Monday, February 10, 2014

ஆணவத்தால் ஆடும் சிதம்பரமே - நன்றாக ஆடுங்கள்

சிவகங்கைச் சீமான், முதலாளிகளின் எடுபிடி, பன்னாட்டுத் 
தரகர்  ப.சிதம்பரம் இன்று உதிர்த்துள்ள வார்த்தைகளைக்
கேட்கும் போது அளவு கடந்த  கோபம் வருகிறது.

வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தம்
செய்கிறார்கள். சில ஊடகங்கள் சொல்வது போல இது
ஒன்றும் திடீர் வேலை நிறுத்தம் அல்ல. உரிய நோட்டீஸ்
கொடுத்து செய்யப்படும் வேலை நிறுத்தம்.

பாதிப்பு வரும் என்று தெரிந்தும் பிரச்சினையை தீர்க்க
முயலாதது வங்கி நிர்வாகத்தின் குற்றம். அரசின் 
குற்றம்.

அப்படி இருக்கையில் வங்கி வருமானம் அனைத்தையும்
ஊழியர்களுக்கே ஊதியமாய் கொடுக்க முடியாது என
ப.சி சொல்லியிருப்பது ஆணவத்தின் உச்சகட்டம். எந்த
ஒரு தொழிற்சங்கமும் எந்தக்காலத்திலும் அத்தனை
வருமானத்தையும் எங்களுக்கே கொடுங்கள் என்று
கேட்டத்தில்லை, கேட்கப் போவதுமில்லை.

உழைப்பிற்கு ஏற்ற, வருமானத்திற்கு ஏற்ற ஊதியம்
கேட்பதையே இந்த அற்ப மனிதனால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை. அதனால் ஆத்திரத்தில் வார்த்தைகளை
கொட்டுகிறார். ஏதோ அபாண்டமான, அநியாயமான
கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வைப்பது போன்ற
பொய்த் தோற்றத்தை உருவாக்கும் கீழ்த்தரமான உத்தியும்
இதில் அடங்கி இருக்கிறது.

ஐந்தாவது ஊதியக்குழு  சமயத்தில் " அந்தக் குரங்குகளுக்கு
சிறிது பட்டாணிகளை வீசியெறியுங்கள்" என்று திமிரோடு
பேசிய சிதம்பரத்திடம் நல்லதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.

ஆடு கண்ணா ஆடு,
உமது ஆட்டமெல்லாம் தேர்தல்வரைதானே.
உமது  அரசியல் வாழ்வின் முதல் தேர்தல் 1977 ல்
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் தோல்வி.
அரசியல் வாழ்வின் அஸ்தமனமாக இந்த முறை
இந்தியாவில் எங்கே நின்றாலும் படு தோல்வி.
அது வரை ஆடு கண்ணா ஆடு.

25 comments:

 1. Yes, He must be Defeated - Sugumar, Kanchipuram

  ReplyDelete
 2. ஆணவம், சிதம்பரம் என்று படித்தவுடன் நீங்களும் தீட்சிதர்கள் பற்றி எழுதப்போகிறீர்களோ என்று நினைத்தேன்.

  கோபாலன்

  ReplyDelete
 3. That is why Kalaignar said Chinna paiyan Chidambaram.

  ReplyDelete
 4. இரட்டை நாக்குள்ள கலைஞர் இதே சிதம்பரத்தை எப்படி புகழ்ந்துள்ளார் என்பதும் எனக்கு நினைவிருக்கிறது kkk

  ReplyDelete
 5. என்னையா இது .. ஊரை கெடுக்கவும் அளவில்லையா....
  இல்லை தெரியாம தான் கேட்கிறேன்...

  // வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தம்
  செய்கிறார்கள். சில ஊடகங்கள் சொல்வது போல இது
  ஒன்றும் திடீர் வேலை நிறுத்தம் அல்ல. //


  //..உழைப்பிற்கு ஏற்ற, வருமானத்திற்கு ஏற்ற ஊதியம்
  கேட்பதையே இந்த அற்ப மனிதனால் ஏற்றுக் கொள்ள
  முடியவில்லை..//

  எது உழைப்பு எது ஊதியம் ஏது ஊதிய உயர்வு..?
  இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன்...

  இந்தியா முழுமைக்கும் பெட்ரோல் முதல்..
  தீப்பெட்டி வரை அனவருக்கும் ஒரே விலை தானே..

  பூ விற்கு பெண் முதல் வங்கி மேனேஜர் வரை.. அரிசி ஒரே விலை தானே..

  அப்போது வருமானமும் சமமாக தானே இருக்க வேண்டும்..
  நாங்க படிச்சவங்க.. எச்சம் எழுதி பாஸு ஆகி..வேலைக்கு வந்தோம், தகுதி, திறமைக்கு சம்பளம். என்பவருக்கு எனது சவால் அதை பின்னால் சொல்கிறேன்.

  சிறு வியாபாரிகள்.. இரவு 2 மணிக்கு எழுந்து மார்கட் போய் காய்கறி, பொருட்கள் வாங்கி 5 மணிக்கு கடை ஆரம்பித்து.. மதியம் 2 மணி வரை வியாபரம் பார்த்து.. 5 மணி வரை ஓய்வெடுத்து திரும்ப வந்து இரவு 10 மணி வரை கடை வைத்திருக்கின்றனறே.. இதில் 1/10 இருக்குமா உங்கள் பொல்லாத உழைப்பு...

  படிப்பு தகுதி என்று வைத்தாலும் அவை அனைத்தையும் வைத்துகொண்டு தனியார் நிறுவனங்களில் 10 -20 ஆயிரம் சம்பளத்துக்கு 3 சிப்டிலும் வேலைபார்க்கும் பிஈ எஞ்சினியர் எத்துனை பேர், இன்னம் மாஸ்டர் டிகிரி முடித்தோர் எத்துனை பேர்..

  அதில் சக ஊழியர், மேலாளர் , முதலாளிகளின் பாலியல் தொல்லை களுடன் வாழும் பெண்கள் எத்துனை எத்துனை பேர்.. 12 மணிக் நேரத்துக்கு மேல் வேலை செய்பவர். எத்துனை பேர்.

  பிபிஓகளின் /சாப்ட்வேர் இண்டஸ்டிரி வரவால் கொஞ்சம்பேருக்கு அதிக சம்பளம் இருந்தாலும்.. அது என்றைக்கு போகும் என்று தெரியாத வேலை...

  நிர்பந்தமற்ற.. 31 அல்லது 1ம் தேதியே.. தேவைக்கு அதிகமான சம்பளத்துடன் நிரந்தரமாகக்கப்ட்ட பணியில் இருந்த்கொண்டு.... அந்த பணீயையும் உருப்படியாக செய்யாமல்... உங்கள் வங்கி கவுண்டரை நாடி வரும் மக்களிடம் சீட்டில் இருக்கும் 6/7 மணி நேரமும் கனிவுடன் பேசுபவர் எத்தனை பேர் ? மக்களுக்கு வேலை செய்யவேண்டும் என்ற நினப்புடன் வேலை செய்பவர் எத்தனை பேர் ?

  2 நாள் ஸ்டிரைக்காம்... அதுவும் சம்பளம் போதவில்லையாம்...


  இதோ உங்களின் சமபளம்..
  http://www.bankofbaroda.com/rightinformationact_details.asp
  http://www.glassdoor.com/Salary/State-Bank-of-India-Salaries-E8899.htm

  அடிப்படை சம்பளம், டிஏ , ஹெச் ஆர் ஏ, ஏம் ஏ. போன்றவற்றுடன் சேர்த்து சராசரி சம்பளம் 30000 தாண்டுகிறது. 6 மணி நேர வேலக்கு இதுவே அதிகம்..

  இதற்கு மேலும் சம்பளம் கேட்டல் இது அப்படமான சுய நலம் இல்லயா... சம்பளம் பணப்புழக்கம் விலைவாசி எல்லாம் கூடும்போது.. அதனால் அதே பூவிற்கு பெண்ணிற்கு வரும் பாதிப்புக்கு என்ன பதில் சொல்லுவீர் ?

  விலைவாசியை குறைக்க போராடுகின்றோம் என்றால் .. அனைவருக்கும் பயன்படும் விஷ்யம்.. அனைவரும் வாழ்த்துவர்..

  எனக்கு எவ்வளவு வந்தாலும்..என்னுடையது நிறையாது.. நான் என்ன உழைத்தாலும் - உழைக்காவிட்டலும் சம்பளம் கேட்டு போராடுவேன் என்பவர்களை எதில் அடிப்பது?

  பேங்க் மற்றும் அரசு ஊழியர் வேலை நிறுத்ததிற்கு காரணம்.. உடல் முழுக்க உள்ள் திமிர் தான்... நியாயப்படி .. போராடிய அனைவரையும் உடன் பணி நீக்கம் செய்யவேண்டும். அது மட்டுமல்ல இது வரை கொடுத்த சம்பளத்தை திரும்ப கட்ட சொல்லவேண்டும்.

  நான் ஒரு பந்தயம் வைக்கிறேன்.. ஸ்டரைக் பண்ணுவதில் ஈடுபடும் பேங்க் , அரசு ஊழியர்களுக்கு கொஞ்சமேனும் அறிவு நாணயம் சூடு சொரணை இருக்குமானால் ...

  1) தங்கள் வேலையை ராஜினாம செய்துவிட்டு.. தகுதியான சம்பளம் கிடைக்கும் வேலைக்கு தேடிக்கொள்ளட்டும்..

  2) 5 ஆண்டுக்குமேல் பணி புரிந்த எந்த அரசு வங்கி ஊழியரும்.. உண்மயில் தகுதி திறமை இருக்கு ஊதியம் சரியில்லைனு சொன்னால் ...

  ரிசைன் செய்துவிட்டு... இன்றய தகுதி தேர்வு எழுதி.. விட்ட வேலையை திரும்ப பிடித்து காட்டடும் பார்ர்போம்.

  சவாலை ஏற்க தயார.. திமிர் பிடித்தோரே..?

  என்ன செய்தாலும் யாரும் கேட்கமாட்டர்கள் என்ற தைரியம் தான் இந்த கொழுத்த ஆட்டம் போட வைக்கின்றது.

  கண்டிப்பக சிதம்ப்ரம் கண்டிக்கபட வேண்டிவரே திங்கள் வேலைக்கு வராத அனவரும் நேரடி டிஸ்மிஸ். பணிகளை குறைந்த செலவில் அவுட்சோர்ஸ் செய்வோம் என்று கூறாமல்.. உங்களை பேச விடும் சிதம்பரம் ஆள தகுதியற்வரறெ..

  போக்கு வரத்து தொழிலாலர் வேலை நிறுத்ததை, தமிழக அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தை அம்மா கையாண்ட பின் ,,, அப்போது இருந்தததை விட இப்போது பல மடங்கு நிலை மோசமாக இருந்தாலும்.. வேலை நிறுத்ததை நினைத்துபார்க்கவே.. சீட் ஈரமாகும் என்ற நிலையை ஏற்படுத்திய ஜெயாவின் ஆட்சிய சரி போலும்.

  உரிய வகையில் சிவாஜியின் ஆப்பிஸ் ரூமில் கவனிக்காத வரை.. இப்படி பட்ட திமிர் இருக்கவே செய்யும்.

  ReplyDelete
 6. திரு வினோத் குமார், உங்களைப் பார்த்து எனக்கு கோபம் வரவில்லை. சிரிப்பும் வரவில்லை. உண்மையில் அனுதாபப் படுகிறேன். நீங்கள் கண்டிப்பாக கோடீஸ்வரர் கிடையாது. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் என்றே தோன்றுகிறது. மத்தியதர ஊழியர்களை எதிரிகளாக பார்க்கக் கற்றுக் கொடுக்கப்பட்ட, மூளைச்சலவை செய்யப்பட்ட மனிதர்களில் ஒருவர் என்றே தோன்றுகிறது. நம்மையெல்லாம் சுரண்டும் பெரும் பணக்காரர்களுக்கு சலுகை என்ற பெயரில் கோடிக்கணக்கில் அள்ளித் தருவது பற்றி என்றைக்காவது கோபப்பட்டதுண்டா?

  அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்களின் பணி, அதன் பொறுப்புக்கள் பற்றி எதுவும் தெரியாமல் ஏதேதோ புலம்பியுள்ளீர்கள். நீங்கள் சொன்ன சாமானிய மக்களுக்காக போராடுவது நாங்கள். ஒருங்கிணைக்கப்படாத் தொழிலாளர்களுக்காக, கடை வைத்துள்ளவர்களுக்காக கவலைப்பட்டு, வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருப்பது, எங்கள் ஊதியத்தை இழந்து வேலை நிறுத்தம் செய்துள்ளவர்கள் நாங்கள்.

  நீங்கள் இதுவரை ஏதாவது துரும்பையாவது கிள்ளிப் போட்டது உண்டா? போராட்டங்களை நசுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற அற்ப முதலாளிகள் கூட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்?

  ஜனநாயகம் இல்லையென்றால் உங்களையும் ஆளும் வர்க்கம் காலில் போட்டு மிதித்து விடும். உங்களின் உண்மையான எதிரி யார் என்று புரிந்து கொள்ள முயலுங்கள். இல்லையேல் I really pity for your ignorance

  ReplyDelete
 7. சிதம்பரம் எதிர்பார்த்ததே இது போன்ற ஆட்களைத்தானே, அதுதானே ஆளும் வர்க்கத்தின் குள்ள நரி புத்தி. அதற்கு இரையாகும் அப்பாவி ஆடுகளுக்கு தாங்கள் கசாப்புக் கடைக்கு போகும் போது உண்மை புரியாது.

  ReplyDelete
 8. சிவாஜி ஆபீஸ் ரூம் பற்றி சொல்லியுள்ள வினோத் எனக்கு ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும். அந்த படத்தில் நடித்த ரஜனி, இயக்கிய சங்கர், இசையமைத்த ரஹ்மான் ஆகியோர் அதற்கான சம்பளத்தை முழுமையாக வெள்ளையாக வாங்கினார்களா? முறையாக கணக்கு காட்டி வரி கட்டினார்களா? அவங்களை ஆபீஸ் ரூமில அடையுங்க முதல்ல

  ReplyDelete
 9. இல்லை சங்கர், ரஜனி, ரஹ்மான் போன்றவர்களும் பூக்காரர்கள் போலத்தான் ஊதியம் வாங்குகிறார்களா? அது பற்றி என்ன சொல்வார் வினோத்? இல்லை தங்களின் தேவைக்கு அதிகமான ஊதியத்தை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார்களா? இல்லை குறைந்த ஊதியம்தான் வாங்குவார்களா?

  ReplyDelete
 10. மத்தியதர ஊழியர்களின் ஊதியம் பர்றி வெறுப்போடு பேசும் சிலர், ஏதோ அதனால்தான் ஏழை மக்கள் கஷ்டப்படுவதாக கதைப்பார்கள். ஆனால் அப்படி கதைக்கின்ற கூட்டம் ஏழைகளுக்காக எதுவும் கிழித்ததில்லை என்பதுதான் யதார்த்தம், எனது நேரடி அனுபவம்

  ReplyDelete
 11. கணிணித்துறையின் சுரண்டல்கள், பாரபட்சங்கள் இதைப் பர்றியெல்லாம் வாய் திறக்க முடியாமல் அடிமைகளாக
  வாழும் நிலையில் உள்ளவர்கள் பலர் கூட போராட்ட உரிமை
  உள்ளவர்களைப் பார்த்து பொறாமைப்படுவது ஒரு கொடுமை.

  ReplyDelete
 12. முக நூலில் ஒரு தோழர் பகிர்ந்து கொண்டது.
  வினோத் குமார் உள்ளிட்ட போராட்ட எதிரிகளுக்கு சமர்ப்பணம்

  Sundarappa Kamaraj
  வங்கி ஊழியருக்குச்சம்பளம் அதிகம் இருந்தும் போராடுகிறார்கள், நாசமாப்போக என்று சபிக்கிறவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும்.

  உங்களுக்கும் உங்கள் எதிர்வீட்டுக்காறராயிருக்கும் வங்கி ஊழியருக்கும் இடையிலான சாக்கடைச்சண்டைக்கு வன்மம் தீர்க்கிற நோக்கத்தில் ஒரு போராட்டத்தின் மீது சகதியெறியாதீர்கள்.

  ஒரு பத்து நிமிடம் தாமதமானால் மிளகாய் கடித்தமாதிரி உஸ் உஸ் என்று பினாத்திவிட்டு ஆளில்லாத கவுண்டரில் ஒற்றையாளாய் கிடந்து மல்லாடும் வங்கி ஊழியரை ஜென்ம வைரியாய் நினைக்கிற நீங்கள்.அப்படிமல்லுக்கட்டும் ஒற்றையாளாய் உங்களை,உங்கள் பிள்ளைகளை நினத்துப்பார்த்தால் கொஞ்சம் மனிதாபிமானச்சிந்தனை வரும்.

  இது வெறும்சம்பளத்துக்கான போராட்டம் மட்டும் இல்லை.2012 ஆம் ஆண்டே முடிந்திருக்கவேண்டிய சமபளப்பேசுவார்த்தையை இரண்டு வருடம் இழுத்தடித்த மத்திய அரசுக்கெதிரான கோபம்.ஆள் பற்றாக்குறை,அந்நியமுதலீடு,தனியாருக்குதாரைவார்ப்பு,வராக்கடன்கள் மீதான கவனம் ஆகியவற்றுக்கான போராட்டம் இது.பொதுத்துறை வங்கிகளை மெல்ல தனியாருக்கு கூட்டிக்கொடுக்கிற முயற்சிக் கெதிரான சமர்.

  இப்போது குய்யோ முறையோ என்றுகுதிக்கிற நீங்கள் சத்தியம் குழுமத்திற்கு,மல்லய்யாவின் கிங்பிஷருக்கு,எம் ஏ எம் சிதம்பரத்தின் ஸ்பிக் நிறுவனத்துக்கு இன்னும் கணக்கிலடங்கா பெருமுதலைகளுக்கு தனித்தனியே ஐநூறு கோடிக்குமேல் இணாம் வழங்கியபோது எங்குபோனீர்கள்.

  சென்ற ஆண்டு பொதுத்துறைவங்கிகள் சம்பாதித்துக்கொடுத்தது ஒருலட்சத்து இருபத்து ஆறாயிரம் கோடி.எங்கள் மொத்தச்சம்பள உயர்வு வெறும் 3000 கோடி. மீதமுள்ள லாபம் யாவுமிந்தியாவின் உள்கட்டுமாணத்திற்கு உழைத்துக்கொடுப்பது பொத்துறை வங்கிகள்.

  ஆனால் கார்ப்பரேட் தனியார் நிறுவணங்கள் ஒழுங்காக கரண்ட் பில் கூட கட்டுவதில்லை என்பது நூறுகோடி இந்தியர்களுக்குத்தெரியாத தில்லுமுல்லு.

  போராட்டகுணம் வசதிவந்தால் நீர்த்துப்போகும் என்கிற இழிச்சொல்லுக் கெதிரான வெப்பத்தை அடைகாக்கும் முயற்சி. இன்னும் நமுத்துப் போகாத தழல் வீரத்தைக் கைக்கொண்டிருப்பதாகவே இந்தப்போராட் டத்தை பிரகடனம் செய்கிறோம்.

  உழைப்பு,உபரி,சிகாக்கோ,சிங்காரவேலர்,கூட்டுப்பேர உரிமை,இருதரப்பு ஒப்பந்தம்,தொழில்தாவா என்பதெல்லாம் உழைப்பின் வியர்வையில் உருவானவை.அதைப்பறிக்கிற அரசுக்கெதிரான போர்.

  உழைக்கிறவர்களுக்குமட்டும்தான் போராடுகிற குணம் வாய்க்கும். உட்கார்ந்து பொறணிபேசுகிறவர்களுக்கெதிரே எறும்பு ஊர்ந்தாலும் அடிவயிறு அதிரும்.

  ReplyDelete
 13. / ...சிவாஜி ஆபீஸ் ரூம் பற்றி சொல்லியுள்ள வினோத் எனக்கு ஒரு விளக்கம் .... அவங்களை ஆபீஸ் ரூமில அடையுங்க முதல்ல //

  ரஜினியோ.. இல்லை மற்றவர்களோ.. போரட்டம் நடத்தி மக்களுக்கு நேரடியாக இழப்பு எற்படுத்தினார்களா? அதற்காக அவர்கள் செய்வது சரி என்று சொல்லவில்லை.

  நியாயம் தர்மம் என்று பார்த்தால் அனைவருக்கும் இருப்பது ஒரு ஜான் வயிரு, ஒரு உயிர். ஒருவருடைய அபரிமிதமான வருவாய் பெருக்கம்  மற்றவரை பாதிக்கும்.  இதை பற்றியெல்லாம் அரசுக்கு கவலை இல்லை.. அரசு மற்றும் ஆள்வோர் இதை தொடரவே விரும்புகின்றனர்.

  // இல்லை சங்கர், ரஜனி, ரஹ்மான் போன்றவர்களும் பூக்காரர்கள் போலத்தான் ஊதியம் வாங்குகிறார்களா? அது பற்றி என்ன சொல்வார் வினோத்?//
   
  முதலிலேே சொன்னேன்.. அபரிமித வருவாய் அது யாருடையதானாலும் தவறு தான். இதில் கிரிக்கட்டை விட்டு விட்டீர்கள்.. மக்களை மயக்கத்தில் வைத்திருக்க அரசு பயன்படுத்தும் வழிகளில் சினிமா, கிரிக்கட், மது, மீடியா, செக்ஸ்.. என பல வழிகளை கையள்கிறது. யோசிக்கும் திரணற்ற... சுய நலம் பிடித்த ..மக்கள்.. இதை எல்லாம் கண்டும் கானாமல் சுய நலத்திற்கு பயன்படுத்துகின்றனர்.  இன்னம் பிரித்தாளும் சூழ்ச்சியின் பகுதியே சாதி மதங்கள்.

  //மத்தியதர ஊழியர்களின் ஊதியம் பர்றி வெறுப்போடு பேசும் சிலர், ஏதோ அதனால்தான் ஏழை மக்கள் கஷ்டப்படுவதாக கதைப்பார்கள்.//

  அரசு ஊழியர் மத்திய வகுப்பினரா ? அரசு ஊழியர் குடுமத்தில் பெருமாலும் கணவன் மனைவி இருவரும் அரச ஊழியரே. மிக சில அரசு ஊழியர் துணைவ்ரே தனியாரிலோ.. இல்லை வீட்டிலோ இருப்பர் அப்படி பார்த்தால் குடும்ப எண்ணிக்கயில் அரசு ஊழியர் 3 சதமே. 4 என்று வைத்தாலும், இருவருக்கும் 60 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை சம்பளம் வாங்கினால்.. அது எப்படி நடுத்தரம் ஆகும் ??

  http://www.vinavu.com/2012/05/24/poverty-lines/

  நினைவில் கொள்க. ஒருவர் 32 ரூபாய் அதாவது 4 பேர் குடுமத்துக்கு தினம் 128 ரூபாய் மாதம் 4000 ரூபாய். என்று ஏழைகளை கண்டறிய கணக்கிடு வைத்திருக்கிறது அரசு.. குடும்பத்துக்கு 1லட்சம் சம்பாதிப்பவர் நடுத்தரமா ?  இதையும் வாங்கிகொண்டு.. இன்னம் கொட்டு என்றால் .. அப்படி கொடுக்கப்படும் பணம் பண வீக்கத்தை விலை வாசி உயர்வை தூண்டாத ? சிரமப்படுவேரை இன்னம் சிரமபடுத்தாதா ? இது தான் அளவுக்கு மேல் தின்று புளி யேப்பம் எடுக்கும் அரசு ஊழியர் பெரும்பான்மை பொது மக்களுக்கு செய்யும் உதவியா ?


  // கணிணித்துறையின் சுரண்டல்கள்,.. போராட்ட உரிமை உள்ளவர்களைப் பார்த்து பொறாமைப்படுவது ஒரு கொடுமை.//

  பரவாயில்லை உங்களுக்கு காமெடி நல்லா வருது.

  நீஙக்ள் செய்வது போரட்டமா? ???? அப்படியானால் இந்தியாவின் முதல் தொழிற்சங்க போராட்டம் சென்னை பின்னி மில்ஸ்  போராட்டதை என்ன சொல்வது... மும்பையில் பஜாஜ் டாட்ட போன்ற முதலாளிகளுக்கு எதிராக நடந்த கடும் போராத்தை.. அதுவும் வேலை போகும் என்று தெரிந்தும், பலர் வேலை இழந்தும் அனைவரும் கூட்டு சேர்னந்து போரடிய போது.. போராட்டத்தை ஒடுக்கவே புதிய அரசியல் அமைப்பான சிவ சேனா , பால் தாக்றெ கட்சி உருவாகி போராடுவோரை யாரும் கண்டுபிடிக்க முடியாத படி காலி செய்தது முதல் வீட்டு வந்து பெண்களை அவமதித்து மிரட்டி.. போராட்டதை உடைக்கபார்த்தார்களே.. அதை என்ன சொல்வது..??? ]

   உங்கள் போராட்ட நாளில்  சிட்டில் இல்லை என்றால் அந்த சீட்டுக்கு அடுத்த நாள் வேறு ஆள் தான் என்றால்.. போராட்ட நாளில் வயிற்றுபோக்கு இருந்தாலும் வயிற்றை பிடித்தபடி, சிக் லீவ் கூட எடுக்காமல், வேலைக்கு வருவீர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும் பாஸ்.

  இன்னம் சரியாக் சொன்னால் இத்தகய தேவயற்றா சம்பள போராடங்களை அரசு வரவேற்கும் ஏனேனில்.. அரசு மக்களை அடக்கிஅள அவர்கள் பிளவுபட்டிருக்க வேண்டும். அரசு ஊழியரும் மக்களே என்றாலும் கேட்டலும் கேட்காவிட்டடலும் சலுகை கொடுத்து அவர்களை பொது மக்களில் இருந்து பிரித்து வைப்பது அரசு. அரசு ஊழியர் - மக்கள் ஒற்றுமையாக விலை வாசிக்காக  போராடினால் அரசுக்கு பணீவதை தவிர வேறு வழியிலை

   மக்கள் தொகையில் அரசு ஊழியர் 6 சதம் பேர். உயர் வருவாய் பிரிவினர் 6 சதம் போக நடுத்தர கீழ் நடுத்தர மக்களே 90 சதம். அவர்கள் ஒன்றுபடாமல் இருக்கவே சினிமா, கிரிக்கட் மயக்க மருந்துகள்.

  போன ஊதிய குழுவில் குறைந்தது 30000 ஆயிரம் சம்பளம் வாங்கிகொண்டு. இன்னம் கொடு இன்னம் கொடு என்று வேலை நிறுத்தி இடைஞ்சல் செய்தால் .. 5 லட்சம் செலவு செய்த் பிஈ படித்துவிட்டு, 6000 சம்பளத்துக்கு 12 மணி வேலை செய்பவர்.... அமாம் ஆமாம் அரசு ஊழ்யர் கோரிகை சரி என்பாரா ? 

  சம்பளம் ஒன்றுமில்லாத மேட்டரு, வங்கிதுறையில் எடுத்து கொண்டால், முழுமையாக ரிசர்வ் வங்கி உட்பட அனைத்தும் அமரிக்க மாடலில் தனியார் மயம் ஆகும். அப்போது இன்றய ஊழியர் அதை எதிர்த்து போராடினால்.. பொது மக்கள் பங்களிப்புடனேயே வெல்ல இயலும்.

  ReplyDelete

 14. பொது மக்கள் போராட்த்துக்கு ஆதரவு கொடுபரா? வங்கி வேலயிலேயே அலுவலர் பற்றீ பொது மக்களிடம் பொருத்த கெட்ட பெயர் உண்டு, இந்த போராடஙக்ளை பார்த்தால்..பொது மக்களின் கருத்தை நான் சொல்லுகிறேன். மற்றாவர் சொல்லவில்லை அவ்வளவே. கண்டிப்பாக பெரும்பானமை பொதுமக்கள் ஆதரவு கிடைக்காது. இப்போது உங்களுக்கு அது பற்றி பிரச்சனை இல்லை. சம்பளம் பிடிப்போம் போன்ற காமேடி எச்சரிக்கைகளை அரசு தருகின்றது.'

  ஆனால் உண்மையில் தனியார் வசம் வந்து, அவர்கள் செய்யும் முதல் வேலையே பழைய ஊழியர்களை வீட்டு அனுப்புவது தான். அனுப்பிவிட்டு, 6000 முதல் 9000 வரை கல்லுரி முடித்த பெண்களை வேலைக்கு சேர்த்து டிரெனிங்கேயே வேலை வாங்கி விடுவர். ஐசிஐசிஐ வங்கி மதுரா வங்கியை வாங்கியதை நினைவு படுத்தவும். அப்போது தான் தெரியும் உண்மையான போரட்டம் என்றால் என்னவேன்று.

  இதே ஐசிஐசிஐ வங்கி கட்டணம் அதிகம் வசூலிக்கின்றது. தேசியமய வங்கிகளில் கட்டணம் அதிகம் இல்லை. சரி ஆனால் சேவை ? ஒரு சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும் என்று போன் செய்தால், பிரதிநிதியை வாடிக்கையாளர் இடத்துக்கே அனுப்பி, வாடிக்கையாளர் பாரத்தில் கையெழுத்திடுவதை தவிர எதுவு செய்ய வேண்டாம், உடனடி வெல்கம் கிட் கொடுக்கப்படும், இல்லயேல் பெயருடன் ஏடிம் கார்டு செக்புக் 4 நாளில் வீட்டுக்கு வரும்.

  மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. உங்கள் சேவை இப்படி இருக்கா? கனக்குதுவங்க அப்ளிகேசனை பேங்க் போய் கேட்டலும் இங்க இல்லை அங்க இல்லை அடுத்த வாரம் வான்னு இழுத்ததடிப்பதில் ஆரம்பித்து.. ஒவ்வொன்றில்லும் பேங்க் ஆப்பிசர்கள் செய்யும் சேட்டைகளல் தங்களை தாங்களே மக்களிடம் இருந்து விலக்கி கொள்கிறார்கள். இது யாருடைய தவறு ?

  இதெல்லாம் சரி .. இன்னம் 10 கேள்வி கேட்டலும் பதில் சொல்ல நான் தயார். பொது மக்களின் கருத்து இன்னது என்று போரட்ட காரர்களிடம் நீஙக்ள் சொல்லுங்கள்...

  நான் கேட்ட கேள்விக்கும் வைத்த சவாலுக்கும் பதிலே இல்லையே..அது ஏன். போராடும் வீரர்கள் செய்து காட்டலமே .. நீங்கள் தான் பாவம் ஏன் குறைந்த சம்பளத்தில் குடும்பத்துக்கு 1 லட்சம் மட்டும் வைத்துகொன்டு கஷ்டப்படவேண்டும். பேசாமல் ரிசைன் செய்து உங்கள் திறமைகளை கொண்டு ஏதவது செய்து.. பல கோடி வருமானத்தை அரசுக்கு காட்டி பார் என் திறமையை.. என் திறமைகு உன் சம்பளம் பிச்சை காசு என்று நிறுபிக்கலாமே... சவாலை ஏற்று செயவது ரொம்ப தூரத்தி இருப்பது அதை படித்துபதில் கூட போடவில்லையே. இந்த கேள்வி புலம்பலா ?.

  ஆதிமுக ஆட்சியில் மின்சாரம் பற்றாகுறை என்றால் அதற்கு பதில் சொல்லாமல், திமுகா அட்சியில் இப்படி என்று தான் சொல்வார்கள். ஏனெனில் தங்களின் ஆட்சி உருப்படாத ஒன்று என்பது அவர்களூக்கும் தெரியும்.

  அதேபோல்
  1) சவலை சந்திக்க தயாரா?
  2) ஊழியர் வேலை குறித்த அவப்பெயருக்கு என்ன பதில் ?

  என்பது தான் முதன்மையான கேள்வி. அதை கண்டு கொள்ளாமல் , ஏழைக்கு இப்ப்டி பேசுவர் உதவுவார..அப்படி பேசுபவர் உதவுவதில்லை.

  // திரு வினோத் குமார், உங்களைப் பார்த்து எனக்கு கோபம் வரவில்லை....கோபப்பட்டதுண்டா? //

  கோபப்படுவதால் ஒரு பயனும் இல்லை. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியியை மக்களுக்கு புரியவைப்பதே நான் செய்யகூடியது. ஆளும் வர்க்கத்தின் சுழ்ச்சியையும் மக்களின் சுய நலத்தையும் பற்றி என்னவிள் பரப்புவதே நான் செய்ய கூடியது பார்க்க..
  http://kannimaralibrary.co.in/elamebook/
  http://www.tagavalthalam.com/2014/02/gas-pipeline.html


  // ஆனால் கார்ப்பரேட் தனியார் நிறுவணங்கள் ஒழுங்காக கரண்ட் பில் கூட கட்டுவதில்லை என்பது நூறுகோடி இந்தியர்களுக்குத்தெரியாத தில்லுமுல்லு.//

  // இப்போது குய்யோ முறையோ என்றுகுதிக்கிற நீங்கள் சத்தியம் குழுமத்திற்கு,மல்லய்யாவின் கிங்பிஷருக்கு,எம் ஏ எம் சிதம்பரத்தின் ஸ்பிக் நிறுவனத்துக்கு இன்னும் கணக்கிலடங்கா பெருமுதலைகளுக்கு தனித்தனியே ஐநூறு கோடிக்குமேல் இணாம் வழங்கியபோது எங்குபோனீர்கள்.//

  10 வருடம் முன் நடந்தது, என் மாமா ஒரு ஆடிட்டர், இன்கம் டேக்ஸ் பிரக்டிஸ் செய்கிறார் சில முன்னாள் மாநில மத்திய மாண்பு மிகுக்கள் அவரின் வாடிக்கையாளர்கள். அவர்களில் ஒருவருக்கு தொழில் தொடங்க என்று இந்தியாவின் பெரிய வங்கியில் சில கோடிகள் லோன் வாங்கினார், அதற்கு ஈடாக அவர் கொடுத்தது சில ஆயிரம் மதிப்புள்ள 20 ஏக்கர் உப்பு பூத்த நிலம்.

  வங்கி மேலாளர் சின்சியராக வருடம் ஒருமுறை வந்து சில ஆயிரம் வட்டி வசுலித்தார், பின் வராக்கடன் என்று அந்த இடத்தை கைப்பற்றி கணக்கு முடித்துவிட்டர்.

  வங்கிக்குள் யாருக்கு கடன் கொடுப்போம் யாருக்கு கொடுக்கமாட்டோம் என்று முடிவு செய்வதும் வாராக்கடனை வசூல் செய்வது யாருடைய பணீ ? வங்கி உழியராக நீங்கள் செய்யவேண்டியது. உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் 1 பைசா கூட வெளியேற முடியாது.
  .

  ReplyDelete
 15. /


  6 மாதம் முன், நம் நாட்டில் சாலை சரியில்லை, மக்களுக்கு சத்துணவு இல்லை, இல்லை என்று ஒருவர் கூறினார்.. யார் தெரியுமா..
  நம் சிதம்பரம் தான். 10 வருடம் நாட்டை அண்டு கொண்டு. இப்போது இல்லை இல்லை என்றால் இவரி அடுத்தவர் கேட்க வேண்டியதை இவர் கேட்டல் என்ன அர்த்தம் . இதயே தான் நீங்களூ செய்கிறீர்கல்.

  ஐநூறு கோடி இல்லை.. முதலில் வாங்கிய கடன் மட்டும் ஏழாயிரம் கோடி, அடுத்ததாக கம்பனியை காப்பற்ற பாரத்த்தின் பெரிய வங்கியின் பங்களிப்பு 1500 கோடி.
  http://businesstoday.intoday.in/story/kingfisher-airlines-get-rs-1500-crore-sbi-lifeline/1/22611.html
  http://www.vinavu.com/2011/11/17/kingfisher/

  மொத்தம் மல்லையாவிடம் இருக்கும் கடன் தொகை சுமார்  12000. அதில் வங்கி பங்கு வாங்கி அல்வா வாங்கியது தான் 500 கோடி.   கோடிகக்கு மேல் இருக்கும்.ஏசு கிறிஸ்து , மற்றும் கல்கி அவதாரம் வரும் நாளில் அந்த பணம் திரும்பி விடும் கவலை வேன்டாம். 2003ல் அரம்பித்து அல்வா கொடுக்கும் மல்லையாவுக்கு நட்டம் என்றவுடன் 1500 கோடியுடன் காப்பற ஓடும் ஸ்டேட் பாங்க்..

  இப்படி வாரி வழங்கும் வள்ளல் ஆன வங்கிகள்.. கல்வி கல்வி கடன்  கட்டவில்லை  என்றால் கல்வி கடன் கட்டாத மாணவர்க்ளிடம் வசூலிக்க ..புகைபடம் அட்ரஸ் எல்லாம் வெளியிடுகின்றதே.

  http://tamil.oneindia.in/news/2013/08/06/tamilnadu-karunanidhi-slams-sbi-shaming-education-loan-defaulters-180621.html
  http://www.maalaimalar.com/2014/02/01153348/Dont-show-photos-of-the-studen.html

  கல்வி கடன் கட்டாத மாணவர்களால் ஏற்படும் இழப்புக்கு ..கல்வி கடன் பற்றிய நிபந்தனை.
  http://www.badriseshadri.in/2009/06/blog-post_4819.html

  இப்படி நிபந்தனைகளுடன் கடன் கொடுக்கலாம் இல்லயா? 1 ரூபாய் கூட சந்தேக கடன் என்று நினைத்தால் தரமாட்டோம் என்றால் கிங்க்பிசர் லோனுக்கு என்ன பேயர் ?

  இம்புட்டு ஸ்டிக்டு ஆப்பிசர்கள்.. மல்லையாவுக்கு எதிராக சுண்டு விரலை ஆட்டுவரா? இந்த கடன் யார் கொடுத்தது ? வங்கி ஊழியர் ஒத்துழைப்பு இல்லாமல் கடன் தொகை போகுமா? .இல்லை இரவு 12 மணிக்க்கு மேல் சுவர் ஏறி குதித்து மல்லையா எடுத்து கொண்டார?

  தனி நபர் கடன் கேட்டல் விரோதியை போல விரட்டும் வங்கிகளால் தான்,  பல நடுத்தர / ஏழை மக்கள் கந்து வட்டி காரர்களிடம் சிக்குவதும் தற்கொலை செய்வதும். அதுவும் அவர்கள் தரும் அதிக பட்ச கடனே 1 லட்சம் தான்.  தற்கொலை செய்தோர் 20 ஆயிரம் கடன் வாங்கி 40 ஆயிரம் வட்டி கட்டிய கதை தெரியும் தானே?

  நானே 80 ஆயிரம் தனி நபரிடம் மாதம் 100கு 5ரூபாய் வட்டியில் கடன் வாங்கியுள்ளேன். வட்டி மட்டும் மாதம் 4000 கட்டிகொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் தனி நபர் கடனுக்கான அனைத்து பேப்பர்களும் இருந்தும் கடன் தர வங்கிகள் தயாரில்லை.

  இதுபோக  பி என் ஆர் ஒய் என்ற ஒன்று .. அனைத்து வங்கிகளும் கண்டிப்பாக குறைந்த பட்ச பேருக்கு பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடன் கொடுக்க வேண்டூம் என்ற விதியை மதித்து, வங்கி மேலாளர்கள் அவர் தம் மச்சினிகளூக்கும், கொழுந்தியாளுக்கும் தவறாமல் கடன் வழங்குவதாக கேள்விப்பட்டேனே.. உண்மையா என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்.

  பொது மக்களின் பணத்தை கையில்வைத்திருக்கும் வங்கிகள் முறையாக  பொது மக்களுக்கு சிறு கடன் வழங்கினால், மைக்ரோ பைனான்ஸ், சுய உதவி குழு பெயரில் கொள்ளை நடக்க வாய்ய்பே இல்லையே.. இது ஏன் என்றும் நீஙக்ள் சொல்லுங்களேன். 

  // போராட்டகுணம் வசதிவந்தால் நீர்த்துப்போகும் என்கிற இழிச்சொல்லுக் கெதிரான வெப்பத்தை அடைகாக்கும் முயற்சி.//
  :))) அப்படியா?


  //உழைக்கிறவர்களுக்குமட்டும்தான் போராடுகிற குணம் வாய்க்கும். உட்கார்ந்து பொறணிபேசுகிறவர்களுக்கெதிரே எறும்பு ஊர்ந்தாலும் அடிவயிறு அதிரும்.//

  90 சதம் மக்களும் உழைபதில்லையா.. அனைவரும் பொறணி தான் பேசுகின்றனரா ???


  திரும்பவும் சொல்கிறேன், சம்பளத்தை உயர்விற்கான போராட்டம் தவிர்த்து விலைவாசியை குறைக்கோறுவது தான் உண்மையான தேவை. பொது மக்களை தவிர்த்து எங்களுக்கு சம்பளம் அதிகரி என்ற உங்களின் போரட்டம்  சம்பள உயர்வு வாங்கினாலும் தோல்வியே.

  ReplyDelete
 16. கொஞ்சம் பெரிய பதிவாக இருப்பதால் தனி பதிவாக போட்டுள்ளேன்.

  சூடி இதோ.. http://kannimaralibrary.co.in/bank-govtstaffkillspublic/

  உங்கள் போரட்ட குழு உறுப்பினர்களையும் படிக்க சொல்லுங்கள்.. அவர்களுக்கும் பொது மக்களின் கருத்துகல் போய் சேரட்டும்.

  ReplyDelete
 17. திரு வினோத் குமார் பாவம் ரொம்ப கன்ப்யூஸ் ஆகியிருக்கீங்கனு மட்டும் தெரியுது. உங்களுக்கு உண்மையிலெயே யார் மீது கோபம்?
  யார் உங்களது எதிரி என்று புரியாமல் இருக்கிறீர்கள், அல்லது புரியாதது போல நடிக்கிறீர்கள்.

  ReplyDelete
 18. it will be curtains for congress this time in parliamentary elections sivagangai
  chinna payyan will be defeated wherever he stands this time. his bungle in
  every agenda be it telenganga partition, his anti labour policies will be morethan
  enough for the people to vote him out of politics this time. his double speak
  along with kalaignar in srilankan tamil issue will not be forgotten by the tamils in
  the world over and mr modi is certain to become PM this time and he will not
  leave these politicians who cheated the public in 2g scam.

  ReplyDelete
 19. திரு ராமன், திரு வினோத் குமார்,

  தங்கள் கறுத்துக்களை மிகத் தரமான முறையில் வெளிப்படையாக வெளியிட்டதை நினைத்து தமிழனாகிய நான் பெருமைப் படுகிறேன்.

  மற்ற நண்பர்களும் இதே போன்ற எண்ணத்தைக் கடைபிடிப்பார்கள் என்று நம்புவோம்.

  ந்ன்றி,

  கோபாலன்

  ReplyDelete
 20. தனிப்பட்ட யார் மீதும்.. நீங்கள் உட்பட கோபிபதால் பயன் இல்லை.. நீங்கள் என்ன்னை போரட்ட எதிரி என்று சொன்னலும் தான்.

  ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சுய நலம் பாரபட்சம் இன்றி ஆய்வு செய்யுங்கள்...

  பொது மக்களிடம் இருந்து பிரிக்கும் போராட்டங்கள் தேவையா ?

  உண்மையில் ஊதிய உயர்வு தேவையா? குறைந்தது 30000 ஊதியம் வாங்கும் உங்களுக்கே ஊதிய போதவில்லை , எனவே யார் எக்கேடு கெட்டாலும் சரி நாங்கள் போராடொவேம் என்றால், உங்கள்க்கு கீழான மக்கள்க்கு உஙக்ள் பதில் என்ன ? உண்மை தேவை ஊதிய உயர்வா இல்லை விலைவாசி குறைப்பு தேவையா?

  வங்கி பலகோடி வரக்கடன் இருந்தால் அது யாருடைய தவறால் , வங்கி யாருக்கு கடன் கொடுப்பது என்பதை நான் முடிவு செய்ய முடியுமா? முடியாதென்றால் அதை முடிவு செய்யும் இடத்தில் நீங்கள் இருந்து கொண்டு, மல்லையா பல கோடி பாக்கி வைத்திருப்பதற்கு என்ன செய்தாய் என்று என்னிடம் கேட்பதில் என்ன பயன் ?

  உண்மையில் நியாயமான வட்டியில் கடன் தேவைப்படும் கோடிக்கணக்கன , நேர்மையாக திருப்பி செலுத்தும் மக்களுக்கு கடன் தரவும் மல்லையா போன்ற கொள்ளையாகளை வங்கிக்கு வரமல் விரட்டவும் ஏன்ன செய்யலம் என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

  உண்மயில் ஊழியர்கள் வாங்கும் சம்பள்த்துக்கு வேலை செய்கிறார்களா?

  ( நேற்றைய அனுபவம், ஐஓபி வங்கியில் சேமிப்பு கணக்கு பாஸ் புக்கை கொடுத்து, அதில் என்ன பேலன்சு என்று கேட்க, , கவுண்டரில் இருப்பவர் 10 நிமிடம் அங்கே வந்ததயே கவனிக்காமல் அப்புரம் அசிர்த்தையாக என்னா... என்று கேட்கும்போது சொன்னால் அங்கே கேள்..என்று பதில் சொல்ல இன்னொரு 5 நிமிசம்..3 கவுண்டர்களில் போனால் பத்து பத்து நிமிடம் நின்று,, கணக்கை பற்றி தகவல் வாங்க வேண்டி இருக்கு

  உஙக்ளுக்கு கவுண்டரில் உட்கார்ந்து பொழுது போக்குவது தான் வேலை, ஆனால் வேறு வேலையில் இருந்து கொண்டு 1 மணி நேர பர்மிசனில் வங்கிக்கு வருபவர்க்கு எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவும், நீங்களே வேறு அலுவலகத்துக்கு வேலைக்கு சென்றால் .. உங்களை 10 நிமிசம் நிற்க வைத்து அப்புரம் அந்த கவுண்டருக்கு போ என்று சொன்னால் .. வெரி குட் ஒர்க் டென்சலின் இப்படி தான் சொல்வாங்க சரி சரி என்பீர்களா?

  பணி பளு டென்சன் என்றேல்லாம் பீல விட வேண்டம்.. முடியலைன்ன ரினைன் பண்ண வேண்டியது தானே.. யார் டென்சனை கட்டியழத்தான் வேண்டும் என்பது ? முடியவில்லை என்று ரிசைன் செய்தால் தகுதியான வேறு ஆள் அதை செய்யபோகின்றனர்

  அதே வேலைக்கு கூடுதல் ஆள் சேர்த்தும் பணி பளுவை குறைக்கலாம் உண்மையில் வேலை கூடும்போது...

  தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் வைக்கோல் போரை காத்த நாய் போல இருப்பது தான் சேவையா? )

  உங்கள் போரட்ட குழுவில் இதை முடிவு செய்யுங்கள்.

  // திரு வினோத் குமார் பாவம் ..புரியாதது போல நடிக்கிறீர்கள். //
  இந்த நாட்டில் வாழ்ந்த்கொண்டு கன்பியுஸ் ஆகமல் இருந்தால் தான் ஆச்சரிய படவேண்டும்.

  புரியாதமாதிரி நடிப்பதால் எனக்கு கிடைப்பதேன்ன? உங்கள் பதிவையும் பதிலயும் விட என்பதில் நீளமானது.. வேண்டுமானல் ஒப்பிட்டு பார்க்கவும். நேற்று நான் போட்ட பதிலில் 11 ஆயிரம் தமிழ் எழுத்துரு இருப்பதால் கூகுளில் அதை 3 பகுதியாக வெளியிட வேண்டி இருந்தது.

  இப்போதும் நான் கன்பியூஸ் ஆகிவிட்டேன் எதிரி யார் என்று எனக்கு புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய ? இதோ இவர் தான் எதிரி அந்த முதலாளி தான் எதிரி, இந்த பண்னையார் தான் வில்லன். அவன் செத்தால் கதை சுபம் என்பது சினிமாவில் தான். அதோ அந்த பன்னாடை கம்பெனி முதலாளி, இல்லை இன்த விஜய் கொள்ளையா தான் எதிரி என்றால்.. அவர்களை இன்றைக்கு இப்போது நாம் என்ன செய்ய முடியும் ?

  நிஜ வாழ்வில் எதிரி நாம் தாம் மாற வேண்டியதும் நாம் தான். அது மட்டுமல்ல நாம் மாற வெண்டும் என்பதை மற்றவர்களுக்க்கு பரப்பவும் வேண்டும். இந்தியா முழுவதும் பரவி இருந்த உடன் கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க போரட்டதை ஆரம்பித்தவர் ராஜராம் மோகன் ராய் தான். இன்று நாடு முழுவதுமே மாறவில்லையா ? இதே போல் மாற்றத்தை கொண்டுவாருங்கள்.

  நேரம் , உழைப்பு கொடுத்து பதில் எழுத காரணம்.. இது உங்களூக்கும் உங்களுடன் போரடுபவர்கள்க்கும் சேரவேண்டும் என்பதால் மட்டுமே...

  பொது மக்களின் வங்கி மீதான ஏன் அரசு ஊழியர் மீதான கருத்தும் இது தான். இது புரிந்தும் புரியாது போலவும் நீஙக்ள் இருக்கலாம். ஆனால் உஙக்ள் போராட்டத்துக்கு நிச்சயம் பொது மக்கள் ஆதரவு கிடைக்காது.

  ReplyDelete
 21. If the organized workers do not ask for wage revision, though it is genuine and deserving, Will the Government divert that amount to Poor? That also will go to Ambanis & Birlas and Mallayyas. What do you mean by service? A chair & water? Safety for the money is the basic service which you will get only in nationalized banks

  - Sugumar, Kanchipuram.

  ReplyDelete
 22. @sukumar kanchipuram
  பேங்கில் இருக்கும் பணம், அரசு கருவூலத்தில் இருக்கும் பணம் , அரசு வங்கி ஊழியர் ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி வெளியே போகும் ?...

  அடுத்த தெருவில் பால் வியாபரம் செய்து வருபவர் தேர்தலில் எம்பி /எம்மெஏ மந்திரி ஆகலாம்.. ஆனால் அவர்களுக்கு அரச நடைமுறை எப்படி தெரியும் ? இதில் இன்னதை செய்தால் உங்களூக்கு இவ்வளவு எனக்கு இவ்வளவு என்று சொல்லிக்கொப்பது யார்.. அரசு ஊழியரா மக்களா ?

  அடி முதல் முடி வரை, ஊழலை சொல்லி கொடுப்பவரே அரசு ஊழியரே. பணம் இன்றைக்கு போனால் நாளை சம்பாதிக்கலாம்.. இயற்கை வளங்கள்.. ஒரு முறை ஆற்றங்கறைக்கு போய் பாருங்கள்.. பல ஆயிரம் ஆண்டுகள் ஆற்றில் படிந்த மணலை 24 மணி நேரமும் ராட்சச லாரிகளில் சுரண்டுவதை..

  கடவுளின் தாயகம் என்று சொல்லும் ஆறுகள் நிறைன்த கேரளாவுக்கு காவிரி மணல் கடத்தபடுகின்றதே.. இன்னம் இது அரசு ஊழியர் சம்பந்தம் இல்லை என்றான் நேற்று பிறந்த குழந்தை நம்புமா ? ஒரு ஜப்தி நடவடிக்கயால் பணம் திரும்ப கிடைக்கும் வளங்கள்..? மீத்தேன் வாயுக்காக பல ஆயிரம் ஆண்டு நெற் கழஞ்சியம் தஞ்சையை சுரண்ட திட்டமிடும் நிறுமத்திற்கு அரசு ஊழியர் துணை செய்கின்றனரா இல்லையா..

  இவ்வளாவு ஏன்... கண் முன் போக்கு காட்டும் மல்லையாவை..விமானிகள் விமான ஊழியர்கள் சம்பளம் தரும்படி நிர்பந்திக்க விடாமல் காப்பது போலிசும் நீதி துறையும் அரசு ஊழியர் இல்லயா?

  ஊழலின் மாபெறும் தூண் பன்னட்டு நிறுவனங்கள் என்றால் அதற்கு பல வகையிலும் உறுதுணையாகிக்காப்பவர் நிர்வாக வர்ககமும் அரசு ஊழியருமே.. திருந்த வேண்டியதுமே..

  வங்கி பணம் 1 பைசாவானாலும் அரச வங்கி ஊழியருக்கு தெரியாமல் வெளியேர முடியுமா? 500 ரூபாய் அனாதை ஓய்வூதியம் பெறும் கிழவியிடம் உயிருடன் இருப்பதற்கான சான்று நீ தான் இன்னார் என்பதற்கான சான்று , இருப்பிட சான்று , என்று கேட்கும் நீங்கள் தான் .. மல்லையாக்களின் பார்ட்டிகள் கலந்து கொண்டு தொடங்கப்படதில் இருந்த் நட்டம் காட்டும் நிறுமத்திற்கு 7500 கோடி கடனில் இருக்கும் நிறுமத்திற்கு 1500 கோடி எப்படி கொடுத்தீர்கள் .

  சம்பள உயர்வில்லாமல் இருந்தால் அந்த பணம் அம்பானிக்கு போகும் என்றால்.. அதையும் நீங்கள் தான் கொடுக்க வேண்டும். ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் .." ஜாக்கிரதை" - நான் என்னை சொன்னேன்.. என்று வடிவேல் பாணியில் நீங்களே உங்களுக்கு சொல்லி கொள்ள் வேண்டியது தான். ?

  சேவை என்று நான் சொன்னது" சேர், வாட்ட்ர் மட்டும் இல்லை...

  //கவுண்டரில் இருப்பவர் 10 நிமிடம் அங்கே வந்ததயே கவனிக்காமல் அப்புரம் அசிர்த்தையாக என்னா... என்று கேட்கும்போது சொன்னால் அங்கே கேள்..என்று பதில் சொல்ல இன்னொரு 5 நிமிசம்..3 கவுண்டர்களில் போனால் பத்து பத்து நிமிடம் நின்று,, கணக்கை பற்றி தகவல் வாங்க வேண்டி இருக்கு //

  இந்த உங்கள் மன நிலையயை சொன்னேன்.... இதை சரி செய்யுங்கள்.. தண்ணிர் சேர் எது செய்தாலும் மக்களுக்கு கொடுத்தாலும் அது மக்களின் பணமே..

  இன்றைக்கு சேர், தண்ணிர் என்று கொடுத்தால்.. வங்கி கிளை நிர்வாக செலவு ஆண்டுக்கு 2 லட்சம் கூடும் , இந்தியா முழுமைக்கு சில கோடிகள், வங்கியின் லாபத்தில் இது கழிக்கப்படும்.

  இதனால் டெப்பாசிட்டுக்கு வட்டி விகிதம் குறையும், சேர், தண்ணிராக மக்களுக்கு வருவது வட்டியாக வர வேண்டியதே..

  இதில் உங்களுக்கு மற்று கருத்து இருக்கா?


  ஆனால் உங்களின் மன நிலை.. அதற்கு பொது மக்கள் என்ன செய்ய முடியும்.? நீங்களே தான் மாற வேண்டும்.. பிரச்சனையை திசை திருப்ப அடுத்தவர் மேல் பழி சொல்வது சுலபம், அடுத்தவரை நீங்கள் மாற்ற முடியாது.

  மக்கள் எனக்கென்ன என்ற மன நிலையில் மாறி என்னை போல் உங்களை பார்க்கும் இடத்தில் எல்லம் 100 பேர் .. ஏன் மல்லையாவுக்கு கொடுத்த கடனை வசூல் செய்யவில்லை என்று கேட்டல்.. அடுத்த கடனை கொள்ளையா எந்த வங்கியிலும் வாங்க முடியாது.

  நீங்களே இந்த கேள்வியை உஙக்ள் மேலிடத்திடம் கேட்க ஆரம்பித்தால் .. மக்கள் உங்களை கேள்வி கேட்க வேண்டி இராது.. இப்படி பளாகில் வந்து புலமப வேண்டியும் இராது.

  ReplyDelete
 23. வினோத் குமார், உங்கள் வாதங்களில் அரசு ஊழியர்கள் மீது அவசியமற்ற வன்மம் ஒளிந்துள்ளது. எல்லாவற்றுக்கும்
  அரசு ஊழியரை காரணமாக்குவது உங்களுக்கே அபத்தமாக
  இல்லை? காமாலைக் கண்ணோடு இனி இங்கே பின்னூட்டம் வேண்டாம்.

  ReplyDelete
 24. ஐயா ஆப்பீசர் ரமணி அவர்களே...

  எனக்கு காமலை கண்ணாகவே இருக்கடும்.. நான் பேசுவது வன்மமாகவே இருக்கட்டும்..

  ஆனால் உங்களிடம் இந்த கேள்விகட்கு பதில் உண்டா? அனைத்து கேள்விகட்கு பதில் சொல்லிவிட்டு நான் விதண்டாவாதம் பேசினால் இங்கே பேச வேண்டாம் என்பது சரி... நான் பெஞ்சு கிளர்க்காக இருந்தாலும் எனக்கு பல படி உயர்ந்த மத்திய அமைச்சரை கூட விமர்சிப்பேன்..

  என்னை . அல்லது சக ஊழியரை யாரும் கேள்வி கேட்க கூடாது
  கேள்விக்கு பதிலளிக்க மாட்டோம். என்பது தான் ஜனநாயகமா?

  நினைவிருக்கட்டும் நீங்கள் அனைவரும் பபிளிக் சர்வெண்ட்..
  நாங்கள் பப்ளிக்.. பதிலளிப்பது உங்கள் தார்மீக கடமை.

  உங்களுடன்..மல்லையா போன்றவர்களை ஒப்பிடால்...


  99% ஊழியர் வேலைக்கு தகுதியற்றவரே.. மல்லையா பொது சொத்தை சூறையாடுவதாக சொல்வதற்கு உங்களுக்கு எள் முனையளவும் தகுதி இல்லை.

  எனெனில் பாதுகாப்பான வேலை அரசு, தேதிக்கு சம்பளம் பிஎப், கிரசுவட்டி, பென்சன், என அனைத்தும் இருந்தும், இன்னம் கொடு என்று போராடிக்கொன்டு வேலையை உருப்படியாக செய்யமாடேன், அது குறித்து யாரும் கேள்வி கேட்க கூடாது. அட்ரஸ் இல்லாத பிளாகில் அப்படி கேட்பதை கூட அனுமதிக்க மாட்டேன் என்ற சர்வாதிகார உணர்ச்சியுடன் செயல்படும் உங்களுடன்..

  இவை அனைத்தும் இருந்தும், நீஙக்ள் பாதுகாக்க வேண்டிய வங்கி பணத்தை தனிப்பட்ட லஞ்ச லாபங்களுக்காக மல்லையா போன்றவர்களுக்கு தரும் உங்களை போன்றவர்களுடன்...

  யாருக்கு தேவையோ அந்த ஏழை மக்களை ஏய்த்து, அதிகாரிகளுக்கு வால் பிடித்து நேர்மை, வாங்கும் சம்பளத்துக்கும் செய்யும் வேலைக்கும் உண்மை போன்ற எதுவும் இல்லாத உங்களுடன்..


  மல்லையா போன்றவர்களை ஒப்பிடால்...

  பாதுகாப்பான வேலை முதலாக எதுவும் இல்லாமல் சுய முயற்சியில் முன்னேறி, சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் .. உங்களை போன்ற சுய நலமிகளின் செயல்பாட்டையும் பயன்டுத்தி முன்னெறும் மல்லையா 1000 மடங்கு நல்லவரே.

  மந்திரி பதவி காலம் முடிந்து அடுத்த தேர்தலில் போட்டியிட்டால் வெற்ரிபெறுவோமா என்று தெரியாத.. அந்த தேர்தலுக்கும் பல கோடி செலவிட வேண்டிய நிலையில் இருக்கும் சிதம்பரத்தையும்

  மல்லையா இப்போது செய்வதை செய்யவில்லை என்றால் நிறுவன லாபம் குறையும் , போட்டி நிறுவங்களுடன் ஓட முடியாமல், நிறுவனம் மூடகூட படலாம். சொத்துகள் போய் நடுத்தெருவி நிற்கவேண்டி வரும்.

  எதிர்காலத்தை குறித்து எந்த பயமும் தேவைப்படாத நீங்களே சுயலாபங்களுக்காக இப்படித்தான் செயல்படுவேன் எனும்போது...

  மல்லைவயும் சிதம்பரத்தையும் குற்றம் சொல்ல எந்த தகுதியும் இல்லை.

  கடவுள் கூட விமர்சனத்திற்கும் கேள்விக்கும் அப்பற்பட்டவர் இல்லை.

  நேர்மை துணிவு, எதுவும் உங்களுக்கு இல்லை என்பதும், நீங்கள் பதிலளிக்க போவதில்லை என்பதும் எனக்கு தெரியும்.

  இதே கேள்விகளை உங்கள் அலுவலகத்தில் நேருக்கு நேர் கேட்க முனைந்தால் , முழுவதும் கேட்க கூட அனுமதிக்க மாட்டீர்கள் என்பதும்.. மேலும் செக்யுரிட்டி .. ஏன் போலிசை கூட கூப்பிட்டு அரசு பணிக்கு இடையூரு செய்ததாக வழக்கு போடுவீர்கள் என்பதும் தான் நடைமுறை..

  சோதிடப்படி 10ம் இடமே கர்ம ஸ்தானம், கர்மகாரன் சனி,ஆயுள் காரகனும் அவரே.. சோதிட தகவல்கள் வேண்டாம்...நீங்கள் செய்வதற்கு நீங்கள் பதில் அனுபவிக்க தான் வேண்டிவரும். உஙக்ள் குடும்பமும் சந்திதியும் உங்கள் செயல் விளைவால் பல ஆயிரம் மக்கள் தரும் சாபங்களை சுமக்கவே வேண்டி வரும்..

  பிறர்க்கு இன்ன முற்பகல் செய்யின் தமக்கு
  இன்ன தாமே வரும்.


  மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பதே பழமொழி. பின்னுட்டம் இடவேண்டாம் என்று சொல்லும் உங்களின் தளத்துக்கு இனி வருவது எனக்கு இழுக்கு.

  நன்றி.
  வினோத்

  ReplyDelete
 25. அரசு ஊழியர்கள் மீது உள்ள வன்மத்தால் மல்லய்யாவே சிறந்தவர் என்று சொல்லும் உங்களைப் போன்றவர்களின் விதண்டாவத பின்னூட்டங்கள் இல்லாமல் இருப்பது எனது தளத்திற்கும் நல்லதுதான். 99% தகுதியற்ற ஊழியர்களால்தான் அரசு இயந்திரமும் அரசு நிறுவனங்களின் செயல்பாடும் நடந்து கொண்டிருக்கிறது.

  பணி நியமனம் இல்லாமல் வங்கி ஊழியர்களும் அரசு ஊழியர்களும் இன்சூரன்ஸ் ஊழியர்களும் வேலை நேரத்திற்கு மேல் எவ்வளவு கூடுதல் சுமையை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியாமல்
  அவர்கள் தங்களது உரிமையைக் கேட்டால் டிஸ்மிஸ் ஆக வேண்டும்
  என்று விரும்புகிற, அதைவிட இன்னும் கேவலமாக எழுதுகிற
  வக்கிர புத்தி கொண்டவர்களிடமிருந்து எனது பக்கத்திற்கு விடுதலை
  கிடைத்துள்ளது. நன்றி, Good Bye

  ReplyDelete