Thursday, February 24, 2022

ஏழு தடவை பேசியும் ????????


 *நாளொரு கேள்வி: 23.02.2022*


தொடர் எண் : *633*

இன்று நம்மோடு டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் சோசியல் சயின்சாஸ் *பேரா இராமகுமார்*
########################

*ஏழு முறை பேசிய பட்ஜெட் எதுவும் செய்யவில்லை*

கேள்வி: பட்ஜெட் 2022 விவசாயம் பற்றி என்ன பேசி இருக்கிறது? 

*பேரா இராமகுமார்*

ஒன்றிய அரசின் பட்ஜெட் உரையில் "விவசாயம்" என்ற வார்த்தை *ஏழு முறை* பேசப்பட்டுள்ளது. அதில் ஒன்று, பகுதிக்கான  தலைப்பு (Section Heading). இன்னொன்று இணைப்பு அட்டவணை (Annexure) ஒன்றிற்கான தலைப்பு. ஆக இந்த *இரண்டையும் கழித்து விட்டால்* ஐந்து முறை விவசாயம் பற்றி பேசி இருக்கிறது. 

ஐந்தில் ஒன்று *கஸ்டம்ஸ் வரிகள்* பற்றி பேசப்பட்டுள்ள இடம். இரண்டாவது *நபார்டு வங்கி* பற்றி பேசுகிற இடம். மூன்றாவது *வைக்கோல் எரிப்பு* பற்றி வருகிற இடம். 

மீதம் இரண்டு முறைகளும் *இயற்கை விவசாயம்* பற்றி பேசியுள்ள இடங்களில்தான். இதுதான் விவசாயம் பற்றி இந்த பட்ஜெட் காட்டியுள்ள அக்கறை. 

அரசு இயற்கை விவசாயம் பற்றி அக்கறை காண்பிக்க  காரணம் *உர மானியத்தை வெட்டுவதுதான்.* அரசு உர மானியம் கொடுக்க விரும்பாததால் உரமே போடாதீர்கள் என்று விவசாயிகளைப் பார்த்து சொல்கிறது. இதனால் 20 முதல் 30 சதவீதம் வரை விளைச்சல் குறையும். *இலங்கையில்* திடீர் என எல்லா இரசாயன உரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் இலங்கை விவசாயம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. ஆகவே விவசாய விஞ்ஞானிகள் இந்த முடிவை ஏற்க மாட்டார்கள். 

ஆகவே பட்ஜெட் விவசாயிகளுக்கு குறிப்பிடத் தக்க வகையில் ஏதும் செய்யவில்லை. 

*செவ்வானம்*

No comments:

Post a Comment