Friday, February 11, 2022

மோடியின் வி.சியும் மோடி மாதிரியே

 


உலகப் புகழ் பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக ஒரு அம்மணியை மோடி நியமித்துள்ளார்.

அந்த அம்மையாரின் பிரதாபங்கள் குறித்து ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் பதிவு கீழே.


ஒரு புதிய காமெடி சேனல்
ஜேஎன்யூ பல்கலைக் கழகத்திற்கு ஒரு புதிய துணை வேந்தரை நியமித்திருக்கிறார்கள். பெயர் சாந்திஶ்ரீ பட். சென்னை ப்ரெஸிடென்சி கல்லூரியில் படித்தவர்.
வந்தவுடன் வேடிக்கை தொடங்கி விட்டது. இவருடைய டிவிட்டர் பக்கத்தில் அப்பட்டமான மதவாதக் கருத்துக்களை முன்பு பதிந்திருக்கிறார்.

அதைக் குறித்து கேட்ட போது என் டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப் பட்டிருக்கிறது என்றார். எனக்கு எனக்கு டிவிட்டர் கணக்கே இல்லையென்றும் சொன்னார். இல்லாத கணக்கை எப்படி ஹேக் செய்ய முடியும் என்றால் என் மகள் சைபர் பாதுகாப்பு நிபுணர்… அவர்தான் கண்டுபிடித்தார் என்கிறார்.

துணை வேந்தியாக நியமிக்கப் பட்டதற்கு நன்றி சொல்லி அவர் எழுதிய கடிதத்தில் ஏகப்பட்ட பிழைகள். பிழைகளைத் திருத்தி அவருக்கு 10க்கு 6 மதிப்பெண்களை கொடுத்து டிவிட்டரில் ஒரு நேசமணி பதிவிட்டு விட்டார். (கமெண்ட் பகுதியில் கடிதத்தைப் பார்க்கலாம்)

இந்தக் கடிதத்தை நான் டிக்டேட் செய்தேன். முன்னாள் விசிக்கு பணி புரிந்த அலுவலக ஊழியர்கள் இப்படிச் செய்து விட்டனர் என்று பழியை அவர்கள் மீது போட்டு விட்டார். டிக்டேட் செய்யும் கடிதத்தை படித்துப் பார்க்காமால் யாரும் கையொப்பம் இடுவதில்லை. இது தவிர இவர் மேலும் சில முத்துக்களை உதிர்த்திருக்கிறார்:

நான் ஒரு விளிம்புநிலைப் பிரிவைச் சேர்ந்தவள் (எந்தப் பிரிவு என்று சொல்லவில்லை)…. 70 ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சி செய்த போதும் (????) ஒரு பெண்ணை ஜேஎன்யூ துணை வேந்தராக நியமிக்கவில்லை… இப்போதுதான் நடந்திருக்கிறது … நான் மதச்சார்பற்றவள், என் வகுப்பில் முஸ்லிம் மாணவிகள் இருந்திருக்கிறார்கள்….

எத்தனை ஆடுகளைத்தான் இந்த உலகம் தாங்கும்?


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் பதிவு அந்த அம்மையார் ஒரு ஊழல் பேர்வழி என்பதையும் கோட்ஸேவைக் கொண்டாடும் வெறியர் என்பதையும் நிரூபிக்கிறது.

பேய் அரசு செய்தால்.....

தமிழ்நாடு 'ஜிஹாதி'களின் கூடாரமாகிவிட்டது என்று 2020 இல் தனது ட்விட்டரில் பதிவிட்டவர்தான் தற்போது JNU வின் துணைவேந்தர்.

ஊழல் பரிவார்!

ஊழல் பேர்வழி என்று ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணையில் உறுதியானதால்
1/7/2011 முதல்1/7/2017 வரை ஆண்டுயர்வு மறுக்கப்பட்டு தண்டனைக்குள்ளானவரை புகழ்பெற்ற JNU வின் துணை வேந்தராக்குவதற்கு வெட்கப்படாத கூட்டம்தான் சங்பரிவார்.








“விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்” என்பதற்கு ஏற்ப மோடியால் நியமிக்கப்பட்டவரும் மோடியைப் போலவே மோசமான ஜென்மமாகத்தான் இருக்க முடியும்.

 

 

3 comments:

  1. நீங்கள் எழதுவதை ஜோதி பார்ப்பாரா....

    ReplyDelete