தொலைக்காட்சியில் பெய்கிறது,
முகநூலில் பெய்கிறது.
பத்திரிக்கைகள் சொல்கிறது
தமிழகம் முழுதும்
ஓயாத மழை என்று.
அடைபட்ட சாலைகள்,
நிரம்பி வழியும்
கால்வாய்கள்,
விடாத காகிதக்
கப்பல்,
நின்று போன
போக்குவரத்து,
சில்லென்ற வார்த்தைகளில்
மழைக் கவிதை.
மகிழ்ச்சியாய்
நெகிழ்ச்சியாய்
வேதனையாய்
எரிச்சலாய்
ஒவ்வொருவருக்கும் ஒரு
மழை அனுபவம்.
கருத்த மேகமும்
குளிர்ந்த பூமியும்
ஆசையை தூண்டி விட
சின்னத் தூறலாய்
அவ்வப்போது தலை
காட்டி
வேறு எங்கோ
பெய்கிறது,
வேலூரை மட்டும்
ஏமாற்றி.
மழையின் குரல் : என்ன இவரு ? நான் வந்தா வேலை கெட்டு போகுதுன்னு கவிதை எழுதுறார் ! வராவிட்டால் ஏன் வரலேன்னு அதுக்கும் கவிதை எழுதுறார் ! இவரை புரிஞ்சிக்கவே முடியலியே ?
ReplyDelete