Friday, July 12, 2013

அசிங்கமா மாட்டிக்க அவங்களால மட்டும்தான் முடியும்.....





( கொஞ்சம் கால தாமதமாக எழுதப்பட்ட பதிவு )

வித்தியாசமான கட்சி என்று பாரதீய ஜனதா எப்போது தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டதோ, அதிலிருந்து அதற்கு வரும் வில்லங்கங்களும்  வித்தியாசமாக, விபரீதமாகவே வருகிறது.

லஞ்சப் பணத்தை கேமரா முன் வாங்கியது, மதுபானக் கோப்பையோடு பணமும் கடவுளும் ஒன்று என்று சொல்லியது. அடுத்தவர் மனைவியை தன் மனைவி என்று சொல்லி வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்றது, சட்டப் பேரவையில் ஆபாசப்படம் பார்த்தது என்று எண்ணற்ற சிறப்புக்களை பெற்ற பாரதீய ஜனதா கட்சியின் லேட்டஸ்ட் சிறப்பு மத்தியப் பிரதேச விவகாரம்.

வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி தவறாக நடந்து கொண்டார் என்று பணியாள் சுமத்திய குற்றச்சாட்டால் அம்மாநில அமைச்சர் ராகவ்ஜி என்பவரின் பதவி பறி போய்விட்டது. வேறு வழியில்லாமல் பாஜக வும் அவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டது.

இப்படி அசிங்கமாக மாட்டிக் கொள்வதில் உலக சாதனை படைக்கும் வாய்ப்பும் பாஜக விற்கு பிரகாசமாக உள்ளது.

வித்தியாசமான கட்சி என்று சொல்வதை நிறுத்திக் கொண்டால் ஒரு வேளை பாரதீய ஜனதாவிற்கு விடிவு காலம் பிறக்குமோ

2 comments:

  1. NOT TALENTED AS CONGRESS, DMK...JUST LEARNING

    ReplyDelete
  2. Innum Asingamaak kooda maatippaanga. vajapay pathi thriyumla

    ReplyDelete