Wednesday, February 2, 2022

தலை சுக்குநூறாக நொறுங்கிப் போகும் . . .

 



 வக்கீலே வேணாம். அவரே போதும்.

 லாவண்யா வழக்கை சி.பி.ஐ க்கு வழக்கை மாற்றிய பிரச்சினையில் ஐயா கருணை உள்ளம் படைத்தவராக, வழக்கு தொடுத்தவர்களின், வழக்கை பிரச்சினையாக மாற்றியவர்களின் குரலாகவே மாறி இருப்பது தர்ம தேவதைக்கு பெருமை சேர்க்கும் செயல்.

 அண்ணாமலை வகையறாக்கள் இந்த பிரச்சினையை வைத்து கலவரத்துக்கு கால்கோள் விழா கொண்டாடுவதுதான் முக்கியம் என்ற புரிதல் உள்ளதால்தான் கல்வி அமைச்சர் ஏன் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார் என்று சரியாகவே கேட்டுள்ளார். கலவரத்தை தடுக்க கல்வி அமைச்சரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் யார்? அவர்களை களங்கம் செய்து காவிகள் பேசினால் அதை ஏற்பதற்குப் பதிலாக எதற்கு விளக்கமெல்லாம் கொடுக்க வேண்டும்?

 எடிட் செய்யப்பட்ட வீடியோவில் மத மாற்றம் பற்றி ஒரு புகாரை இணைத்திருந்தால் அதைப் பற்றி விசாரிப்பதுதான் போலீஸ் வேலை, அந்த பெண் தன்னை தந்தையும் சித்தியும் கொடுமைப் படுத்துகிறார்கள் என்று சில்ட்ரன் ஹெல்ப்லைனிடம் முறையிட்டதெல்லாம் தேவையற்ற வேலை என்று எவ்வளவு சரியாக சொல்லி விட்டார் பாருங்கள்!

 வீடியோவை எடுத்த சங்கி தன் போனை போலீஸிடம் தர வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஏதோ வாய் தவறி சொல்லி விட்டார். அதை புரிந்து கொண்டதால்தான் அந்த சங்கி காவல்துறைக்கு ஒத்துழைக்கவில்லை. அனுமார் இதயத்தில் ராமனும் சீதையும் இருப்பது போல ஐயா இதயத்தில் என்ன இருக்கிறது என்பது தெரிந்துதான் அந்த சங்கி ஒத்துழைக்கவில்லை. ஐயாவின் மனதின் குரல் புரிந்து கொண்ட சங்கி செய்தது தவறில்லை என்றுதானே சொல்ல வேண்டும்.

 அது மட்டுமா திருக்காட்டுப்பள்ளி மத மாற்றமாகி மைக்கேல்பட்டி ஆக மாறி விட்டது என்று அவசரக்குடுக்கையாக வானதி அம்மையார் உளறியதை உண்மையாக்க வேண்டாமா? அதனால்தான் மைக்கேல்பட்டி என்ற பெயர் எப்படி வந்தது என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று பொய்க்குற்றச்சாட்டுக்கு ஐயா உயிர் கொடுத்துள்ளார்.

 அதெப்படி சங்கிகள் தொடர்பான அனைத்து வழக்குகளும்  அய்யா வசமே செல்கிறது என்ற அதிசயத்துக்கு விடை தேட நீங்கள் முயன்றால் மட்டும் உங்கள் தலை சுக்கு நூறாக நொறுங்கிப் போகும். . .

No comments:

Post a Comment