Thursday, August 9, 2018

கலைஞர் - ஜெ : இறுதியில் ஒப்பீடு


ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகிய இருவரின் இறுதி நிகழ்வை முழுமையாய் பார்த்த அனைவராலும் இரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது.

கலைஞரின் இறுதி நிகழ்வு உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. குடும்பத்தினரின் கண்ணீருக்கிடையே அவர் விடை பெற்றுச் சென்றார். நிறைவான வாழ்வை அவர் வாழ்ந்தார் என்பதன் அடையாளமாக அவரது இறுதி நிகழ்வு இருந்தது. 

ஆனால் ஜெ வின் இறுதி நிகழ்வோ இறுக்கமாக, வெறும் சடங்காகவே இருந்தது.  எந்த குடும்பத்திற்கு அவர் காமதேனுவாக, பணமீட்டித் தரும் இயந்திரமாக இருந்தாரோ, அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாருடைய கண்ணிலும் கண்ணீரைப் பார்க்க முடியவில்லை. ஜெ வின் ரத்த சம்பந்தத்தைச் சேர்ந்தவர் கூட ஏதோ சாவி கொடுக்கப்பட்ட பொம்மையாகத்தான் இருந்தார்.

குடும்ப  உறவுகளின் முக்கியத்துவத்தையும் கலைஞர் உணர்த்திச் சென்றுள்ளார். 

7 comments:

 1. ஜெயலலிதாவின் மரணத்தில் கண்ணீர் வடித்தவர்கள் பெரும்பாலும்
  நடுத்தர மற்றும் அதற்க்கும் கீழே வறுமையில் வாடிய ஏழை மக்கள். மினிபஸ்
  அம்மா உணவகம் , குடிநீர், இலவச கணினி ,இலவச மிதிவண்டி இலவச பள்ளி பை
  பள்ளி சத்துணவு ,கோவில் களில் ஏழைகளுக்கு அன்னதானம் என பல நல்ல
  காரியங்கள் நடந்தன . இலவச மின் விசிறி பல குடிசைகளில் ஓடின. அவர் மரணம் பற்றியே
  சந்தேகம் இருக்கும் போது இறுக்கம் நிச்சயம் இருக்கத்தானே செய்யும்.

  ReplyDelete
 2. மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி கருதியே வாஜ்பாய் நல்லவர் என்று கூட்டு சேர வேண்டிய தேவை ஏற்பட்டது. மாறன் உலகமயமாக்கல் தனியார் மயமாக்கல் தாராளமயமாக்கல் இவற்றில் எட்டடி பாய்ந்தார். இவரது மகனுக்கு தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் ஆகி பதினாறு அடி பாய்ந்தார். பாஜகவின் ஆட்சி காலத்தில் நடந்த அனைத்து வகையான அட்டூழியங்களையும் ஆதரிக்க வேண்டி வந்தது. குஜராத் கலவரம் வேறு மாநில விவகாரம் என்று சொல்ல வேண்டிய நிலை.கனிமொழி மூலம் வங்கி கணக்கில் இருநூறு கோடி போடப்பட்ட வழக்கு (கனிமொழி சிறையில்) இந்திய அளவில் கெட்ட பெயரானது. தினகரன் ஊழியர்கள் அழகிரி ஆட்களால் எரித்து கொல்ல பட்டனர். அழகிரியின் செயல்களால் தலைகுனிந்தார். அப்பா மகன் சண்டைக்கு அரசு பஸ்கள் ஏழு எரிக்கப் பட்டன. தயாநிதி நீக்கம். குடும்ப பத்திரிகை தினகரன் பத்திரிகை ஆ.ராசா (இவர 32 அடி பாய்ந்தார்) ஊழல் என்று முதல் பக்கம் முழுப்பக்கம் செய்தி. அழகிரி மகனின் கிரானைட் கற்கள் முறைகேடு. ஜெயலலிதாவுடன் அழகிரியின் பேரம். குடும்பத்தினர் கோவில் போவது பற்றி திமுகவின் கொள்கை மீதான அவதூறுகள்.இன்னும் பல சொல்லி கொண்டே போகலாம். வேண்டாம்.போதும்.

  ReplyDelete
 3. தோழர்_சங்கரய்யா.
  "ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் முதல்வராக இருந்தால் என்னென்ன செய்வாரோ அதையெல்லாம் தமிழகத்தில் செய்து சாதித்தவர் கலைஞர்."

  ReplyDelete
 4. இருவருடைய இறுதி நிகழ்ச்சிகளையும் பார்த்த அனைவருக்கும் என்ன உணர்வு ஏற்பட்டிருக்குமோ, அதுதான் எனக்கும் ஏற்பட்டது. அதைத்தான் பதிவிட்டிருந்தேன். இது அவர்கள் அரசியலைப் பற்றியதோ நடவடிக்கைக்ளைப் பற்றியதோ அல்ல.இருவர் மீதும் விமர்சனங்கள் உண்டு. அதை அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே பதிவு செய்துள்ளேன்.

  ReplyDelete
 5. Since Dr Kalaignar died naturally the shock factor was less and cadres respect to the departed
  soul was spontaneous, his family rallied around him, even though, there was animosity between Stalin and Alagiri. But Jayalaitha died mysteriously, her hospital stay was well guarded by one woman who go on saying that the ex CM was a female patient she needed the required privacy and so on. Nobody was allowed in the hospital. Therefore shock factor was enormous.

  ReplyDelete