Sunday, July 7, 2013

ஆண்களுக்கு சமையல் ஒன்றும் சுமையல்ல





வீட்டில் யாரும் இல்லை. மகன், மனைவி ஊருக்குப்
போயுள்ளார்கள்.

ஆகவே நீண்ட நாட்களுக்குப் பின்பு சமையலறை
அனுபவம்.

காலையில் ஒரு உப்புமா செய்து சமாளித்தாகி விட்டது.
மதிய உணவு பிரச்சினை இல்லை. ஒரு தோழமை
அமைப்பின் கூட்டம். கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க
மாநில மாநாடு வேலூரில் நடந்தது. அதன் வரவேற்புக்குழு
நிறைவுக் கூட்டம் இன்று நடந்தது.

எங்கள் மாநாடும் அதே காலத்தில் நடந்ததால் இந்த
மாநாட்டில் பங்கேற்கவும் இயலவில்லை. எந்த ஒரு
உதவியும் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம்
இந்தக் கூட்டத்திலாவது பங்கேற்போமே என்று
சென்றேன். மதிய உணவு அங்கேயே முடிந்தது.

இரவு ஹோட்டலுக்குப் போவதா இல்லை நாமே
சமைப்போமா என்று யோசித்து இறுதியில் நானே
களம் இறங்கி ரவா இட்லி செய்து விட்டேன்.
(எம்.டி.ஆர் ரெடி மிக்ஸில் புளித்த தயிர் கலந்தால்
மாவு ரெடி. அவ்வளவுதான்). 

தொட்டுக் கொள்ள ஒரு வெங்காய சட்னி. அதுவும்
செய்முறை மறந்து போய் ஊருக்கு போன மனைவியை
தொலைபேசியில் பிடித்து தயார் செய்து சாப்டாச்சு.

ஆக ஆண்களுக்கு சமையல் ஒன்றும் சுமையல்ல,

ஆனால்

பாத்திரம் தேய்ப்பது

ஐயோ! அதுதான் பயமுறுத்துகிறது.

பின் குறிப்பு : இன்னும் ஒரு நாள் ஓட்ட வேண்டும். நாளை
சுசீல் போகப் போகிறேனே இல்லை சரவண பவனோ,
அதற்குள் தெனாவெட்டான இந்த பதிவு தேவையா
என்று என் மைன்ட் வாய்ஸ் எனக்கே நன்றாக 
கேட்கிறது.

ஒரு நாளைக்கே உனக்கு இவ்வளவு தெனாவெட்டா
என்று இதைப் படித்து விட்டு எனது மகன் கேட்கப் போகும்
கேள்விக்கு வேறு பதில் தயார் செய்ய வேண்டும்.

 

2 comments:

  1. நல்லது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இப்படிலாம் முடிவெடுத்தா அப்புறம் எங்க கதி?!

    ReplyDelete