சமையலறை என்னை
விடுவதாக இல்லை.
நேற்று அலுவலக
பதிவேடுகள்படி எனது பிறந்த நாள். அலுவலக இணைய தளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்ற பகுதி உள்ளது. அதிலே பிறந்த நாள் காணும் ஊழியர்களுக்கு வாழ்த்து சொல்வார்கள்.
ஆகவே அதைப் பார்த்து பல தோழர்களும் வாழ்த்து சொன்னார்கள். ட்ரீட் கேட்டவர்களிடம்
மட்டும் இது உண்மையான பிறந்த நாள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
எங்கள்
கோட்டத் தலைவர் தோழர் தசரதன் மட்டும் ”நான் மேடமிடம் ஸ்வீட் கேட்டேன். அவர்கள்
கேசரி செய்து அனுப்புகிறேன் என்று சொல்லியுள்ளார்கள்” என்றார். கேசரி என்றால் நானே
செய்வேனே என்றதற்கு அவர் அளித்த பதில்தான் என்னை உசுப்பேத்தியது. நான் ஸ்வீட்
சாப்பிடறதுக்காக கேட்டேன், நீங்க செஞ்சா யார் சாப்பிடுவது என்று அவர் கேட்க
“ சிங்கமொன்று
புறப்பட்டதே “ பாடலை நினைவில் கொள்ளுங்கள். மனதில் அந்த பிஜிஎம் ஒலிக்க மீண்டும்
இன்று காலை சமையலறை புகுந்தேன். உனக்கு இதெல்லாம் தேவையா என்று மகன் தடுத்தும் பணி
தொடங்கியது.
சவால் விட்டு
சமைக்கிறோம் என்று ஒரு பதட்டம் இருந்தாலும் கச்சிதமாகவே கேசரி வந்தது. நெய்
கொஞ்சம் கூட. அவ்வளவுதான். அலுவலகத்திற்கு கொண்டு வந்து அளித்தேன். நன்றாக உள்ளது என்றே எல்லோரும் முக
தாட்சண்யத்திற்காக இல்லாமல் நிஜமாகவே பாராட்டினார்கள்.
பாராட்டுக்களை
விட சவாலில் வென்றதுதான் அதிகமாக
இனித்தது.
“ இப்படி
சவால் விட்டு ஏதாவது செஞ்சு, அதை ப்ளாகுலயும் பேஸ்புக்கிலயும் போட்டு பீற்றிக்
கொள்வதற்கு பதிலாக தினமும் சமையலை கவனிச்சா எனக்காவது உபயோகமா இருக்கும் “ என்பது
மனைவியின் கமெண்ட்.
எவ்வளவோ
செஞ்சாச்சு, இதை செய்ய மாட்டோமா?
என்று மனசு சொல்ல ஆசைப்பட்டாலும் புத்தி சொல்லுது
“ வேண்டாம்,
நான் அடங்கனும். இனிமே யாரும் என்னை உசுப்பேத்தாதீங்க “
பார்க்கும்போதே தெரியுது நல்லாவே வந்திருக்கும்ன்னு. நாளைக்கு பிரியாணி செஞ்சுடுங்க. உங்களல முடியும்.
ReplyDeleteஉசுப்பேத்தாதீங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்கறாங்களே... நான் என்ன செய்ய?
ReplyDeleteஎன்ன செய்ய?
பரவாயில்லையே அல்வா நல்லா வந்திருக்கே.. இதென்ன வேலூர் அல்வாவா? :P
ReplyDeleteஇப்படி சுவையான கேசரி செய்ய உசுப்பேத்தலாம்.
ReplyDelete