழுந்து கிடவுங்கோ.

  ReplyDelete
 5. பினாத்திக்கிட்டு, அதுல சதி இருக்கிறாப்போல அதை வேற ஒருப்பதிவு எழுதிட்டிங்களாம் // இந்தியாவின் சதி இல்லையா? இந்தியாவின் நடவடிக்கைகள் எப்போதும் தமிழர்களுக்கு எதிராகத்தனே இருந்து வருகிறது.

  ReplyDelete