Thursday, July 4, 2013

முகநூல் பார்க்கவே அருவெறுப்பாய் உள்ளது

முகநூல்  பக்கம் வரவே வெட்கமாயிருக்கிறது.
ஒரு உயிரின் மரணத்திற்கு காரணமாகி விட்டோமே
என்ற குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல்
மருத்துவரின் வாரிசுகள் முகநூலில் போடும்
பின்னூட்டங்கள் அருவெறுப்பாக உள்ளது.

இந்த நவீன காட்டுமிராண்டிகளை தமிழக மக்கள்
ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பதுதான் 
தமிழகத்திற்கு நல்லது.

 

5 comments:

  1. காட்டுமிராண்டிகளை தமிழக மக்கள்
    ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பது தான்
    தமிழகத்திற்கு நல்லது மட்டுமல்ல, மிக அத்தியாவசியமானது.
    அரசின் கடமை இந்த ஜாதி வெறி கட்சியை தடை செய்து அதன் தலைவர்களை நிரந்தரமாக உள்ளே வைக்க வேண்டும்.

    ReplyDelete
  2. Why are you friends with them? Why are you member of the groups they participate in? Avoid them.

    ReplyDelete
  3. சாதியம் தன் கோர முகத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இங்கு சிக்கலே, சாதி மறுப்பாளர்களின் மவுனங்களும், கையாலாகாத்தனமுமே. தருமபுரி சம்பவம் நடந்த பின் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பை உறுதி செய்ய நாம் என்ன செய்தோம்? சாதி வெறியர்கள் மீது மட்டும் பழியைப் போடுவதன் மூலம் நமது குற்றவுணர்வை மறைக்க முனைவது முறையல்ல. இங்கு சாதி மறுப்பு பேசும் நாம், நமது வாழ்வில் சாதிகளை முற்றாக துறந்து தான் விட்டோமா? அல்லது குறைந்தது சாதி மறுத்து மணந்தோரின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் எத்தகைய உத்தரவாதங்களை எம்மால் அளிக்க முடிந்தது. இங்கு குற்றவாளிகள் தமது வெறித்தனத்தை பரப்பிக் கொண்டே உள்ளனர், அவர்களை நம்மால் ஒழிக்கத் தான் முடிந்ததா? அடுத்து இன்னொரு இளவரசன் இறக்கும் வரை, திவ்யா அபலையாக்கப் படும் வரை, வாய் மூடி மவுனிகளாக கிடப்போம், அல்லது எங்காவது புலம்பித் தீர்த்து விட்டு நாலாம் நாள் அவரவர் சோழியைப் பார்க்கப் போவோம். முடிவு???

    ReplyDelete
  4. I still cannot believe and understand how people(?) like Arul can still justify the atrocities. As you rightly pointed out that we should ignore them and bloggers and readers should ignore Arul (the worst fanatic I have ever seen).

    Suresh

    ReplyDelete
  5. anonymous சொன்னது சரி.அருள் போன்ற பதிவர்கள் நாங்க எவ்வளவு பின்தங்கி அநாகரிகமாக இருக்கிறோம் என்பதிற்கு எடுத்து காட்டு. நாங்க அருள் போன்றவங்களை கணக்கெடுக்காம விடுவதுடன் தமிழ்மணமும் தடை விதிக்க வேண்டும்.

    ReplyDelete