Saturday, July 13, 2013

ஊரே பற்றியெறியுது, நாடகம் போடறாங்களாம்

சற்று முன் முகநூலில் ஒரு ஸ்டேட்டஸ் பார்த்தேன்.

நெய்வேலி லிக்னைட் ஹாலில் கிரேஸி மோகனின் நாடகம்
ஒன்று நடந்து கொண்டிருப்பதாக அந்த செய்தி சொன்னது.

ரோடரி கிளப், லயன்ஸ் கிளப், ராஜாஜி மெமோரியல் சொசைட்டி
என்று பல அமைப்புக்கள் நெய்வேலியில் அவ்வப்போது
நாடகம் போட்டு காசு பார்ப்பார்கள். இதில் எந்த அமைப்பு
இன்று நாடகம் போடுகிறது என்று தெரியவில்லை.

பங்கு விற்பனை பிரச்சினை காரணமாக நெய்வேலி நகரம்
கடந்த சில நாட்களாக பற்றி எரிந்து கொடுக்கிறது. 
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாகும் வரை 
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்ட உணர்வோடு ஒரு பக்கம் தொழிலாளர்கள் 
போராடி வரும் போது இன்னொரு பக்கம் இது போன்ற
கேளிக்கைகளும் நடக்கிறது. முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட
நிகழ்ச்சியாக இருந்தாலும் அதைக் கண்டிப்பாக அவர்கள்
ஒத்தி வைத்திருக்க வேண்டும்.

தொழிலாளர்கள் பிரச்சினை இருக்கும்போது நாடகம் 
நடத்தினால் அவர்கள் உணர்வுகள் புண்படும் என்று
கூறினால் கிரேசி மோகன் போன்றவர்கள் மறுக்கவா
போகிறார்கள். கல்லடி விழுந்தால் என்ன ஆகும் என்ற
பயத்தில் கூட வராமல் தவிர்ப்பார்கள்.

எவன் இருந்தால் என்ன, செத்தால் என்ன என்ற அலட்சியத்தோடு
நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் செயல்பட்டுள்ளனர்.

சமூக பொறுப்புணர்வு என்பது கொஞ்சமும் இல்லாத ஏதோ
ஒரு அமைப்பு, அது எதுவாக இருந்தாலும் சரி, அது செய்யும்
பணிகள் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் சரி அது
குடம் பாலில் ஊற்றப்பட்ட ஒரு துளி விஷம் போலத்தான்.

ரோம் நகர நீரோ மன்னன் இறக்கவில்லை.
இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்,
 

 

1 comment:

  1. இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்
    >>
    நிஜம்தான். நம் கண்ணிலும் பட்டுக்கிட்டேதான் இருக்காங்க

    ReplyDelete