Monday, July 22, 2013

யாரென்று தெரிகின்றதா, வேஷங்கள் கலைகிறதா? ஒரு கவிஞரின் கலைந்த வேடம்


முக நூலில் தோழர் ப.கவிதா குமார் பதிவு செய்த செய்தி இது.
உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சி தந்தது. தான் எழுதும்
கவிதைகள், பாடல்கள், கதைகளுக்கு நேர்மாறாக இவ்வளவு
அராஜகமாக ஒரு மனிதர் நடந்து கொள்ள முடியுமா?

யார் இந்த பெரிய மனிதர் என்பதை இதை படித்து முடிக்கும்
முன்பே தெரிந்து விடும்.

வியர்வையின் பெருமையைப் பற்றி எண்ணற்ற பாடல்கள்
எழுதிய இந்த மனிதருக்கு ஒரு உழைப்பாளியின் ஒரு துளி
வியர்வை அருவெறுப்பு தருகிறது என்றால் என்ன மனிதர்
இவர்?

ஒரு வேளை ரஜனிகாந்தின் வியர்வை மட்டும் இவருக்கு
ஒஸ்தி போல, அதற்குத் தானே ஒரு பவுன் தங்கக்காசு
மதிப்பு என்று பாட்டெழுதினார்.... 

வெளிச்சத்திற்கு  வந்த  பொய்முகம்

தமிழகத்தின் பிரபலமான கவிஞர் அவர்.குடும்பமே கவிதைக்குடும்பம். இவருடைய எழுத்துக்கள் இளைஞர்களைச் சுண்டி இழுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு ளைஞர் ஒருவருடன் கவிதை குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். இன்றைய இளையதலைமுறைக்கு ஏற்றவாறு சுமால் டைகர் படத்தில் கவிஞர் பாட்டு எழுதியுள்ளதைச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அப்போது அந்த நண்பர், அந்த கவிஞரைப் பற்றி இனிமேல் பேசாதீங்கண்ணே என்றார். ஏன் அந்த கவிஞர் மீது இவருக்கு இவ்வளவு வெறுப்பு என்று எனக்கு முதலில் புரியவில்லை. பல நேரங்களில் பாடல்வரிகள் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த கவிஞரின் பாடலைச் சொல்லாமல் பேச்சை முடிக்க மாட்டார் அந்த நண்பர். அப்படிப்பட்டவரையே கோபப்பட வைத்த சம்பவம் என்ன என நான் யோசித்துக்கொண்டிருந்த போது, அவரே தன் கோபத்திற்கான காரணத்தையும் சொன்னார்.

பேண்ட பிள்ளையப்போல என கிராமத்து வார்த்தைகளைப் போட்டு பாட்டு எழுதும் அந்த கவிஞரை தான் வேலைபார்க்கும் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் பேட்டி காணச்சென்றதாகவும், ஒளிப்பதிவாளரான இவர், கவிஞரின் சட்டையில் மைக்கை செட் செய்து கொண்டிருந்த போது இவரின் நெற்றிப்பொட்டில் சொட்டிய வேர்வைத்துளி ஒன்று கவிஞரின் கையில் பட்டுள்ளது. உடனடியாக அவர்ஏண்டாஎனச்சத்தம் போட்டுள்ளார். உடனடியாக இரண்டு பணியாட்கள் ஓடிவந்துள்ளனர். அவரின் முகத்தில் இருந்த கோபத்தைப் பார்த்து பயந்து போன பணியாட்கள், அய் . . .யா. . .யா என அரண்டுள்ளனர். உடனடியாக சோப்பை எடுத்து வா எனக்கூறி வேர்வைத்துளி விழுந்த இடத்தை சோப்பு போட்டு கழுவியதோடு மட்டுமின்றி துண்டைக்கொண்டு பல முறைத் துடைத்துள்ளார். வேர்வைத்துளி விழுந்ததற்காக தான் மன்னிப்பு கோரியதாகவும், அதை அவர் கண்டு கொள்ளவேயில்லை என்றும், அந்த ஒளிப்பதிவு முடியும் வரை தான் பெரும் மனஅழுத்தத்தோடு இருந்ததாகவும் அந்த நண்பர் சொன்னார்.

கவிஞரின் பல பாடல் வரிகளை தனது அலைபேசியில் பதிவு செய்து கேட்டுக்கொண்டிருக்கும் அந்த நண்பர் கொண்ட பெருங்கோபம் போலித்தனமில்லாதது.   உசிலம்பட்டி பூமியில் இருந்து படித்து முடித்து பட்டம் பெற்று ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் அந்த நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி, “எப்படி இந்த ஆள் வாழ்க்கை முழுவதும் நடித்துக் கொண்டிருக்கிறார்?“

வாழ்க்கைக்கும், வார்த்தைக்கும் வித்தியாசமில்லாமல் வாழ்ந்தவர் கவியரசர் கண்ணதாசன். ஆனால், அந்தப்பட்டத்திற்கு மேல் வேறு ஒரு பட்டத்தையும் சேர்த்துக்கொண்டு வானம், போதிமரம், காற்று, என் பூமி, என் மக்கள் என பேசிக்கொண்டிருக்கும் அந்த கவிஞர், தன் தவறை அந்த நிமிடமல்ல இப்போதாவது உணர்ந்தாரா என்ற கேள்வி தான் இப்போது வரை எனக்குள் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

9 comments:

 1. அவரின் ஏற்ற இறக்க பேச்சை கொண்டே நீங்கள் அவதானிக்க வேண்டாமா அவர் வேஷத்தை. திறமை வாய்ந்த கவிதாயினி அந்த கவிஞரின் மனைவி. திருமணத்திற்கு பின் எழுதவே மறந்தாரே. ஏன்?

  ReplyDelete
 2. அவன் எல்லாம் கவிஞன் இல்லை . வார்த்தை சித்தன். பொய்யின் பிறப்பு. மண்டு . இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் என்ற கட்டுரை தொகுப்பில் அவனை இந்த நிலைக்கு உயர்த்திய இசை ஞானியை பற்றி எழுதாதவன் . சுயநல வாதி . ஒருமுறை என் கவி நண்பன் அவனை சந்திக்க சென்ற போது , அவன் பேசியது இரண்டே வார்த்தைகள் தான். 1. என் கவிதைகளை படித்ததுண்டா? 2. அவற்றுள் உமக்கு பிடித்தவை எவை ? தற்பெருமை காரன்.

  ReplyDelete
 3. இது உண்மைதானா?அவர் ஒரு தற்பெருமைக் காரர் என்பதில் ஐயமில்லை.புகழ் பெற்றவர்களை பற்றி இது போன்று ஏதேனும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது ஒரு சிலரின் வழக்கம்.அவர் ஒளிப் பாதிவாளரை தரக் குறைவாக ஏதேனும பேசினாரா?.சம்பவம் நடந்திருக்கலாம் ஆனால் மிகைப் படுத்தப் பட்டவை போல்தான் தெரிகிறது.
  எப்படிப் பட்ட மேதையாக இருந்தாலும் குறைகள் இருக்கவே செய்யும். அவர்களை அன்பின் பிறப்பிடமாக பண்பின் பெட்டகமாக நினைப்பது நம்முடைய அறிவீனமே!

  ReplyDelete
 4. திரைப் படச் சுருளை தீக்குச்சிகளுக்கு தின்னக் கொடுப்போம்னு எழுதியவர் தானே ?

  ReplyDelete
 5. கம்யுனிஸ்ட்களே, இனி எந்த மே தினத்துக்கும் எரிமலை எப்படி பொறுக்கும் பாடலை போடாதீர்கள்.

  ReplyDelete
 6. To Mr.Shankar ..
  He has written about Ilayaraja in Ithakulathil Kalyerinthavarkal.I read it in Bakya ...

  /Praba.

  ReplyDelete
 7. MANY PEOPLE DONOT FOLLOW THEIR OWN WORDS. THEY WOULD BEHAVE DIFFERENTLY AND TALK ABOUT THE THINGS WHICH THEY WON'T FOLLOW

  ReplyDelete
 8. அரிதாரம் பூசிய கவிஞன்
  வைரமாய் இருந்தாலென்ன
  முத்தாய் இருந்தாலென்ன

  வேடம் கலையதான் செய்யும்

  ReplyDelete