Friday, February 18, 2022

அயோக்கிய அனாமதேயங்களுக்கு அல்ல . . .

 எல்.ஐ.சி பங்குகள் பொது மக்களுக்குத்தானே விற்கப் படுகிறது. அது எப்படி தனியார்மயமாகும் என்று சிலர் கேட்கின்றனர். கீழே நான் பகிர்ந்து கொண்டுள்ள பதிவு, அவர்களுக்கான விளக்கம். பங்கு விற்பனை என்பது தனியார் மயத்தின் முதல் படி என்பதையும் அது ஏன் தேவையில்லாத ஆணி என்பதையும் விளக்குகிற பதிவுகள் இவ்வலைப்பக்கத்தில் நூற்றுக் கணக்கில் உள்ளதையும் படிக்கவும்.

கடந்த சில பதிவுகளில் பின்னூட்டமிட்ட அயோக்கிய அனாமதேயத்திற்கான பதிவு அல்ல இது. ஏனென்றால் அந்த மொழியைக் கொண்டு அது ஒரு கருங்காலி அயோக்கிய அனாமதேயம் என்பது நன்றாகவே தெரிகிறது. அது தன் வன்மத்தை இங்கே வாந்தியெடுத்தால் அசிங்கமாக திட்டப்படும் என்பதை மற்றவர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.



*நாளொரு கேள்வி: 17.02.2022*

தொடர் எண்: *626*

இன்று நம்மோடு கோவைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் *துளசிதரன்*
########################

*மாயமான் போன்ற அரசின் வாதம்*

*கேள்வி:* பொதுமக்களிடம் தானே பங்குகள் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்குதானே லாபம் செல்கிறது. இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது?

*துளசி தரன்*

நாளை பங்குகள் சந்தைக்கு வரும் போது பாருங்கள். எந்த பொது மக்களுக்கு விற்க போகிறார்கள் என்று. எல்.ஐ.சி பங்குகளை வாங்க டி மேட் வங்கிக்கணக்கு வேண்டும். இந்தியாவில் 7 கோடி பேர்தான் வைத்திருக்கிறார்கள். அதில் 4 கோடி பேர்தான் முனைப்போடு இருப்பவர்கள். *ஏதோ ரோட்டுல சைக்கிளில், ஆட்டோவில் செல்பவர்களுக்கு எல்லாம் பங்கு கிடைக்கப் போவது போல பேசுகிறார்கள்.* இவர்களுக்கு காய்கறி சந்தை தெரியும், ஆட்டுச் சந்தை தெரியும்... பங்குச் சந்தை தெரியுமா? 

உயர் நடுத்தர வர்க்கத்தில் ஒரு பகுதிக்கு கிடைக்கலாம். *அவர்கள் கைகளிலும் பங்குகள் தங்காது.* நிறுவன முதலீட்டாளர்கள் கைகளில் போய் விடும். இதுதான் ஏற்கெனவே பங்கு விற்பனை ஆன அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஜி.ஐ.சி அனுபவம். அங்கே எல்லாம் சில்லறை முதலீட்டாளர் கைகளில் ஒன்றரை சதவீத பங்குகள் கூட இப்போது இல்லை. 

ஆகவே இது மாயமான். *சீதையை ஏமாற்றி கடத்தியது போல* இன்று பொதுத் துறை நிறுவனங்களை கடத்தப் பார்க்கிறார்கள். 

*செவ்வானம்*


3 comments:

  1. BHEL பங்குகளின் நிலையும் இதுதான் தோழர்.முதலில் தொழிலாளர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.தொழிலாளர்களும் வாங்கினார்கள்.அதற்கு வங்கி கடனும் ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால் இப்போது BHEL பங்குகள் BHEL தொழிலாளர்களிடம் இல்லை.

    ReplyDelete
  2. Sir,only 4 Cr people of india paying direct income taxes, but almost everyone paying indirect taxes. Same principle can be applied here. Many not investing directly through dmat but investing through mutual fund sip option. our monthly contribution for National pension scheme invested directly in the stock market. institutions buy the funds for the common people .Even LIC also has invested huge amount.

    SIP is the very common saving scheme followed by almost all the lower and middle class outlets. it is very difficult for everyone to spend time in the stock market on the daily basis. This is an natural and widely followed process.

    ReplyDelete
    Replies
    1. சிறு முதலீட்டாளர்கள் வாங்கினால் கூட குறைந்த காலத்திலேயே அது பெரு முதலாளிகள் கைவசம் சென்று விடும். எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு மதிப்பை உயர தரகர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதுதான் அனுபவம் சொல்லும் பாடம்.

      Delete