கொளுத்தும் வெயில்,
வேகமாய் விரையும் வாகனங்கள்,
வாகனங்கள் எழுப்பும் ஓசைகள்,
அருகில் நாய்கள்,
வாய் மறைத்த ஈக்கள்,
வெறுப்புப் பார்வை
வீசிச் செல்லும் பாதசாரிகள்,
விலகிய வேட்டி,
ஓடுகிற சுவாசம் மட்டும்
அது உயிரற்ற சவமில்லை
என உறுதியாய் சொன்னது.
எதுவும் அறியாமல்
உணர்வற்ற மனிதன்
நட்ட நடுச்சாலையில்
இந்தியக் குடிமகனாய்.
என்றோ ஒர் நாள்
எங்கோ காணும் காட்சியல்ல.
அன்றாடம் அங்கங்கே
நாம் பார்ப்பதுதான்.
தன்னை மறந்த மனிதர்களின்
உற்பத்திக் கூடமாய்
வாழ்கிறது டாஸ்மாக்
வேகமாய் விரையும் வாகனங்கள்,
வாகனங்கள் எழுப்பும் ஓசைகள்,
அருகில் நாய்கள்,
வாய் மறைத்த ஈக்கள்,
வெறுப்புப் பார்வை
வீசிச் செல்லும் பாதசாரிகள்,
விலகிய வேட்டி,
ஓடுகிற சுவாசம் மட்டும்
அது உயிரற்ற சவமில்லை
என உறுதியாய் சொன்னது.
எதுவும் அறியாமல்
உணர்வற்ற மனிதன்
நட்ட நடுச்சாலையில்
இந்தியக் குடிமகனாய்.
என்றோ ஒர் நாள்
எங்கோ காணும் காட்சியல்ல.
அன்றாடம் அங்கங்கே
நாம் பார்ப்பதுதான்.
தன்னை மறந்த மனிதர்களின்
உற்பத்திக் கூடமாய்
வாழ்கிறது டாஸ்மாக்
டாஸ்மாக் சிந்தனை அருமை ,நேற்றைய என் சிந்தனை ...http://jokkaali.blogspot.com/2014/02/blog-post_2.html>>'குடி'மகன்களுக்கு கருப்பு தினம்,மற்றவர்களுக்கு நல்ல நாள் !
ReplyDeleteநல்ல சிந்தனை
ReplyDeleteமுட்டாள்கள் தேர்ந்தெடுத்த அரசு, சாராயம் விற்று மொட்டையடிக்கிரது...............புத்திகேற்ற சுகம்.
ReplyDelete