Thursday, February 20, 2014

நாற்பது இடங்களிலும் காங்கிரசிற்கு டெபாசிட் காலி



ஒரு நல்ல வாய்ப்பை காங்கிரஸ் கட்சி இழந்து விட்டது. பெரிதாக எதுவும் செய்திருக்க வேண்டியதில்லை. மௌனமாக இருந்திருந்தாலே கூட போதும். ஆனால் தவளைகள் தங்கள் குரலால்தானே அடையாளம் காட்டிக் கொண்டு அழிகின்றன?

ராஜீவ் வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்வது என்ற முடிவை பாராட்டக் கூட அவசியமில்லை. அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் சட்டசபையில் வெளி நடப்பு, பின்பு அபத்த அறிக்கைகள்  என்று அந்த முடிவிற்கு எதிராக கொந்தளித்து அல்லது கொந்தளித்தது போல நடித்து வெறுப்பை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை இறுதிப் போரின் போது கண்டும் காணாமல் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையை புறக்கணிப்பது போன்ற காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தவறுகளுக்கு பிராயச்சித்தமாகவாவது காங்கிரஸ் கட்சி மௌனம் காத்திருக்கலாம்.

ஆனால் இப்போது தமிழக மக்களிடமிருந்து முழுமையாக அம்பலப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கிறார்கள். இந்த நிலையில் நிச்சயமாக நாற்பது தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு டெபாசிட்டே கிடைக்கப் போவதில்லை.

சரி இதற்கு மேலும் காங்கிரசோடு விஜயகாந்தும் கலைஞரும் கூட்டணி வைத்துக் கொள்ளப் போகிறார்களா என்ன?

3 comments:

  1. Congress said correct. How PM killers are release? Only Internet people, Papers , Magazines talk about it.
    Nobody in TN , general people talk about it.
    If we like Srilanka tamilans how congress get 7- 9 seats in 2009 LS election , in TN Even srilanka war in critical stage and after Prabakarans Death news came?
    Dont foolish TN people. Otherwise, you can fool

    ReplyDelete
  2. Mr Anany, wait till elections and you will be fool. Read my earlier write up where a CBI Officer said Rajiv's Death is justified

    ReplyDelete
  3. mr.anons.. everyone in TN know how our sivagangai koman won the election.. how the voters were bribbed in Virudhunagar etc..

    ReplyDelete