புதுவையைச் சேர்ந்த சாய் ஜெயராமன் என்ற தோழர் முகநூல்
உள் பெட்டியில் " புதுவையிலிருந்து வெளியாகும் பத்திரிக்கையில்
பாமரன் என்ற பெயரில் எழுதுகிறீர்களா" என்று கேட்டார். ஆஹா,
ஏதோ ஒரு பத்திரிக்கையில் தொடர்ந்து எழுவதற்கான வாய்ப்பு
என்று நினைத்து கொஞ்சம் கம்பீரமாகவே " எதைப் பற்றி தோழர்
எழுதனும் ? " என்று கேட்டேன்.
இல்லையில்லை, தமிழருவி மணியன் பற்றி நீங்கள் எழுதியது
" நமது மனசாட்சி" என்ற பத்திரிக்கையில் பாமரன் என்ற பெயரில் அப்படியே வந்துள்ளது என்று விபரமும் சொன்னார்.
அப்பத்திரிக்கையின் இணைய தளத்திற்கு
சென்று பார்த்தால் நான் எழுதியது அப்படியே ஒரு வரி கூட
விடாமல் எழூதிவிட்டு பாமரன் என்று வெளியிட்டு விட்டார்கள்.
படிக்காதவர்களுக்கு இங்கே இணைப்பு தந்துள்ளேன்
எனது பெயரோ அல்லது எனது வலைப்பக்கத்தின் பெயரோ
எங்கும் காணவில்லை. என் எழுத்தை போடுவதில் தவறில்லை.
ஆனால் அதற்கு என்னிடம் தகவலாவது சொல்லியிருக்க வேண்டும்,
குறைந்தபட்சம் இது இன்னார் எழுதியது என்றாவது சொல்லி
இருக்க வேண்டும். வேறு பெயரில் வெளியிடுவது என்பது என்ன நாகரீகம்? அறிவுத் திருட்டு அல்லவா இது?
நானும் பலமுறை மற்றவர்கள் படைப்பை பதிவிட்டுள்ளேன்.
ஆனால் அதை எழுதியது யார் என்று எந்நாளும் சொல்லாமல்
இருந்ததில்லை. இதிலே என்னை தொடர்பு கொள்வது ஒன்றும்
சிரமமே இல்லை. எல்.ஐ.சி ஊழியன் என்றும் ஊழியர் சங்க
வேலூர் கோட்டப் பொதுச்செயலாளர் என்றும் வெளிப்படையாக
சொல்லியுள்ளேன்.புதுவையில் இரண்டு எல்.ஐ.சி கிளை
அலுவலகங்கள் உண்டு. எங்கு போய் கேட்டிருந்தாலும் என்
தொலைபேசி எண் கிடைத்திருக்கும்.
கொஞ்சம் கூட நேர்மையே இல்லாத, பத்திரிக்கை தர்மத்தை
மதிக்காத பத்திரிக்கை " நமது மனசாட்சி" என்று பெயர்
வைத்துக் கொண்டுள்ளதுதான் கொடுமை

ஆக குறைந்தது இது நீங்க எழுதியது என்று பெயரையாவது சொல்லி இருக்க வேண்டும்.அப்பட்டமான திருட்டு இது.
ReplyDeleteஎன்ன ஒரு அநியாயம் இது? ஊடகங்களை பற்றிய உங்களது கருத்துக்கள் தற்போது உண்மையாகிப்போனது. கொஞ்சமும் நன்றி இல்லாதவர்கள். வேறென்ன சொல்ல.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete