முழுமையாக வீட்டிலிருக்கும் ஞாயிறாக இன்றைய ஞாயிறு
நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று கிட்டியது.
ஒரு தொகுப்பு வேலை, ஒரு படிப்பு வேலை ஆகியவற்றை
திட்டமிட்டிருந்தேன்.
ஆனால் காலை சிற்றுண்டிக்குப் பின்பு ரிமோட்டில்
சேனல்கள் மாற்றிக் கொண்டு வந்த போது வசந்த் டி.வி யில்
திருவிளையாடல் தொடங்க அவ்வளவுதான் அனைத்து
திட்டங்களும் மறந்து போனது.
என்ன அற்புதமான படம்!
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத திரைப்படம்!
சிவாஜி, நாகேஷ் பற்றி மட்டும்தான் எல்லோரும்
கூறுவார்கள். அது மட்டும்தானா திருவிளையாடல்?
கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் கம்பீரக் குரல், துவக்கப்
பாடலில் ஒரு தாள வாத்தியக் கச்சேரியையே கே.வி.எம்
நிகழ்த்தியிருப்பார். முத்துராமனின் பதட்டம், பாலையாவின்
ஆணவம், அது அப்படியே அடங்குவது, அற்புதமான
பாடல்கள் என்று கச்சிதமான படம் அது.
சிவாஜியின் நடிப்பில் எனக்கு பிடித்தது என்னமோ
விறகு வெட்டி வேடம்தான். பாத்தா பசு மரம் பாட்டில்
சின்னச் சின்ன ஸ்டெப்புகளோடு அசத்தலாக நடனம்
ஆடியிருப்பார். விறகு விற்கும் சமயத்திலும் சரி பின்பு
பாலையாவோடு பேசும்போதும் சரி ஒரு அப்பாவித்தனமும்
இருக்கும், கொஞ்சம் குறும்பும் இருக்கும்.
பாட்டும் நானே, பாவமும் நானே பாட்டில் அவர் காட்டும்
முக பாவங்கள், ஹையோ சான்ஸே இல்லை,
சிவாஜிக்கு நிகர் வேறு யாருமே கிடையாது.
வேலை கெட்டுப் போனால் பரவாயில்லை. கண் விழித்து
அதை செய்து விடலாம்.
சில நல்ல தருணங்களை இழக்கக் கூடாதல்லவா?
ungalin intha pagirvai nooru sathivigitham othukkolgiraen. athuvum engal thilagaththin ninaivu naal andru avarukku sirappu searthamaikku nandri.
ReplyDeleteI too saw the movie that day, but only from Balayya's entry. Worthy picture.
ReplyDelete