Monday, October 28, 2013

இதெல்லாம் உண்மையா ?



இந்த பதிவும் “ காந்தி கணக்கு “ நூலில் நான் படித்த சர்ச்சைக்குரிய விஷயம்தான்.

முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தன்னுடைய மாணவர் ஒருவருடைய ஆய்வுக் கட்டுரையை தன்னுடைய கட்டுரையாக சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றதாக ஓஷோ எழுதியதாய் இந்த நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

அப்படியா?

இதைப் பற்றி யாராவது கேள்விப் பட்டுள்ளீர்களா? அல்லது ஓஷோ எழுதியதை படித்துள்ளீர்களா?

இந்த நூலாசிரியர் மிகவும் போற்றும் வேதியன் பிள்ளை என்பவர் தான் நடத்தி வந்த பள்ளியில் நாற்பது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வந்தாராம். இதை வ.உ.சி காமராஜரிடம் சொன்னாராம். இதை அப்படியே மனதிற்குள் உள் வாங்கிக் கொண்ட காமராஜர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சரான பின்பு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தாராம்.

மதிய உணவு திட்டத்தை காமராஜர் எந்த சூழலில் கொண்டு வந்தார் என்று நான் படித்ததிற்கும் இந்த நூல் சொல்வதற்கும் பெருத்த முரண்பாடு உள்ளது.

விஷயம் தெரிந்தவர்கள் யாராவது  இருந்தால் சொல்லுங்களேன்.

3 comments:

  1. கடவுள் நம்பிக்கை இல்லாத உங்களை (ஒரு பதிவின் பின்னூட்டத்தில் நீங்கள் எழுதியதாக ஞாபகம்) 'ராம் ராம்' (வந்தாராம், போனாராம் ரீதியில்) என்று பலமுறை படிக்கவும் எழுதவும் வைத்தது மட்டுமே இந்த புத்தகத்தின் சாதனை என நினைக்கிறேன்!

    ReplyDelete
  2. ஆஹா, திரு பந்து இப்படியெல்லாம் வேறு இருக்கிறதா, இன்னும் கவனத்தோடு எழுத வேண்டும். நன்றி.

    ReplyDelete
  3. சர்வபள்ளி உங்கள் ஊர் ஊரிஸ் கல்லுரியில்தான் படித்தார் !வசதியற்ற நிலை ! ஸ்காலர்ஷிப் இருந்ததால் வண்டி ஓடியது !பின்னர் சென்னை கிருத்துவ கல்லூரியில்படித்தார் ! M.A. படிக்கும் போது புத்தகம்வாங்க வழியில்லை ! அவருடைய ஒன்ருவிட்ட சகோதரரின் புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்தார் ! அவை phylosophy புத்தகங்கள்! though phylosophy is not his choice !M.A படிக்கும்பொது Ethics and Metaphisicaல் phylosophy என்ற ஆய்வுக்கட்டுரை எழுதினார் ! இது அவருடைய பேராசிரியர் HEGG அவர்களின் கட்டுரைக்கு எதிரானது ! ஆனால்பேராசிரியர் தன் மானவனைப்புகழ்ந்தார் ! அவர் ரவீந்திரரின் தத்துவத்தை ஆராய்ந்து முனைவர் பட்டம்பெற்றார் என்று நினைவு ! அவருடைய ஆங்கில மோழி நடை அற்புதமாக இருக்கும் ! அதற்காகவே அவருடைய புத்தகங்களை படித்தவன் ! லிங்கனின் கெட்டிஸ்பர்க் பெச்சு, மார்ட்டின் லுதரின் பேச்சு,ஆகிய புகழ்பெற்ற பெச்சாளர்களொடு ஒப்பிடக்கூடிய ஆங்கில மேதமை அவருடையது! தகவலுக்காக ! வழ்த்துக்களுடன் ---காஸ்யபன் .

    ReplyDelete