Monday, February 24, 2014

பிரெட் பேரிச்சம்பழ அல்வா – ஆணின் சமையல் குறிப்பு






வலைச்சரத்தில் எனது வலைப்பக்கம், அதிலும் சமையல் குறிப்பு  அறிமுகமானதால் கிடைத்த உற்சாகத்தால் செய்யப்பட்ட  புது முயற்சி.

தேவையான பொருட்கள்

பிரெட் – துண்டுகளாக்கி  பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய் துறுவல், வெல்லம், நறுக்கி வைத்த பேரிச்சம்பழம்,
வறுத்த முந்திரி பருப்பு.

வெல்லத்தை பாகு காய்ச்சிக் கொள்ளவும். காய்ச்சிய பாகில் முதலில்
தேங்காய் துறுவலைச் சேர்க்கவும், அதன் பின்பு பேரிச்சம்பழத்தையும் சேர்த்து கலக்கவும். பிறகு பொறித்த பிரெட் துண்டங்களையும் அதில் நன்கு கலக்கவும். பிறகு முந்திரியை சேர்த்து ஏலக்காய் பொடி போட்டு நெய் ஊற்றி எல்லாம் நன்றாக கலந்த பின்பு அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.

எப்படி உள்ளது என்று சொல்லுங்கள்.

2 comments:

  1. சத்துள்ள சமையல் குறிப்பு... செய்து பார்ப்போம்... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. பார்க்கும்போதே ருசியா இருக்கும்ன்னு தெரியுது

    ReplyDelete