பிரதமராக
பேராசைப்படும் நரேந்திர மோடியால் விலக்கி வைக்கப்பட்ட அவரது மனைவியின் பேட்டியை
ஒரு நாளிதழில் படித்தேன். மூன்று வருடங்கள் குடும்பம் நடத்தி விட்டு அவரை ஒதுக்கி
வைத்திருந்தாலும் தனக்கு திருமணமே ஆகவில்லை, தான் ஒரு பிரம்மச்சாரி என்று மோடி
கதைத்து வந்தாலும் அந்தப் பெண்மணி மோடியை குறை எதுவும் கூறவில்லை. மாறாக அவர்
பிரதமர் ஆனால் நல்லது என்று வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
கணவனே கண்
கண்ட தெய்வம் என்ற பழங்காலத்து சிந்தனையின் வெளிப்பாடாக அந்த பேட்டி அமைந்துள்ளது
அல்லது அமைக்கப் பட்டுள்ளது. இருப்பினும் இது கணவன் மனைவிக்கிடையே உள்ள பிரச்சினை.
இதிலே ஒரு அளவிற்கு மேல் நாம் தலையிட முடியாது.
ஆனால் மோடி
ஒரு பொய்யர் என்பது மீண்டும் ஒரு முறை அவரது மனைவியாலாயே அம்பலப்பட்டுள்ளது. அவர்
ஒரு பிரம்மச்சாரி என்று இத்தனை நாள் சொல்லி வந்தது பொய் என்பது நிரூபணமாகி உள்ளது.
ஒரு முக்கியமான விஷயத்திலேயே பொய் சொல்பவர் இந்தியாவின் பிரதமராக தகுதி படைத்தவரா
என்று இந்திய மக்கள் யோசிக்க வேண்டும்.
அடுத்தவர்
மனைவியை தன் மனைவி என்று பொய் சொல்லி விசா வாங்கி வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்ற
நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப் பேரவையில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள், காமெரா முன்பு
லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டவர்கள், கையில் மதுக் கோப்பையோடு கடவுளை விட பணம்தான்
முக்கியம் என்று பேட்டி அளித்தவர் ஆகியோர் உள்ள பாஜக கட்சிக்கு இதெல்லாம் பெரிய
விஷயமேயில்லை.
பி.ஜே.பி யில்
இதெல்லாம் சகஜமப்பா.
No comments:
Post a Comment