அன்னா ஹசாரே
மோகத்தில் இந்திய மக்கள் மதி மயங்கிக் கிடந்த உச்சகட்ட காலத்தில் அவர்
காந்திக்குல்லாய் அணிந்த ஒரு அராஜகவாதி, ஜனநாயக நெறிமுறைகளின் மீது நம்பிக்கையற்ற
ஒரு மனிதர் என நான் எழுதிய போது கடுமையான பின்னூட்டங்கள் பெறப் பெற்றேன்.
தரகுப்புயல்
தமிழருவி மணியன் பற்றி முதல் முறையாக எழுதிய போதும் அப்படித்தான் வந்தது. ஆனால்
அவரது தொடர் நடவடிக்கைகள் மூலம் எனது விமர்சனத்தை உண்மையாக்கி விட்டார். எப்படி
ராகுல் காந்தி பற்றி எழுதினால் யாரும் சீண்டுவது இல்லையோ அது போல இப்போதெல்லாம்
த.அ.ம பற்றி எழுதினாலும் யாரும் சீண்டுவதில்லை.
அவரது
கட்டளைக்கு ஏற்ப நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்று நிர்ப்பந்தித்த அன்னா ஹசாரே
இப்போது “கெட்ட பரிபர்த்தன்” மம்தாவோடு கூட்டணி வைத்து அவர்தான் பிரதமராக வேண்டும்
என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
ஜனநாயகத்தின்
மீது நம்பிக்கை இல்லாத அன்னாவும் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து வரும் மம்தா
பானர்ஜியும் கூட்டு சேர்வது இயல்பானதுதான்.
உன் நண்பன்
யார் என்று சொல், உன்னைப் பற்றி சொல்கிறேன் என்ற பழமொழிக்கு ஏற்ப, இப்போது
சொல்லுங்கள் மம்தாவின் புதிய நண்பன் அன்னா ஹசாரே. யார் இவர்?
No comments:
Post a Comment