உமாசங்கரை ஒரு
காலத்தில் அவரது நேர்மைக்காக பாராட்டியதுண்டு. சுடுகாட்டுக் கூரை ஊழலை தைரியமாக
அம்பலப்படுத்தியதற்காக வியந்ததுண்டு. திரூவாரூர் மாவட்ட ஆட்சியராக தகவல் தொழில்
நுட்பத்தை அறிமுகப்படுத்தியபோதும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையோடு
இருந்தபோதும் பிரமித்ததுண்டு. திமுகவினரால் ஒரு சமயம் பழிவாங்கப் பட்டபோது
அவருக்கு நியாயம் கேட்டு குரல் கொடுத்ததும் உண்டு.
ஆனால் இப்போது
அவர் உதிர்த்துள்ள முத்தாகிய
“உத்தர்கண்டிற்கு
வெள்ளத்தை அனுப்பி இந்துக்களை தண்டிக்கப் போவதாய் இயேசு என்னிடம் முன்னமே
கூறினார்“
என்பதைப்
படிக்கிறபோது மத வெறி அவர் நாடி, நரம்பு, புத்தி எல்லாவற்றிலும் ஊறிப் போய் மனநிலை
பாதிக்கப்பட்டவராய் மாறி விட்டார் என்றுதான் தோன்றுகின்றது.
மதச்சார்பற்ற
ஒரு நாட்டின் அதிகாரியாய் இருக்கும் அருகதையை அவர் இழந்து விட்டார். அவர் உடனடியாக
பதவி விலகி சாதாரண மனிதனாய் என்ன இழவு வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அப்படி
அவர் பதவி விலகாவிட்டால் அரசு அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
மிகவும் நியாயமா சொல்லியிருக்கிறீங்க. அவர் அவசியம் பதவி விலக வேண்டும், அல்லது அரசு அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு மிசனரி மக்களை மிரட்டி செய்யும் மத பிசாரத்தை ஒரு அரச அதிகாரி செய்துள்ளார்.
ReplyDeleteVERY GOOD POST.
ReplyDeleteஇந்த மாதிரி மறை கழன்ட மதவெறி பிடித்த அரசு அதிகாரிகள் எப்படி இந்திய அரசியல் சாசனபடி மத சார்பற்ற முறையில் மக்களுக்கு சேவை செய்வார்கள். அரசு உடணே இவரை பதவி நீக்கம் செய்து இவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ReplyDelete