கால் மீது கால் போட்டு
சுழலும் நாற்காலியில்
ஒய்யாரமாய் அமர,
அருகே நிற்கும்
காரின் தூசியில்
கைவிரல் கொண்டு
ஓவியம் தீட்ட,
மீசையை மழித்து
கண்ணாடியில்
முகம் பார்க்க,
கண்ணாடிக் கூண்டு
பொம்மையின் ஆடையை
தானும்
அணிந்து பார்க்க,
வேகமாய் விரையும்
வண்டியை நிறுத்தி
அப்படி என்ன
தலை போகிற வேலை
என்று ஆர்வமாய் விசாரிக்க,
பிரம்மாண்ட மாளிகைகளை
பார்க்கப் பார்க்க
இவ்வளவு பணம்
எங்கிருந்து வந்ததென்று
கேள்விகள் கேட்க,
பொய்யாய் பேசி
போலியாய் பழகுவோரை
பக்கத்தில் அழைத்து
பளீரென்று அறைய,
இதையும் தாண்டி
இன்னமும் கூட
எல்லோருக்குள்ளும்
ஒளிந்திருக்கிறது
ஏராளமான ஆசைகள்
ரகசியமாக.
வணக்கம்
ReplyDeleteமனதை கவர்நத கவிதை வரிகள் வாழ்த்துக்கள்
இனியதீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
ReplyDeleteமறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?
எனக்கும் இதுப்போன்ற ஆசை அதிகம் இருக்கு!!
ReplyDelete