Thursday, July 11, 2013

யாருக்கு எதிராக திமுகவின் சேது சமுத்திர ஆர்ப்பாட்டம்?










சில தினங்கள் முன்பாக திமுக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

சேது சமுத்திரத் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது சரியான அரசியல் நடவடிக்கை என்பதிலும் மாற்றுக் கருத்து கிடையாது.

ஆனால் இந்த ஆர்ப்பாட்டம் யாரைக் கண்டித்து அல்லது யாரிடம் முறையிட்டு?

ஆனால் இங்கேதான் திமுக வின் மவுன மொழி ஆச்சர்யமளிக்கிறது.

சேது சமுத்திரத் திட்டம் தடைபட்டு நிற்பதற்கு மூன்று குற்றவாளிகள் காரணம்.

கற்பனைக் கதை சொல்லி இயற்கையாய் உருவான மண் திட்டுக்களை ராமர் பாலம் என்று சொல்லி முட்டுக்கட்டை போடும் பாஜக.

பாஜக வின் நிலையை அப்படியே எதிரொலிக்கும் ஜெ.

இவர்கள் இருவர் மட்டும்தான் குற்றவாளிகளா?

மூன்று மாதங்கள் வரை திமுக வும் இடம் பெற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காரணம் கிடையாதா? கலைஞரின் மகள் மாநிலங்களவை உறுப்பினராக ஆதரவளித்த காங்கிரஸ் கட்சி காரணம் கிடையாதா?

சொல்லப் போனால் அவர்கள்தான் முதல் குற்றவாளி, பெரும் குற்றவாளி.

ஆட்சியதிகாரத்தை கையில் வைத்துள்ள  காங்கிரஸ் கட்சிக்கு சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே இருக்குமானால் அது நிச்சயமாக சட்டபூர்வமான தடைகளை எப்போதோ தகர்த்திருக்கும்.

எத்தனையோ மோசமான சட்டங்களை, முடிவுகளை கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் எடுக்கிற காங்கிரஸ் கட்சியால் சேது சமுத்திரத் திட்டத்தை மட்டும் அமுலாக்க முடியாதா என்ன? நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் எதிர்க்கும் போது சில்லறை வர்த்தகத்தில் அன்னியக் கம்பெனிகளை அனுமதிக்க முடிகிற போது இது மட்டும் இயலாதா?

பாஜக போடும் அதே வாக்கு வங்கி கணக்கையே காங்கிரஸ் கட்சியும் போடுவதால் மட்டுமே  அது இப்பிரச்சினையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டது.

அமைச்சரவையில் பங்கு வகித்தபோது சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி வாய் திறக்காமல் இப்போது ஆர்ப்பாட்டம் என்பதே கொஞ்சம் வினோதமாகத் தான் உள்ளது.

ஆனாலும் பரவாயில்லை என்று பார்த்தால்

ஆர்ப்பாட்டத்திற்காக திமுக அச்சடித்த சுவரொட்டிகள் கூட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் என்றுதான் சொல்கிறதே தவிர மத்திய அரசை வலியுறுத்தி என்று சொல்ல அது தயாராக இல்லை.

மத்தியரசின் செயலற்ற தன்மையை கொஞ்சம் கூட சுட்டிக் காண்பிக்காமல் எனது உயிரையும் கொடுப்பேன் என்றெல்லாம் வசனம் பேசுவது வெறும் நாடகமே..


பின் குறிப்பு : கலைஞர் மீதான விசுவாசத்தோடு ஆவேசத்தோடு பின்னூட்டம் எழுதக் கிளம்பும் உடன் பிறப்புக்கள், கொஞ்சம் நிதானமாக யோசித்து, நான் சொல்வதில் உள்ள நியாயங்கள் பற்றி சிந்தித்து அதன் பின்பு கீ போர்டிற்குச் செல்லுங்கள்.

4 comments:

  1. உங்களின் கூற்று மிக மிக உண்மை. திமுக-வின் இரட்டை நிலை, ஏமாற்று வேலைகளில் இதுவும் ஒன்றே, சொல்லப் போனால் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற அவா இங்கு யாருக்கும் இல்லை, அத் திட்டத்தின் ஊடாய் பல கோடி லாபம் பார்த்தவர்களில் திமுகவும் தானே பங்குண்டு. ஒரு திட்டத்தை போட்டு நிதியை ஒதுக்கி பின்னர் கைவிடுவது, என நட்டப்படுவது மக்கள் பணம் தானே. உணர மாட்டீங்களா, மக்களே. இவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பதை.

    ReplyDelete
  2. பாஜக சொல்வதை விடுங்கள். உலகெங்கும் கப்பல்கள் பெரியதாகிக்கொண்டே போகும் சூழலில் சிறிய கப்பல்கள் மட்டுமே செல்லக்கூடிய இந்த திட்டம் தேவையா? அதுவும் மண்ணை தூர் வாரிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதால் மணல் எடுக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே பலன் தரும் இந்த திட்டம் வேறு யாருக்கும் பெரிதாக பலன் தராது!

    மற்றபடி, இது போன்ற யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல் ஒரு போராட்டம் பெரிய விசித்திரம். அதை விட விசித்திரம், இதனால் யாராவது ஏமாந்து விட மாட்டார்களா என எண்ணுவது!

    ReplyDelete
  3. அதெல்லாம் இல்லை. 3000 கோடி கடல் நீரில் கரைந்ததா? வேறு எங்கே போனதென்று யாரும் கிளப்புவற்கு முன் ஒரு பாதுகாப்பிற்காக!

    ReplyDelete
  4. FIRST OF ALL, SETHU PLAN IS UTTER WASTE PROJECT. IT OPENS WAY TO EARN MONEY FOR DIGGING THE SEA.IT COSTS MORE. AND ALSO NO SHIP IS SMALL NOW A DAYS. SETHU BRIDGE WAS BUILT BY LORD RAMA, NOT OUR COM. RAMA. SO I, AS AN HINDU, OPPOSE THIS PROJECT AT ANY COST.

    ReplyDelete