Saturday, October 12, 2013

இந்த சாகசமெல்லாம் அவசியம்தானா?

நெமிலி சென்று விட்டு வேலூர் திரும்பிக் கொண்டிருந்தேன்.

விஷாரம் தாண்டியவுடன் பார்த்த ஒரு காட்சி.
எங்கள் பேருந்தை அதி வேகமாய் வளைந்து வளைந்து
பைக்கில் தாண்டிய ஒரு இளைஞன் 
ஓடும் பைக்கிலிருந்து எம்பிக் குதித்து
ஒரு பக்கமாய் உட்கார்ந்து கொண்டு
பேருந்தில் உள்ளவர்களையும் 
சாலையில் உள்ளவர்களையும் 
பார்த்து இரு கைகளையும் ஆட்டி விட்டு
கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும்
குதித்து  பைக்கில் அமர்ந்தான்.
அடுத்த வினாடி வீலிங் செய்தபடியே
ஒரு நூறு மீட்டர் போயிருப்பான்.
அதில் பாதி நேரம் கைகளை வேறு
எடுத்து விட்டான்.
பிறகு மின்னல் வேகத்தில் 
காற்றில் மறைந்து விட்டான்.

சர்க்கஸ் எதிலாவது பாதுகாப்பாக
செய்ய வேண்டிய சாகசங்களை
தேசிய நெடுஞ்சாலையில்
அதுவும் நூறு கிலோ மீட்டர்
வேகத்திற்கு  குறையாமல் கார்கள்
விரைந்து செல்லும் சாலையில்
ஹெல்மெட் கூட அணியாமல்
செய்தது  அவசியமற்றது.
கொஞ்சம் பிசகினாலும் 
உயிருக்கு உத்தரவாதமில்லை.

இதற்காகவா அவனது பெற்றோர்
அவனுக்கு பைக் வாங்கிக் கொடுத்திருப்பார்கள்.

நிதானம் இல்லாமல்  வாழ்க்கையை தொலைக்கலாமா?

இது அவனுக்கு மட்டுமல்ல
படிக்கிற காலத்தில் அரிவாளைத் தூக்கிய
அந்த மூன்று மாணவர்களுக்கும் பொருந்தும்.
 

2 comments:

  1. அருமையான கருத்து.
    படிக்கிற காலத்தில் அரிவாளைத் தூக்கிக்கிறது,சர்க்கஸ் காட்டுவது அந்த மூன்று மாணவர்களுக்கு மட்டுமல்ல இதர மாணவர்களுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  2. சாவோம் எனத் தெரிந்து நஞ்சைப் பருகுவோனை முட்டாப் பயல் எனத் தான் கூற முடியும். கூறு கெட்ட கூழ்முட்டைகள் பல இப்படி எங்கும் உள்ளன, இதனால் அவன் சாவது மட்டுமின்றி சாலையில் போகும் மற்றவர்களின் உயிரோடும் விளையாடுகின்றான். அவனது செய்கையை படம் பிடித்து! வண்டி எண்ணையும் குறித்து சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து காவலருக்கு அறியத் தந்திருக்க வேண்டும்..

    ReplyDelete