Wednesday, February 2, 2022

மோடிகளின் கேடித்தனம்



 குடியரசு தின ஊர்வலத்தில் கப்பற்படை சார்பாக 1946 கப்பற்படை மாலுமிகள் புரட்சியைக் காண்பிக்கும் ஊர்தி வரும் என்று சொன்னார்கள். அதை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்தேன்.

 போராட்டத்தில் குதித்த மாலுமிகள் தங்கள் கப்பல்களில் அன்றைய மூன்று பெரும் அரசியல் கட்சிகளான காங்கிரஸ், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை ஏற்றினார்கள். காங்கிரஸ் கட்சியும் முஸ்லீம் லீக் கட்சியும் மாலுமிகளின் எழுச்சியை ஆதரிக்கவில்லை. அவர்கள் சரண்டைய வேண்டும் என்று காந்தி வெளிப்படையாக அறிவித்தார்.

 கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அவர்களை ஆதரித்தது. பம்பாய் நகரத்தில் தொழிலாளர்களை திரட்டி வேலை நிறுத்தம் நடத்தியது. மாலுமிகளுக்கு ஆதரவும் அடைக்கலமும் அளித்தது.

 இந்த வரலாறெல்லாம் கப்பற்படையின் அலங்கார ஊர்தியில் வருமா? மூன்று கட்சிகளின் கொடிகள் ஏற்றப்பட்ட தல்வார் கப்பலின் மாதிரியை வைப்பார்களா என்றெல்லாம் அறிய காத்திருந்தேன்.

 மோடி அரசா? கொக்கா?

 அவர்கள் எப்படி தங்களுக்குப் பிடிக்காத கொடிகளைக் காட்டுவார்கள்!

 கப்பற்படை புரட்சியை அந்த காலத்தில் வெளியிட்ட பேப்பர் கட்டிங்குகளை போட்டு கடமையை முடித்து விட்டார்கள்…





 இதற்கு பருத்தி மூட்டை கோடவுனிலேயே இருந்திருக்கலாம்.

 இப்படி ஒரு ஊர்தியை ஓட வைத்தற்கு ஓடாமலேயே இருந்திருக்கலாம்.

 உருப்படியாக எதையும் செய்ய துப்பில்லாவிட்டாலும் இந்த கேடித்தனத்திற்கு மட்டும் மோடி வகையறாக்களுக்கு குறைவில்லை.

2 comments:

  1. எதிர்பார்ப்பது ஏமாற்றமடைவது, அறிய காத்திருப்பது அவமானப்படுவது, இதே வேலையா போச்சு! அய்யோ!அய்யோ!!

    ReplyDelete
    Replies
    1. யாருப்பா நீ? சம்பந்தமில்லாம கமெண்ட் போடற! ஒழ்ங்கா படி

      Delete