Wednesday, October 16, 2013

பாமகவும் தலித் அமைச்சர்களும்

திரு அ.மார்க்ஸ் அவர்களின் முகநூல் நிலைத் தகவல் ஒன்றில்
நான் அளித்த பின்னூட்டம் இது.

பாமக சார்பில் மத்திய அமைச்சராக திரு தலித் எழில்மலை 
இருந்த போது நான் பார்த்ததை அதில் எழுதியிருந்தேன்.

அது கீழே



" பாமக தனக்கு கிடைத்த முதல்  மந்திரி பதவியை தலித்திற்கு கொடுத்தது என்று ஒருவர் பெருமை பட்டுக் கொள்கிறார். நான் ஒரு அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இன்சூரன்ஸ் தனியார்மயம் குறித்து ஒரு மனு அளிக்கவும் ஒரு நிகழ்ச்சிக்கு கூப்பிடவும் அப்போதைய வேலூர் எம்.பி திரு என்.டி.சண்முகம் அவர்களை சந்திக்க சென்றிருந்தேன். அந்த அலுவலகத்தில் நடந்த சம்பவம் இது. 

வேலூரில் உள்ள ஒரு எஸ்.சி/எஸ்.டி ஊழியர் நலச்சங்கக் கூட்டத்திற்கு திரு தலித் எழில்மலை வருவதாக இருந்தது. அமைச்சர் முதல் முறையாக வேலூர் வருகிறாரே, நாம் என்ன வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டு வந்த கட்சித் தொண்டர்களை மாவட்டச்செயலாளரை பாரு என்று சொல்லி அனுப்பி விட்டார். 

 ஒருவர் கொஞ்சம் அழுத்தமாக கேட்ட போது " என்னய்யா தலைவலியா போச்சு, நான் ஐயா கிட்ட கேட்டேன். அவரு அவர் ஜாதிக் கூட்டத்துக்குதான் வரார். அதனால் கட்சிக்காரங்க யாரும் போகவேண்டாம், எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டாரு" என்று பதில் சொல்லி விட்டார். பாமக நியாயமான கட்சி என்ற தோற்றத்தை உருவாக்க அவர்கள் சிலரை பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்களும் இப்போது அங்கு இல்லை"

தொண்டர்கள் தங்கள் கட்சியின் அமைச்சர் என்றுதான் 
பார்த்தார்கள். ஆனால் ஐயா????????????

 

No comments:

Post a Comment