Monday, October 21, 2013

மோடியின் ஆதரவாளர்களே, முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்?

நரேந்திர மோடியின் ஆதரவுப் படை அவர் நிகழ்த்திய கோரத் 
தாண்டவம் பற்றி கேள்வி கேட்டால் பதில் சொல்லாது.

குஜராத் வளர்ந்துள்ளது என்ற மாயத் தோற்றத்தை தகர்க்கும்
புள்ளி விபரங்களை முன் வைத்தால் பதில் சொல்ல மாட்டார்கள்.

சவப்பெட்டியில் கூட ஊழல் செய்த கட்சியாக பாஜக இருந்தாலும்
நரேந்திர மோடி பரம யோக்கியர், சுத்த சுயம்பிரகாசம், உத்தம
சிகாமணி என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்.

அந்த பொய் மூட்டையையும் பிரித்து உத்தம புருஷனின் ஊழல்
லீலைகளை  தோழர் அ.அன்வர் உசேன் அம்பலப்படுத்தியுள்ளார்.

தீக்கதிர் இதழில் நேற்று வெளி வந்த இக்கட்டுரைக்கு
மோடியின் பழைய, புதிய ஆதரவாளர்களே பதில் சொல்லுங்கள்.



மோடி ம(i)றக்க நினைக்கும் 17 ஊழல்கள்
 
1.டாட்டாவின் நானோ திட்டத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.900க்கு தரப்பட்டது. அது டாட்டா குழுமம் அடித்த ஜாக்பாட் ரூ.33,000 கோடி. 

2. அதானி குழுமத்திற்கு முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா விசேட பொருளாதார மண்டலம் உருவாக்கிட நிலம் சதுர அடி/ ச.மீ. ஒன்றுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு அதாவது வெறும் 10 பைசாவிற்கு தரப்பட்டது. இதனை அதானி குழுமம் பின்னர் சதுர மீட்டர் ரூ.100க்கு விற்று கொழுத்த இலாபம் பார்த்தனர். இந்த விற்பனை சட்டவிரோதமானது. 

3. கே.ரஹேஜா என்ற ரியல் எஸ்டேட்டுக்கு முக்கிய பகுதியில் ஒரு ச.மீ. ரூ.470 வீதம் 3.76 லட்சம் சதுர மீட்டர் விற்கப்பட்டது. அதற்கு அருகாமையில் விமானப்படை நிலம் கேட்டபொழுது ஒரு சதுரமீட்டர் ரூ.1100 என கூறப்பட்டது. என்னே மோடியின் தேசபக்தி!

4. நவ்சாரி விவசாயப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 65,000 ச.மீட்டர் நிலம் சத்ராலா ஓட்டல் குழுமத்திற்கு விடுதிகட்ட தாரைவார்க்கப்பட்டது. பல்கலைக் நிர்வாகம் ஆட்சேபனை தெரிவித்தாலும் அது உதாசீனப்படுத்தப்பட்டது.
இந்த இடமாற்றம் நேரடியாக நரேந்திர மோடியின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது. இதனால் குஜராத்அரசுக்கு இழப்பு ரூ. 426 கோடி.

5. அண்டை நாட்டின் எல்லை ஓரத்தில் உள்ள நிலம் அரசின் கைகளில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இது தேச பாதுகாப்புடன் தொடர்புடைய அம்சம்.
ஆனால் ஒரு பெரிய பரப்பளவு உள்ள நிலம் உப்பு நிறுவனங் களுக்கு தரப்பட்டது. இந்த நிறுவனங்கள் வெங்கையாநாயுடுவின் உறவினர்களுக்கு சொந்தமானது. வெங்கையா நாயுடு மோடியை ஏன் ஆதரிக்கிறார் என்பது புரிகிறதா?

6. எஸ்ஸார் கார்ப்பரேட் குழுமத்திற்கு 2.08 லட்சம் சதுரமீட்டர் நிலம் தரப்பட்டது. இதில் ஒரு பகுதி வனங்கள் நிறைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இது சட்டவிரோதமானது.

7. அகமதாபாத் நகரின் அருகில் சந்தை நிலவரப்படி விலை உயர்ந்த 25,724 ச.மீ. இடம் பாரத் ஒட்டல் குழுமத்திற்கு தரப்பட்டது. இதற்காக டெண்டர் எதுவும் கோரப்படவில்லை. 

8. 38 மிகப்பெரிய ஏரிகளில் மீன்படிக்கும் உரிமை டெண்டர்கள் கோரப்படாமலேயே ஒரு சிலருக்கு தரப்பட்டது.

9. ஹாசிரா எனும் இடத்தில் L&T நிறுவனத்திற்கு 80 ஹெக்டேர் அளவுள்ள நிலம் சதுர மிட்டர் ஒன்றுக்கு வெறும் ரூ.1/- அதாவது சதுர அடி வெறும் 10 பைசாவிற்கு தாரை வார்க்கப்பட்டது.

10. Vibrant குஜராத் விழாக்களில் பங்கேற்ற தொழில் அதிபர்களுக்கு நகரின் பல முக்கிய இடங்களில் சந்தையில் விலை உயர்ந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

11. கால்நடை தீவனங்கள் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு கிலோ ரூ.48-க்கு வாங்கப்பட்டது. ஆனால் வெளிச்சந்தையில் இந்த தீவனம் ரூ. 24க்கு கிடைக்கிறது.

12. அங்கன்வாடி மையங்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்கியதில் இரு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி. இதன்காரணமாக நஷ்டம் ரூ. 92 கோடி.

13. GSPC எனும் நிறுவனம் தொடங்கிட குஜராத் அரசாங்கம் ரூ. 4993.50 கோடி முதலீடு செய்தது. இதுவரை வருமானம் ரூ. 290 கோடி மட்டுமே. ஆண்டிற்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

14. Sujalam Sufalam yojana எனும் திட்டத்திற்கு 2003ம் ஆண்டு ரூ. 6237.33 கோடி ஒதுக்கப்பட்டது.
2005ம் ஆண்டு இத்திட்டம் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் இதுவரை பூர்த்தியாகவில்லை. குஜராத் சட்டமன்றத்தின் பொதுக் கணக்கு குழு (Public Accounts Commitee) இதனை ஆய்வு செய்த பொழுது ரூ. 500 கோடி ஊழல் நடந் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழுவில் பிஜேபி உறுப் பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதில் ஆச்சர்யமும் இல்லை!

15. நரேந்திர மோடி விமானத்தில் பயணிக்கும் பொழுது குஜராத் அரசாங்கத்தின் விமானத்தையோ அல்லது ஹெலிகாப்டரையோ பயன்படுத்துவது இல்லை.

ஏர் - இந்தியா, ஜெட் ஏர்வேஸ் போன்ற மக்கள் பயன்படுத்தும் விமானங்களிலும் பயணிப்பது இல்லை.

மிகவும் சொகுகான தனியார் முதலாளிகளுக்கு சொந்தமான விமானங்களில்தான் அவர் பயணிப்பார். அதன் செலவு தொழில் அதிபர்கள் ஏற்றுக்கொள்வர்.

அண்மையில் திருச்சிக்கு வந்தபோதும் இதேபோன்று தனி விமானத்தில்தான் வந்தார்; வெள்ளியன்று (அக். 18) சென்னைக்கும் தனி விமானத்தில்தான் வந்தார்.

16. இண்டிகோல்டு எனும் நிறுவனம் சட்டத்தை மீறி 36.25 ஏக்கர் பண்ணை நிலத்தை வாங்கி அதிக விலைக்கு விற்று கொழுத்த லாபம் அடைந்தது. இதுவரை இந்த நிறுவனம் மீது நடவடிக்கை இல்லை.

17. குஜராத் அரசுக்கு சொந்தமான பிப் பவர் மின்நிலையத்தின் 49சதவீதப் பங்குகள் ஸ்வான் எனர்ஜி எனும் நிறு வனத்திற்கு விற்கப்பட்டது. இதற்காக எந்த டெண்டரும் கோரப்படவில்லை.

-அ.அன்வர் உசேன்


 நன்றி
தீக்கதிர் 20.10.2013

19 comments:

  1. இவை உண்மையா பொய்யா என்ற விவாதத்தை விடுவோம். மோடி உத்தமர் என்றோ இந்த ஊழல்கள் நடக்கவில்லை என்றோ வாதிக்கவில்லை.

    குஜராத்தில் எதிர்கட்சியாகவும் இந்தியாவை ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் இந்த ஊழல்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தது? இவ்வளவு ஊழல்கள் மலிந்த ஆட்சி என்றால் மறுபடி மறுபடி மோடி தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி?

    ReplyDelete
  2. குஜராத் முழுக்க கூடி கும்மி அடித்து விட்டு பாரதம் முழுக்க பம்மி பம்மி வருகிறார் ஓட்டு வேட்டையாட!

    ReplyDelete
  3. "குஜராத்தில் எதிர்கட்சியாகவும் இந்தியாவை ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் இந்த ஊழல்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தது? இவ்வளவு ஊழல்கள் மலிந்த ஆட்சி என்றால் மறுபடி மறுபடி மோடி தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி?"

    என்ன பந்து சார்,
    உங்க கேள்விக்கெல்லாம் இந்த காம்ரேட்டுகள் பதில் சொல்லுவாங்க என்று நினைக்குறீங்களா

    ReplyDelete
  4. திரு பந்து, காங்கிரஸ் நடவடிக்கை எடுக்காது. எடுப்பதற்கான தார்மீக உரிமை கிடையாது. அது மிகப் பெரிய ஊழல் பெருச்சாளி கிடையாது. குஜராத் மாநிலத்தில் மீண்டும் மோடி வெற்றி பெற முடிகிறது என்றால் அங்கே உள்ள பிரதான எதிர்கட்சி வலிமையான மாற்றாக இல்லை. இங்கேயாவது கருணாநிதிக்கு ஜெயலலிதாவும் ஜெயலலிதாவிற்கு கருணாநிதியும் மாற்று என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படி மோடிக்கு மாற்றாக நினைக்கிற அளவிற்கு யாரையும் காங்கிரஸ் கட்சியால் முன் வைக்க முடியவில்லை என்பது அதன் பலவீனம். கேசுபாய் படேலை நம்பவும் அவர்கள் தயாராக இல்லை.

    ReplyDelete
  5. மிஸ்டர் அனானி, முதலில் இந்த பதிவிற்கு பதில் சொல்ல வேண்டியது பாஜக காரர்களே தவிர நாங்கள் கிடையாது. திரு பந்துவிற்கு நான் பதில் சொல்லி விட்டேன். விவாதத்திற்கு பதிலளிக்கலாம். விதண்டாவாதத்திற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை

    ReplyDelete
  6. பிரனாயி விஜயன் ஊழலை பற்றி பேசியதால் அச்சு அம்மாவன் {தாய் மாமன்]CPM பொலிட்பீரோவிலிருந்து கல்தா கொடுக்கபட்டுள்ளார்,திரிபுரா தோழர் பாகபிரிவினை சினிமாவில் பாலையா சொன்ன மாதிரி ரூபா நோட்டுல மெத்தை தச்சு போட்டு அதிலே படுத்து போஸ் கொடுக்கிறார்.இதைபற்றியெல்லாம் நாம் எழுதினால் விதண்டாவாதம்,திசைதிருப்புதல் என்று புதுபுதுவகையில் புலம்புகிறார் தோழர்.

    ReplyDelete
  7. Mr Raman,

    do you think Antanio maino will leave all this as it is ? despite all this if Namo is being elected for third time consecutively then your arguements are baselesss
    gujarat people are not stupids, they are litrate

    ReplyDelete
  8. இத்தாலி மாபியா கும்பலின் கொள்ளையைவிட இந்திய மாபியா கும்பலின் கொள்ளை சிறியதே.

    …இத்தாலி கும்பலை ஒழித்துவிட்டு நம் இந்திய கும்பலை கவனிப்போம்.

    ReplyDelete
  9. //எடுப்பதற்கான தார்மீக உரிமை கிடையாது. //
    தார்மீக உரிமையா? அதையெல்லாம் பார்க்கும் அளவா காங்கிரஸ் நல்லது? நீங்கள் சொல்வது போல குஜராத்தில் எதிர்கட்சி பலமில்லாததால்தான் மோடி வருகிறார் என்றால் தொங்கு சட்டசபை அல்லவா வரவேண்டும். இது போல மெஜாரிட்டி அரசு வர வாய்ப்பில்லையே!

    ReplyDelete
  10. திரு விஜயன், என்னுடைய இன்றைய பதிவை படியுங்கள். நான் புலம்பவில்லை. நீங்கள்தான் உப்பு இருக்கா என்ற கேள்விக்கு பருப்பு இருக்கு என்று திசை திருப்புகிறீர்கள். உங்களுடையது விதண்டாவாதம் என்பது உங்களுக்கே தெரியும். மோடி பற்றிய ஊழல்களுக்கு உங்களிடம் பதில் இல்லை. அதனால் எங்கள் மீது பாய்கிறீர்கள். பினராயி விஜயன் மீது தொடுக்கப்பட்டது சி.பி.ஐ யின் பழிவாங்குதல் நடவடிக்கை. நியாயப்படி பார்த்தால் காங்கிரஸ் ஆட்சியில் மின்சார அமைச்சராக இருந்த கார்த்திகேயன் மீது பாய்ந்திருக்க வேண்டிய வழக்கு அது. ஒப்பந்தத்தை உருவாக்கி கையெழுத்திட்டவர் அவர். அச்சுதானந்தன் அரசியல் தலைமைக்குழுவில் இணைக்கப்படாததற்கு அது காரணமல்ல. அவர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார்.

    ReplyDelete
  11. ராவணன், எரிகிற கொள்ளிகளில் இரண்டு கொள்ளிகளுமே தூக்கி எறியப்பட வேண்டிய கெட்ட கொள்ளிகள்தான்.

    ReplyDelete
  12. // ராவணன், எரிகிற கொள்ளிகளில் இரண்டு கொள்ளிகளுமே தூக்கி எறியப்பட வேண்டிய கெட்ட கொள்ளிகள்தான்.//

    Communists? Aren't they the third கொள்ளி?

    ReplyDelete
  13. இவ்வளவு அபாண்டமாக பேசியிருக்கிற அந்த அனானியை அந்த இரு கொள்ளிகள் கொண்டுதான் சூடு போட வேண்டும்

    ReplyDelete
  14. பந்து சார், Good shoot.
    My reply is Moodi is betterthan others. Ok. Tell you, If Modi not, then Who?

    ReplyDelete
  15. நல்ல கேள்விகள். இரண்டு பேராலயும் சரியா பதில் சொல்ல முடியாது. அதே மாதிரி மூன்றாவது அணிக்கும் கேள்வியை கேளுங்க. நாலாவது அணி (?) வந்தால் என்ன பண்றது? அதனால் அதுக்கும் கேள்வியை கேளுங்க. யாராவது உருப்படியா பதில் சொல்றாங்களான்னு பார்ப்போம்.

    ReplyDelete
  16. Communists களை விட மோடி மேல்

    ReplyDelete
  17. Communistsகளை விட மோடி மேல்

    ReplyDelete
  18. மன்னிக்கவும் சீதா, உங்களுக்கு கம்யூனிஸ்டுகளைப் பற்றியும் தெரியவில்லை. மோடியைப் பற்றியும் தெரியவில்லை.

    ReplyDelete
  19. விஜயன், பினராயி விஜயன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார் என்பது தெரியுமா? வாங்க வந்து முகத்தை காண்பிச்சிட்டு போங்க

    ReplyDelete