Tuesday, October 15, 2013

நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்





இன்று ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்தில் ஒரு முக்கியமான தலைவர் பங்கேற்றார். மதிய உணவு நேரம். சாப்பிட்டு முடிந்ததும் அந்த பாக்கெட், மற்றுமுள்ளவற்றை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, ஒரு துணியைக் கண்டுபிடித்து தான் சாப்பிட்ட இடத்தை சுத்தமாக துடைத்து விட்டு மற்றவர்கள் சாப்பிட்டு வரும்வரை அமைதியாக அமர்ந்து ஒரு புத்தகத்தை படிக்க தொடங்கி விட்டார்.

அவர்  தோழர் கே.தங்கவேலு.

திருப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்.

இந்த எளிமை கண்டு நெகிழ்ந்து போனேன். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே உரிய பாரம்பரியம் என்பதில் மகிழ்ந்து போனேன்.

5 comments:

  1. அய்யா தோழரே
    அந்த அனாமதேயம் எவனோ?
    அவனை தேடி போய் புத்தி சொல்லுற வேலைய பாருங்க அதை விட்டுட்டு என்னை மாதிரி ஆளுங்களை வாய்க்கு வந்தபடி பேசறதி ஞாயமா ? நாகரீகமா ? கொஞ்சம் யோசிங்க ?
    உங்க பதிவை பாத்துட்டு கருத்து எழுதுகிறவன் உங்க பார்வையில் முட்டாள் !
    அந்த அனாமதேயம் அனானி, உங்கள் மனதை காயப்படுத்த எந்த உரிமையும் இல்லை.
    அதே போல் உங்களுக்கும் யாரையும் கடும் வார்த்தைகளை கொண்டு பேசும் உரிமையும் இல்லை.
    பாவம் அந்த சந்திரசேகரர் உங்கள் பக்கத்துக்கு நான் எப்படி புதிதாக வந்து கமெண்ட் போட்டேனோ, அதே போல்தான் அவரும் புதுசு போல் தெரிகிறது. அவர் ஏற்கனவே அனானி என்று பதிவிட்டிருந்தாலும் அதே பக்கத்தில் தன பெயரை ஏற்கனவே பதிந்துதான் வைத்திருந்தார் அதைகூட பார்க்காமல் வைதிருந்தீர்கள். தோழரே இது ஜனநாயக நாடு. அதனால்தான்,
    உங்களால் உள்ளூர் க....னா முதல் அம்பேரிக்கவின் ஒப்பாம்மா வரை விமர்சிக்க முடிகிறது. அதைத்தான் நானும் சொல்கிறேன். இது ஜனநாயக நாடு இங்கே விமர்ச்சனங்களுக்கு விலக்களிக்கப்பட்டவர் எவரும் இல்லை.. அன்பே சிவம்

    ReplyDelete
  2. தலைவர்கள் எல்லாரும் அப்படியே இருந்துட்டா நல்லா இருக்குமே!

    ReplyDelete
  3. திரு சந்திரசேகரன் தன் அடையாளத்தோடு வந்தார். அவருக்கு நான் ஒழுங்காகத்தான் பதிலளித்துள்ளேன். இந்த சிண்டு முடியும் வேலையில் வக்கிரம் பிடித்த அனாமதேயத்தின் வன்மமும் மனநிலை பாதிக்கப்பட்ட தன்மையும் புரிகிறது. நேரடியாக வர தைரியமில்லாத ஆட்களுக்கு, நாகரீகம் இல்லாத ஜன்மங்களுக்கு நாகரீகமாக பதில் அளித்தாலும் புரியாது. வினை எப்படி இருக்கிறதோ அதற்கேற்றார்போல்தான் எதிர்வினையும் அமையும்

    ReplyDelete
  4. KRS , KRS nu oru ThOzhar paththi KELVI Pattirukken. avaraippaathi ethunaa sonnaa nallaa irukkum.

    ReplyDelete
  5. நிச்சயம் நாளை எழுதுகிறேன்.

    ReplyDelete