இது ஆறுமுக பிரசாத் என்ற நண்பர் முக நூலில் எழுதியது.
பாஜக தனது மத வெறிக் கொள்கையை என்றும் மாற்றிக் கொள்ளாது
என்பதற்கு இன்னும் ஆதாரம் வேண்டுமோ?

நவராத்திரி விழாவுக்கு பத்மநாபபுரத்திலிருந்து விக்ரகங்கள் புறப்பட்டன
இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
கேரள முதல்வருக்கு பதில் தேவசம் அமைச்சர் உடைவாள் கைமாறினார்.
தக்கலை, அக் 3 -
நவராத்திரி விழாவுக்கு பத்மநாபபுரத்திலிருந்து விக்ரகங்கள் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டன. இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் அரண்மனையில் நடந்த உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியில் திடீர் மாற்றம் ஏற்பட்டு கேரள முதல்வருக்கு பதில் தேவசம் அமைச்சர் உடைவாள் கைமாறினார்.
பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான பத்மநாபபுரத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடப்பது வழக்கம். அந்த பூஜையில் சரஸ்வதி சாமி விக்ரகத்தின் முன்பு மன்னரின் உடைவாள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். காலப்போக்கில் சமஸ்தானத்தின் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டாலும் அங்கு நவராத்திரி பூஜை bச்யவதற்கான சர1வதி அம்மன் விக்ரகம் பத்மநாபபுரத்திலிருந்து யானையில் பவனியாக கொண்டு செல்லப்படும். அத்துடன் வேளிமலை குமாரசுவாமியும் சுசீந்திரத்திலிருந்து முன்னுதித்த நங்கை தேவியும் பல்லக்கில் கொண்டு செல்லப்படும்.
பல்லாண்டுகளாக நடந்து வரும் இந்நிகழ்ச்சி தற்போதும் தொடர்கிறது. சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் நிகழ்ச்சிக்கு வரவேற்பு கொடுக்க இரு மாநில மக்களும் உற்சாகமாக பங்கேற்பர்.
அதையொட்டி, நேற்று காலையில் சுவாமி விக்ரகங்கள் பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு பவனியாக புறப்பட்டன. காலை 8 மணிக்கு முதல் நிகழ்ச்சியாக உடைவாள் கைமாறும் நிகழ்ச்சசி நடந்தது.
பத்மநாபபுரம் அரண்மனையின் உப்பரிகை மாளிகையில் பீடத்தில் வைக்கப்பட்டிருந்த மன்னரின் உடைவாளை தொல்லியல் துறை இயக்குநர் டாக்டர் பிரேம்குமார், தேவசம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் வி. எஸ். சிவகுமாரிடம் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, தொல்லியல் துறை அமைச்சர் கே.சி. ஜோசப் ஆகியோர் முன்னிலையில் எடுத்து கொடுக்க அவர் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகரிடம் வழங்கினார். அவர் முஞ்சிறை திருமலை சிவன் கோவில் ஸ்ரீகாரியம் சுதர்சனகுமாரிடம் ஒப்படைத்தார். அவர் பவனியில் சுவாமி விக்ரகங்களுக்கு முன்னதாக உடைவாளை கையிலேந்தி செல்வார்.
உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு உடைவாளை அமைச்சர் கே.சி. ஜோசப் எடுத்துக் கொடுத்தார். இந்த ஆண்டு கேரள முதல்வர் உம்மன்சாண்டி உடைவாளை எடுத்துக்கொடுப்பதாக கேரள தொல்லியல் துறையால் ஏற்கனவே நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென இந்துக்கள் அல்லாதோர் உடைவாளை எடுத்துக் கொடுத்தால் போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தததால் நிகழ்ச்சி மாற்றியமைக்கப்பட்டது.
தங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தால் போராட்டம் நடத்துவதற்கு தயாராக பா.ஜ., மாநில தலைவர் பொன். இராதாகிருஷ்ணன், பா.ஜ., மாவட்டத் தலைவர் தர்மராஜ், நாகர்கோவில் நகராட்சி சேர்மன் மீனாதேவ், திருவிதாங்கோடு பஞ்சாயத்து தலைவர் கலா கோபாலகிருஷ்ணன் மற்றும் பா.ஜ., ஆர்எஸ்எஸ், விஎச்பி, இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காலையிலேயே அங்கு திரண்டிருந்தனர். அமைச்சர் சிவகுமார் உடைவாளை எடுத்துக் கொடுத்ததால் நிகழ்ச்சி சுமூகமாக நடந்தது. போராட்ட முடிவை கைவிட்டனர்.
தொடர்ந்து உடைவாள் அரண்மனையில் உள்ள தேவாரக் கெட்டு சரசுவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தானத்திலிருந்து சரசுவதி அம்மன் யானை மீது எழுந்தருளி பவனி புறப்பட்டது. அப்போது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த வேளிமலை குமாரசுவாமியும் முன்னுதித்த நங்கையும் பல்லக்குளிலும் புறப்பட்டனர்.
அங்கிருந்து சுவாமி விக்ரகங்கள் அரண்மனையின் முன்வாசலுக்கு வந்தன. அங்கு பிடிப்பணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விக்ரகங்களுடன் செல்வோருக்கு வழிச் செலவுக்காக பணம் கொடுக்கும் நிகழ்ச்சி சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுவே பிடிப்பணம் வழங்கும் நிகழ்ச்சியாகும்.
அதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் மாநகர ஆயுதப்படை போலீ° துணை கமாண்டர் அசோக் குமார் தலைமையிலான போலீசார் 4 குழுக்களாக துப்பாங்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு குழுவிலும் 20 போலீசார் என மொத்தம் 80 போலீசார் இடம் பெற்றிருந்தனர். தொடர்ந்து கேரள ஆயுதப்படை போலீசாரின் பேண்டு வாத்திய நிகழ்ச்சியும் நடந்தது.
அதன் பின்னர், சுவாமி விக்ரகங்கள் அங்கிருந்து புறப்பட்டு கேரளபுரம் நோக்கி பவனியாக சென்றன. விக்ரகங்கள் சென்ற வழி நெடுகிலும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கேரள முதல்வர் உம்மன்சாண்டியை டிஆர்ஓ பழனிசாமி, ஆர்டிஓ அருண் சத்யா ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அரண்மனை அதிகாரிகளும், பல்வேறு பிரமுகர்களும் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில், கேரள எம்எல்ஏக்களான நெய்யாற்றின்கரை செல்வராஜ், பாறசாலை ஜார்ஜ், பத்மநாபபுரம் நகராட்சி சேர்மன் சத்யா தேவி, அரசு வக்கீல் செல்வராஜன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராபர்ட் புரூஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி பாதுகாப்பு பணியில், எஸ்பி மணிவண்ணன், டிஎஸ்பிக்கள் கஸ்தூரி காந்தி, இளங்கோ, ஏடிஎஸ்பி இரத்தினவேலு ஆகிய அதிகாரிகளின் தலைமையில் ஏராளமான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பஜகைவின் மதவெறிக்கு இதை விட சான்று வேண்டுமா என்ன ? பொதுவான அரசு சார்ந்த நிகழ்ச்சியில் கூட இவர்கள் மத வெறியை தூண்ட மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?
ReplyDeleteBJP'S IS NOT ACTING AS SECULAR PARTY LIKE CONGRESS....YOU SHOULD WRITE ABOUT THESE PARTY'S SECULARISM ALSO.
ReplyDeletecomments:
ReplyDeletegopi g said...
பஜகைவின் மதவெறிக்கு இதை விட சான்று வேண்டுமா என்ன ? பொதுவான அரசு சார்ந்த நிகழ்ச்சியில் கூட இவர்கள் மத வெறியை தூண்ட மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?
idhu govt function illey, hindu belief temple function sir.