Sunday, October 27, 2013

மோடிக்கு அனுதாபத்தை உருவாக்காதீர்கள்


 


நரேந்திர மோடி கலந்து கொண்ட பாட்னா பொதுக்கூட்டத்தில்
இன்று வெடிகுண்டு வெடித்து ஐந்து பேர் இறந்திருக்கிறார்கள்.
இந்த வன்செயல் கண்டிக்கத் தக்கது.

இங்கே வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என்று தெரியவில்லை.

யாராக இருந்தாலும் அது தவறு.
நரேந்திர மோடி மீது  கோபமும் வெறுப்பும் இருந்தாலும்
அதை  வோட்டின் மூலமே கணக்கு தீர்க்க வேண்டுமே தவிர
வேட்டின் மூலம் அல்ல.

இந்திய வரலாற்றில் இதுவரை வைக்கப்பட்ட குண்டுகள்
குறி வைக்கப்பட்டவர்களுக்கு அரசியல் ஆதாயம் தேடித்
தந்துள்ளது என்பதுதான் யதார்த்தம். இறந்து போனவர்களின்
தவறுகள் எல்லாம் மறைந்து போய் அவர்கள் தியாகியாகி
உள்ளனர்.  தப்பித்தவர்கள் அனுதாப அலையால் உயர்வு
பெற்றுள்ளார்கள்.

நரேந்திர மோடியின் தவறுகளை, மோசடிகளை மக்கள்
மத்தியில் விரிவாக எடுத்துப் போய் அவரை அரசியல்
ரீதியாக தோற்கடிப்பது என்பதுதான் சரியான வழிமுறை.

மாறாக வெடிகுண்டுகள் அவருக்கு அனுதாபத்தை உருவாக்கி
அவருக்கு ஆதாயத்தைத்தான் ஏற்படுத்தும்.

 

2 comments:

  1. எமது நாடுகளின் அரசியல்வாதிகள் எவரிலும் நம்பிக்கையில்லை.
    நீங்கள் கூறியுள்ளதை புரியுமளவுக்கு நம் மக்களுக்குத் தெளிவிருந்தால் ,நாம் எங்கோ இருப்போம்.
    ஆனாலும் இந்த அனுதாப வாக்குக்காக இப்போ இப்படியான கொடுமைகளை , அவர்களே செய்தாலும் ஆச்சரியமில்லை.
    நம் அரசியல்வாதிகள் எதற்கும் துணிந்தவர்கள். செத்தவன் தலைவனா? அன்றாடம் காச்சிதானே!
    தெருவில் நிற்பது தலைவன் குடும்பமில்லையே!

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete