ராஜீவ்
வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படிக்கும்
வாய்ப்பு கிடைத்தது. மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டாம் என்பதற்காக மத்திய அரசின்
தலைமை வழக்கறிஞர் முன்வைத்த ஒரு வாதம் என்ன தெரியுமா?
“குற்றவாளிகள்
சிறையில் நன்றாக நிம்மதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த கஷ்டமும் கிடையாது.
ஆகவே தண்டனையை குறைக்க வேண்டாம்.”
தூக்கு தண்டனை
வழங்கப்பட்டு கருணை போட்டு அது பரிசீலிக்கப்படுமா இல்லை நிராகரிக்கப்படுமா என்று
தெரியாமல் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஒவ்வொரு நொடியையும் நரகமாக அனுபவித்துக்
கொண்டிருக்கிறவர்கள் நிம்மதியாகத்தான் உள்ளார்கள் என்று சொல்வதற்கு அரசு
வக்கீலுக்கு கொஞ்சம் கூட கூச்சம் ஏற்படவில்லை.
ஆனால் இந்த
அபத்தமான வாதத்திற்கு தீர்ப்பில் சரியான சவுக்கடி கொடுத்துள்ளார்கள்.
கருணை மனுவை
நினைவூட்டி அளித்துள்ள பல கடிதங்களில் தங்களின் உடல் மற்றும் மன நிலை பற்றி
எழுதியுள்ள வாசகங்களை மேற்கோள் காட்டியுள்ளனர். இவர்கள் எவ்வாறு நிம்மதியாக இருக்க
முடியும் என்று அரசு வழக்கறிஞர் சொல்கிறார் என்று கேட்டு அந்த அபத்த வாதத்தை
தீர்ப்பில் தோலுரித்துள்ளனர்.
ஆளும்
கட்சிக்கு விசுவாசமான வக்கீலாக இருந்தாலும் இப்படியா அச்சுபிச்சுவென்று உளறுவார்?
No comments:
Post a Comment