Thursday, July 4, 2013

இளவரசனும் இறந்தாகி விட்டது. இப்போது திருப்தியா?

மருத்துவர் ஐயா வகையறாக்களுக்கு இப்போது மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கும். அவர்களின் குலப்பெருமை, இனப்பெருமை, ஜாதிப் 
பெருமையை நிலை நாட்டப்பட்டு விட்டது. இரண்டு உயிர்களை
பலி கொடுத்து அந்த வெட்டிப் பெருமை நிலை நாட்டப்பட்டிருக்கிறது.

முதலில் தர்மபுரி திவ்யாவின் தந்தை நாகராஜனை அழுத்தம்
கொடுத்து, மன உளைச்சலை உருவாக்கி தற்கொலை செய்ய வைத்த
படுபாவிகள் அதே எமோஷனல் பிளாக்மெயில் மூலம் திவ்யா,
இளவரசனை பிரித்தார்கள்.

நான் இன்னும் இளவரசனை காதலிக்கிறேன், என் அம்மாவின்
அனுமதியோடு மீண்டும் வாழ்வேன் என்று சில தினங்கள் மூலம்
சொன்ன திவ்யாவை இனி இளவரசனோடு வாழப் போவதில்லை
என்று சொல்ல வைத்து விட்டார்கள்.

இதோ இப்போது ரயில்வே தண்டவாளம் அருகில் இளவரசனின்
சடலத்தை பார்க்கும்போது உள்ளமெல்லாம் பதறுகிறது.
நெஞ்சமெல்லாம் கொதிக்கிறது. அது கொலையா, தற்கொலையா
என்ற விவாதத்திற்குள் நான் செல்லவில்லை.

எதுவாக இருந்தாலும் அந்த மரணத்திற்கு இவர்கள்தான் பொறுப்பு.
இருவரையும் பிரித்து விட்டீர்கள். இனி எக்காலத்திலும் ஒன்று
சேர வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

மரணங்கள் மூலம் உங்கள் கௌரவம் காக்கப் பட்டிருக்கலாம்.
ஆனால் இனி அந்தப் பெண் திவ்யாவின் வாழ்க்கை?
அந்தப் பெண் இனி நிம்மதியாக, மன உறுத்தல் இல்லாமல்
வாழ முடியுமா?

தமிழகத்தை பிடித்துள்ள சாபம் நீங்கள்

 

9 comments:

 1. அந்தப் பெண் இனி நிம்மதியாக, மன உறுத்தல் இல்லாமல்
  வாழ முடியுமா?

  ReplyDelete
 2. காலையில் செய்தித்தாளை படித்தவுடனே இளவரசன் கதை இன்றோடு முடிகிறது என்று திடீரென்று மனதில் தோன்றியது. நானே என்னை திட்டிக்கொண்டேன் ச்சே என்ன மனது இது? என்று. மாலை தொலை க் காட்சி செய்தியில் இளவரசன் உடலை பார்த்ததும் மனசு வலித்தது . இப்போது இரண்டு சாதி காரர்களுக்கும் ஒரு கேள்வி.....திவ்யாவின் சாதியை காப்பாற்றி தாலியை பறித்து கொண்டிர்களே, இப்போ திருப்தி யா ?

  ReplyDelete
 3. சாதி வெறி பிடித்த தமிழ் சமூகத்தின் மற்றுமொரு துன்பியல் வடு, மனம் நோகின்றது. ஏண்டா இப்படி சாதி வெறிப் பிடித்த வாழ வேண்டியவர்களின் வாழ்வை சீரழிக்கின்றனரே !

  ReplyDelete
 4. நெஞ்சு பொறுக்குதில்லையே! சாதிவெறி ஒரு அப்பாவித் தமிழனைப பலி கொண்டு விட்டது. செல்வி. ஜெயலலிதா இந்தக் கொலையில் அல்லது தற்கொலைக்கு உடந்தையானவ்ர்கள், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் அனைவரையும் கம்பி எண்ண வைக்க வேண்டும். முதலில் சாதிக்கட்சிகளை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும். திவ்வியாவை விதவையாக்கியது அவளது உற்றாரும், உறவினர்களும் தான்.

  ReplyDelete
 5. மனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக, ஐயராக, ஐயங்காராக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதனால்தான் இளவரசன்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்.
  http://www.hooraan.blogspot.com/2013/07/blog-post.html

  ReplyDelete
 6. இந்த ராமதாசுவின் ஜாதி வெறி கட்சியை உடனடியாக தமிழகம் இந்தியா முழுவதும் தடைசெய்ய வேண்டும்.

  ReplyDelete
 7. ஒருதலைபட்சமான கட்டுரை. உங்களில் எத்தனை பேர் 20 வயதுக்கு குறைந்த பெண்ணை திருமணம் செய்து அனுப்பி உள்ளீர்கள்?

  ReplyDelete
 8. //இந்த ராமதாசுவின் ஜாதி வெறி கட்சியை // இவை எல்லாம் வெறும் பேச்சு. அனைவரும் சாதி பார்த்தே திருமணம் செய்து வைக்கின்றன, இலவசமாக அடுத்தவருக்கு ஊருக்கு உபதேசம் செய்கின்றனர். எல்லா சாதியும் சங்கங்கள் வைத்துள்ளன.

  ReplyDelete
 9. Deccan chronicle report, shows the true face:

  http://www.deccanchronicle.com/130712/news-current-affairs/article/dc-special-here-love-gets-fixed%E2%80%99?page=show

  ReplyDelete