கீழே உள்ளது மாடியில் உள்ள என் மாமனார் வீட்டில் சரஸ்வதி
பூஜைக்கு போய்விட்டு வந்த என் மகன் முகநூலில் போட்ட
நிலைத் தகவல்.
That Awkward moment when I find that a 3rd standard school student has more books to keep for Saraswathi Pooja than a 3rd year College Student!!
சிரிப்பதற்கான விஷயமாக மட்டும் இது இருப்பதாக எனக்கு
தோன்றவில்லை. இன்றைய கல்வி முறையைப் பற்றிய ஒரு
விமர்சனமாகவே பார்க்கிறேன்.
சுமை தூக்கும் தொழிலாளர்கள் போல சின்னக் குழந்தைகள்
பிரம்மாண்டமான புத்தக மூட்டையை முதுகில் சுமந்து
கொண்டு அனுதினமும் பள்ளிக்குச் செல்கின்றனர்.
தொழில்நுட்பத்தின் முன்னேற்றமாக பல குழந்தைகள்
இப்போது சக்கரம் வைத்த பைகளை தள்ளிக் கொண்டு
செல்கின்றனர்.
ஒரு பாடத்திற்கு ஒரு புத்தகம் என்றிருந்த நிலையில் மாற்றம்
என்பது மெட்ரிகுலேஷன் பாட முறைக்கு பிறகே வந்தது.
சி.பி.எஸ்.இ முறையிலும் அப்படித்தான். இந்தப் பள்ளிகளுக்கு
பாடப்புத்தகம் அச்சடித்துக் கொடுப்பது என்பதே ஒரு மிகப் பெரிய
சந்தை. அதிக புத்தகங்கள் விற்றால் அந்த புத்தக
நிறுவனங்களுக்கும் லாபம், கமிஷன் அடிப்படையில்
பள்ளிகளுக்கும் லாபம்.
சமச்சீர் கல்வி முறையை மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
கடுமையாக எதிர்த்ததன் காரணம் புரிகிறதா?
நான் முக்கியமாக சொல்ல வந்த விஷயமே வேறு.
எல்.கே.ஜி தொடங்கி பனிரெண்டாவது வரையில் காலை
விழித்தது முதல் இரவு உறங்கும்வரை புத்தகங்களோடே
மன்றாடிக் கொண்டிருப்பதால்தான் இன்றைய தலைமுறைக்கு
வாசிப்பு பழக்கம் என்பது குறைந்து வருகிறதா?
எந்த புத்தகத்தை பார்த்தாலும் அது பாடப்புத்தகம் போல
சலிப்பு தருகிறதா?

ReplyDeleteசலிப்பு தருவதற்கு .இதுவும் ஒரு காரணம்
வணக்கம் தோழரே,
ReplyDeleteவழக்கமாக
வெங்காயம், கத்திரிக்காய், விலைவாசி பற்றியும்
ஆட்சி மாற்றம், காட்சி மாற்றம் பற்றியும்
சில நேரங்களில் தெளிவாகவும்
பல நேரங்களில் குழப்பமாகவும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.
சரி தோழரே
உங்கள் ஊரில் மனிதர்களுக்கு மரியாதை இல்லை என்பது தெரியும் ஆனால் மனித உயிருக்கு கூடவா மரியாதை தரக்கூடாது. ஒரு சக மனிதனை இன்னொரு மனிதன் துள்ளத்துடிக்க வெட்டிக்கொள்வது பற்றியெல்லம் நீங்கள் எதுவும் கருத்து சொல்ல மாட்டீர்களா?. ஒரு வேளை உங்களைப்போன்ற அறிவுஜீவிகள் பரிதாபப்படக்கூடிய அளவுக்கு அவர்கள் உயிருக்கு மதிப்பில்லையா?. இதை இப்போது ஏன் கேட்கிறேன் என்றால் , சிலர் கொலை குற்றச்சாட்டில் தேடப்பட்டு பிடிபட்ட நிலையில் கூட அவர்களுக்கு வக்காலத்து வாங்க பலர் இருக்கிறார்கள் ஆனால் பறிபோன உயிர்களுக்கு பரிதாபப்பட நீங்கள்இருக்கிறீர்கள் என்று நம்பி என்னை போன்ற சிலர் இருக்கிறார்கள் எனவே உங்கள் கருத்துக்காக ரொம்பவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. அன்பே சிவம் ..
கருத்து கேட்கிற மனிதன் தன் சொந்த அடையாளத்தோடு வர வேண்டும். அனாமதேயங்களுக்கு பதில் சொல்லி நேரத்தை விரயமாக்கப் போவதில்லை.
ReplyDelete