Friday, October 11, 2013

முதுகில் குத்த வா





அளவில் பெருத்தவன்
நான். அதனால்
அகலமான முதுகு
வசதியாக  உண்டு.

முன்னோக்கிச் செல்வதாலே
பின்னே வருபவர்
யாரென்று தெரியவில்லை.

எதிரியும் துரோகியும்
நண்பனும் தோழனும்
எல்லோருமே
விசாலமான முதுகில்
குத்தி விட்டு  குத்தி விட்டு
ஓடி ஓளிகிறார்கள்.

எதிரே வரும்போது
புன்சிரிப்பை சிந்தி விட்டு
போலியாய் நலம் விசாரித்து
மீண்டும் ஒளிந்து
மீண்டும் வருவார்கள்.
முதுகில் குத்த

பின்னோக்கிப் பார்க்கும்
கண்கள் இல்லை.

இன்னும் தைரியமாய்
இனியும் வருவார்கள்
இருக்கும் சொற்ப இடத்தையும்
மேலும்  ரணப்படுத்த
எதிரியும் துரோகியும்
நண்பனும் தோழனும் கூட.

3 comments:

  1. வணக்கம்
    பின்னோக்கிப் பார்க்கும்
    கண்கள் இல்லை.

    அருமை கவிதையின் வரிகள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஆனாலும் கவிதை மோகம் உங்களை அநியாயத்திற்கு ஆட்டி படைக்கிறது

    ReplyDelete
  3. முகநூல் நண்பர்களை கூட்டி ஒரு கூட்டமோ சிறு மாநாடோ நடத்தலாமே ! ஏனென்றால் வள்ளுவரே சொல்லியுள்ளார்

    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    முகநூல் நட்பே நட்பு

    என்று.

    (வள்ளுவர் என்னை மன்னிப்பாராக )

    ReplyDelete