Wednesday, July 17, 2013

நீ ரொம்ப ஓவரா போற ... அடங்கு அடங்கு





மீண்டும் ஒரு சமையல் அனுபவம். ஊருக்கு போன மனைவி வந்து விட்டதால் இனி சமையலறைக்குள் உடனடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனாலும்

இன்று மீண்டும் திறமையை காண்பிக்கும் சந்தர்ப்பம் வந்து விட்டது.

என்ன சமையல் என்று காலையில் கேட்டபோது பாகற்காய் பொறியல் என்று பதில் வந்தபோது பாகற்காய் சாப்பிடாமலேயே கசப்பு வந்து விட்டது.

வாழ்க்கையில் பிடிக்கவே பிடிக்காத இரண்டு காய்கறிகள் பாகற்காயும் முள்ளங்கியும். இதிலே நான் எந்த அளவு முள்ளங்கியை வெறுக்கிறேன் என்பதை மட்டுமே தனியாக ஒரு பதிவாக எழுதலாம்.

பாகற்காய் என்பதை மாற்ற முடியாதா என்ற வேண்டுகோளுக்கு சாதகமான பதில் வராததால், வேறு ஒரு பொறியல் கூடுதலாக செய்யலாமே என்ற ஆலோசனையை முன்வைத்தேன். அதற்கான நேரம் போதுமானதாக கிடையாது என்பது தெரிந்தும் அந்த ஆலோசனையை வைத்தேன்.

கம்ப்யூட்டர் முன் உட்காருவதை குறைத்துக் கொண்டு  உங்களுக்கு நேரம் இருந்தால் நான் குளித்து விட்டு வருவதற்குள் நீங்களே செய்து கொள்ளுங்கள் என்று அனுமதி கிடைக்க மீண்டும் களம் புகுந்தேன்.

உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கிக் கொண்டு, வாணலியில் எண்ணை விட்டு கடுகு பொறிந்தவுடன் பாதி உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து வெட்டி வைத்த உருளைக்கிழங்கைப் போட்டேன். கச்சிதமாக மிளகாய் பொடியையும் உப்பையும் போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு, கொஞ்சம் தண்ணீர் தெளித்து மேலே ஒரு தட்டைப் போட்டு மூடி விட்டு சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் உருளையும் நன்கு வதங்கி மிளகாய்ப் பொடியும் உப்பும் கலந்திருந்தது. மீண்டும் ஒரு நிமிடம் நன்றாக கிளறி, கொஞ்சம் கடலை மாவை தூவி கிளற நல்ல மொறுமொறுப்பாய் பொறியல் தயார்.

என் மனைவி ருசி பார்த்து சூப்பர் என்றார்கள். மொபைலில் போட்டோ எடுக்கும் போது “ எப்போதாவது ஒரு நாள் சமைப்பதற்கே இவ்வளவு பந்தாவா? தினம் தினம் சமைக்கும் நாங்கள் எத்தனை எழுதுவது?” என்றார்கள்.

என் மனசாட்சியும் கூட சொன்னது

“ ராமன், நீ ரொம்ப ஓவரா போறே! அடங்கு, அடங்கு “

3 comments:

  1. உருளைக்கிழங்கு பொறியல் வரை வந்தாச்சுல்ல. இந்த வாரம் பிரியாணி சமைச்சு பதிவா போடுங்க

    ReplyDelete
  2. தர்மபுரி இளவரசன் மரணத்திற்கு 'இரயில் மோதியதே' காரணம். அது கொலை அல்ல என புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (Death due to train accident. No evidence of assault or torture.)

    'இளவரசன் கொலைதான் செய்யப்பட்டார். அதுவும் மருத்துவர் இராமதாசு அவர்களின் உத்தரவின் பேரில் பாட்டாளி மக்கள் கட்சியினர்தான் கொலை செய்தார்கள்' என இத்தனை நாளும் அபாண்டமாக பழிசுமத்திய முற்போக்கு வேடதாரிகளும், அவதூறு பத்திரிகையாளர்களும் - அவர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சியோ, அறிவுநாணயமோ, சூடோ சுரணையோ இருக்குமானால் - பகிரங்கமாக மன்னிப்பு கேட்பார்கள் என நம்புவோம்.

    ReplyDelete
  3. ராமன், நீ ரொம்ப ஓவரா போறே! அடங்கு, அடங்கு

    ReplyDelete