Thursday, July 11, 2013

பிரதமர் பதவி ... இவையும் சாத்தியம், இதுவும் கூட சாத்தியம்.






ஆங்கிலத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல் இன்னும் கொஞ்சம் கூடுதல் விபரங்களோடு இங்கே தமிழில் உங்களுக்காக

செல்வந்தர் ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை ஜவஹர்லால் நேரு நிரூபித்தார்.

ஏழை ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை லால் பகதூர் சாஸ்திரி  நிரூபித்தார்.

பெண்மணி ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை இந்திரா காந்தி நிரூபித்தார்.

முதியவர் ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை மொரார்ஜி தேசாய் நிரூபித்தார்.

விவசாயி ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை சரண்சிங் நிரூபித்தார்.

இளைஞர் ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை ராஜீவ் காந்தி நிரூபித்தார்.

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை வி.பி.சிங் நிரூபித்தார்.

கலகக்காரர் ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை சந்திரசேகர் நிரூபித்தார்.

அடுத்தவர் மரணத்தில் அதிர்ஷ்டம் அடித்து ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை நரசிம்மராவ் நிரூபித்தார்.

இருபத்தி ஐந்து எம்.பிக்களை வைத்திருந்தால், யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை தேவே கௌடா நிரூபித்தார்.

கண்ணியமான ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை ஐ.கே.குஜ்ரால் நிரூபித்தார்.

இடிப்பு வேலைகள் மூலமும் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை வாஜ்பாய் நிரூபித்தார்.

தேடி வந்த பிரதமர் பதவியைக் கூட துறப்பது சாத்தியம் என்று தோழர் ஜோதி பாசு நிரூபித்தார்.

ஆனால், ஆனால், ஆனால், ஆனால், ஆனால், ஆனால், ஆனால், ஆனால்,

ஒரு நாட்டிற்கு பிரதமரே அவசியமில்லை என்று உணர வைத்த பெருமை மன்மோகன்சிங்கால் மட்டுமே சாத்தியமானது.

1 comment:

  1. ஒரு நாட்டிற்கு பிரதமரே அவசியமில்லை என்று உணர வைத்த பெருமை மன்மோகன்சிங்கால் மட்டுமே சாத்தியமானது.

    >>
    ஐயோ! இந்தியாவின் நிலை இப்படியாகிடுச்சே!!

    ReplyDelete