Tuesday, February 18, 2014

அறுபட்ட தூக்குக் கயிறு - நிஜமான புராணக்கதை

 

புராணக்கதை ஒன்று
உயிர்த்தெழுந்த அற்புதம்,
அற்புதம்மாளின் போராட்டம்
நிகழ்த்திய அற்புதம்.

பாசக்கயிறு கொண்டு
மார்க்கண்டேயனை துரத்திய
எமனை எட்டி உதைத்த
சிவனின் கதை புராணம்.


மூவரை துரத்திய
தூக்குக்கயிறு,
நீதியரசர் சதாசிவம்
பேனா பட்டு அறுபட்டது
இன்றைய நிஜம்.

உதைபட்டு 
எட்டி விழுந்துள்ளது
மெத்தன அரசின்

அலட்சிய நிர்வாகம்.
 
கருப்புத்துணி கட்டிய
நீதி தேவதையின் பார்வையில்
இன்று கருணை வெள்ளம்.

தாயின் கண்ணீருக்கு
இன்னமும் இருக்கிறது வலிமை.

4 comments:

  1. கவிதையாக இல்லாவிட்டாலும் உங்களின் உணர்ச்சிப் பெருக்கு புரிகிறது. அதுதானே முக்கியம் என்கிறீர்களா? அதுவும் சரிதான். உங்களின் உணர்வில் நானும் பங்கேற்கிறேன். நன்றி (ஆமா, உங்க பெயர்தான் என்ன? ஓரிடத்தில் சுவாமிநாதன் ராமன், இன்னோரிடத்தில் ராமன் ரகுநாதன் என்னங்கய்யா இது?)

    ReplyDelete
  2. முகநூலில் என் தந்தையின் பெயரோடு இணைந்து சுவாமிநாதன் ராமன்.
    என் மின்னஞ்சல் முகவரி என் மகனின் பெயரோடு இணைந்து ராமன்ரகுநந்தன் . இரண்டு முகவரிகளிலும் இருக்கிற ராமன்தானே என் பெயராக இருக்க முடியும் தோழர்?

    ReplyDelete
  3. தோழர் மரண தண்டணை என்ற தண்டணைக்கு எதிரானவர் என்று எடுத்துக்கலாமா?

    ReplyDelete
  4. கண்டிப்பாக தோழர் வேகநரி

    ReplyDelete