Tuesday, July 30, 2013

தெலுங்கானா அறிவிச்சாச்சு, இனிமே பாலும் தேனும்தான் ஓடப் போகுது!

ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ்
கட்சி முடிவு அறிவித்து விட்டது.

சமச்சீரற்ற வளர்ச்சிதான் இந்த கோரிக்கைக்கான காரணம் என்று பலரும்
சொல்லிக் கொள்கிறார்கள். புதிய மாநிலம் வருவதால் வளர்ச்சி வரும்
என்றால் அது வெறும் மாயை மட்டுமே.

வளர்ச்சி வரும். அது மக்களுக்கான வளர்ச்சி இல்லை. ஊழல் தாகம்
கொண்ட அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்குமான வளர்ச்சி.
மொழிவாரி மாநிலங்கள் என்ற அடிப்படையைத் தகர்த்து நிர்வாக
வசதிக்காக என்று பாஜக பிரித்த உத்தர்கண்ட், ஜார்கண்ட், சத்திஸ்கர்
மாநிலங்களின் நிலைமை என்ன?

பழைய ஊழல் பெருச்சாளிகளுக்குப் பதிலாக புதிய ஊழல் முதலைகள்
உருவானது. மது கோடா போன்ற சுயேட்சை எம்.எல்.ஏ க்கள் முதல்வராய்
மாறி ஒரு வருடத்திற்குள் நான்காயிரம் கோடி துட்டு சம்பாதிக்க
முடிந்தது.

சிபு சோரேன் போன்ற ஆட்கள் கூட்டணி மாறி மாறி முதல்வர் 
நாற்காலியை விளையாட்டுப் பொருட்களாக்க முடிந்தது. மற்றபடி
இந்த மாநிலங்கள் துரும்பளவு வளர்ச்சி கூட அடையவில்லை.

இப்போது தெலுங்கானா அமைவதால் யாருக்கு லாபம்?

நாங்கள்தான் முடிவெடுத்தோம் என்று காங்கிரஸ் கட்சியும்
எங்கள் போராட்டம்தான் காரணம் என்று தெலுங்கானா ராஷ்டிர
சமிதியின் சந்திரசேகர் ராவும் மோதிக்கொள்ளப் போகிறார்கள்.
தெலுங்கானா வந்தால் நல்லது என்று அப்பாவித்தனமாக 
நினைத்து போராடிய மக்களுக்கு நல்லது எதுவும் கிடைக்கப்
போவதில்லை.

அடுத்து ஹைதராபாத் பிரச்சினை.

பத்தாண்டுகள் ஹைதராபாத்  இரு மாநிலங்களுக்கும் தலைநகராய்
இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஹரியானா மாநிலம் 1966 ல் பிரிக்கப்
பட்டது. சண்டிகர் பஞ்சாபின் தலைநகராக இருக்கும் என்றும்
ஹரியானா மாநிலத்திற்கு புதிய தலைநகர் உருவாகும் வரை
அதற்கும் சண்டிகரே தலைநகராக இருக்கும் என்று முடிவு
செய்யப்பட்டது.

எங்களுக்கே சண்டிகர் வேண்டும் என்று இரண்டு மாநிலங்களும்
சண்டையிட்டதால் அப்பிரச்சினை தீர்க்கப்படவேயில்லை. மாறாக
சண்டிகர் ஒரு தனி யூனியன் பிரதேசமாகி விட்டது. ஹைதராபாத்
நிலைமையும் அப்படியாகக் கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

விதர்பா, போடோலேண்ட், கூர்க்காலாண்ட், புந்தல்கண்ட் ஆகிய
மாநிலங்களுக்கான கோரிக்கைகளும் மீண்டும் தூசி தட்டி
எழுப்பப்படுகிறது.  இனி புதிய புதிய மாநிலங்களுக்கான
கோரிக்கைகள் வந்து கொண்டே இருக்கப் போகிறது.

பார்ப்போம் இனி தெலுங்கானா பகுதியில் பாலும் தேனும்
பெருக்கெடுத்து ஓடப் போகிறதா என்று....

ஒரு கொள்ளிக்கட்டையின் மூலம் தேன் கூட்டைக் கலைத்து,
அந்தக் கொள்ளிக்கட்டையை தன் தலை மீதும் சோனியா காந்தி
வைத்துக் கொள்வதாய் ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பு
ஹிந்து இதழ் ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. 

இப்போது நடந்துள்ளது அதுதான்
 

 

11 comments:

 1. புது மாநிலங்களிலாவது கம்யூனிஸ்ட் கட்சி தேறுமா இல்ல பூட்டுக்குமா.

  ReplyDelete
 2. இந்தியா முழுக்க கம்யூனிஸ்டுங்க தேறினால் மக்களுக்கு நல்லது.
  அண்ணே அனானி உங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன்

  ReplyDelete
 3. பாலும் தேனும்தான் ஓடப் போகுது என்று ஆசை காட்டி பிரிப்பதே தனியாக கொள்ளையடிக்கும் வசதிக்காக தான்.நீங்க சொன்ன மாதிரி புதிய மாநிலம் வருவதால் வளர்ச்சி வரும் என்றால் அது வெறும் மாயை மட்டுமே.

  ReplyDelete
 4. //இந்தியா முழுக்க கம்யூனிஸ்டுங்க தேறினால் மக்களுக்கு நல்லது.// ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய விசயங்களில் தமிழர்களுக்கு எதிராகவே உள்ளன. உதாரணம் இலங்கை தமிழர் பிரச்சனை, கூடங்குளம்...

  ReplyDelete
 5. தெலுங்கானா மக்களின் ஜனநாயக போராட்டம் வெற்றி பெற்றதே என்ற மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய(போலி ) கம்யூனிஸ்ட் கள் எரிய்ச்சல் அடைவது ஏன்? இந்திய தரகு பார்பனியத்தின் ஒரு சிறு கண்ணி உடைகிறதே என்ற வருத்தமா? தேசிய இன பிரச்சனைகளில் மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல் என்ன என்பதை இது நாள் வரை cpi cpm பரிசீலனை செய்தது உண்டா? மாட்டீர்கள் ஏன் என்றால் உங்களை பொறுத்த வரை(நம்பூதிரிபாட் ) இந்திய என்பது வேதங்களின் நாடு தானே !

  ReplyDelete
 6. புதிய மாநிலங்கள் உருவாக்குவது ஒரு விதத்தில் நல்லதே. புதிய மாநிலங்களால் புதிய ஊழல்வாதிகள் உருவாகுவார்கள் என்றால் மாநிலங்கள் முழுவதையும் அழித்து விட்டு மத்திய அரசாக மாற்றுவதே உசிதம். ஆனால் ஒரு மாநிலம் ஏன் உருவாக வேண்டும் என்பதையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். அது இயற்கை வளங்கள், நிர்வாக வசதிகள், பொருளாதார வளர்ச்சி, மக்களின் மொழி மற்றும் வாழ்வியலை தக்க வைக்க ஏதுவான சூழல்கள் போன்றவைகளை கருத்தில் கொண்டு மாநிலங்கள் உருவாக்கப்படல் வேண்டும். சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்கள் உருவானது அங்கு பழங்குடி மக்களின் வாழ்வியல், மொழி மற்றும் அவர்களின் இயற்கை வளங்கள் மீதான ஆளுமையை உறுதி செய்து கொள்ள வாய்ப்பளிக்கும். அத்தோடு மக்கள் தொகை, நிலபரப்பு மிகுந்த மாநிலங்களில் நிர்வாக சிக்கல்களையும் தீர்க்கலாம். ஆந்திரம் போன்ற பெரிய மாநிலங்களில் தெற்கே சித்தூரில் இருந்து ஐதரபாத் போகவே ஒரு நாள் பயணிக்க வேண்டும், அவ்வளவு தூரம். அதனால் அம் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாக பிரதேசங்களாக மாற்றுவது உசிதம்.

  இது உத்தரபிரதேசம், மராத்தம், மத்திய பிரதேசம் போன்றவைக்கும் பொருந்தும். அத்தோடு தனித்துவமான மொழி, வாழ்வியல் இயற்கை வளங்களை கொண்ட பழங்குடி பகுதிகளான ஒடிசாவின் கோசலம் போன்றவற்றையும் பிரிப்பது நல்லதே.

  பழந்திராவிட மொழி பேசும் தனித்துவமான மொழி, வாழ்வியல், நிலபரப்புக் கொண்ட துளுநாடும் கருநாடகத்தில் இருந்து உருவாக்குவது அவர்களின் மொழி, வாழ்வியல்,இயற்கை வளங்களை தாமே ஆள உதவும்.

  புதிய மாநிலங்கள் தேனும் பாலும் கொடுக்காது என்ற போதும் தமது சொந்த வளங்களையாவது தாம் அனுபவிக்க வழி சமைக்கும்.

  ReplyDelete
 7. மிகுந்த பொறுப்புடன் எழுதியமைக்கு நன்றி

  ReplyDelete
 8. ஐயா கருத்தான், போலி கம்யூனிசம், தரகு முதலாளித்துவம், என்றெல்லாம் எத்தனை நாள் நீங்கள் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகின்றீர்கள்?
  மாவோயிஸ்டுகளின் கஞ்சா வியாபாரத்திற்கு புதிய தரகர்கள் கிடைத்த மகிழ்ச்சி வேண்டுமானால் உங்களுக்கு இருக்கலாம்.

  ReplyDelete
 9. திரு ஆனந்த, இலங்கைத் தமிழர் மற்றும் கூடங்குளம் பிரச்சினை பற்றி சி.பி.எம் மின் நிலை மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. உணர்வுகளை தூண்டி அரசியல் ஆதாயம் அடைய நினைப்பவர்களுக்கு உண்மை கசப்பாகத்தான் இருக்கும்

  ReplyDelete
 10. வேற அனானிJuly 31, 2013 at 9:49 PM

  //இந்தியா முழுக்க கம்யூனிஸ்டுங்க தேறினால் மக்களுக்கு நல்லது.
  அண்ணே அனானி உங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன் //

  நான் சொல்லல, அண்ணன் நல்லா காமெடி பண்ணுவாப்புலன்னு...

  வேற அனானி

  ReplyDelete
 11. நான் வைத்த விவாதங்க க்களுக்கு பதில் இல்லை ஆனால் அவதூறு மட்டும் வருகிறது

  ReplyDelete