உத்திர பிரதேச மாநிலம் டௌண்டியா கேரட் என்ற கிராமத்தில்
160 ஆண்டுகளுக்கு அந்த பகுதியை ஆண்ட குறுநில மன்னன்
ராம் ராவ் பக் ஷ் சிங் தனது அரண்மனையில் ஆயிரம் டன்
தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாகவும் அதை நாட்டின்
வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த ராஜா தனது
கனவில் தோன்றி சொன்னார் என்று சுபோஷன் சர்கார் என்ற
சாமியார் சொல்லியுள்ளார்.
இப்போது அந்த சாமியார் சொன்னது உண்மையா என்று பார்க்க
தொல்லியல் துறை வரும் 18 ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி
செய்யப்போகிறது.
மதுரை ஆதீனத்தின் கனவில் சிவ பெருமான் தோன்றி அதன்
பின் நடந்த களேபரங்கள் போல இல்லாமல் தங்கம் கிடைத்தால்
சரி.
சரி இந்த தங்கம் கிடைத்தால் இந்திய அரசின் பல பிரச்சினைகள்
தீருமல்லவா? ரூபாயின் மதிப்பு உயருமல்லவா?
எங்கோ ஒரு கோயிலின் இருட்டறையில் என்ன மதிப்பு என்றே
தெரியாமல் பாசி படிந்து கிடப்பதை விட அரசு கஜானாவிற்கு
வருவது நல்லது.
ஒரு முயற்சி தான். செய்யட்டும்......
ReplyDelete