Tuesday, November 5, 2013

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பாளர்களே, உங்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்ளப் போகின்றீர்கள்?



http://upload.wikimedia.org/wikipedia/commons/8/89/Pinarayi.JPG

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பாளர்கள், அக்கட்சி மீது ஏதாவது குறை கூற வேண்டுமானால் தேய்ந்து போன கிராமபோன் ரிகார்டு போல உங்கள் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பினராயி விஜயன் மீது ஊழல் வழக்கு உள்ளதே என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சமீபத்தில் கூட எனக்கு அதே முகாரி ராகத்தோடு ஒரு பின்னூட்டம் வந்தது.

போபோர்ஸ் ஊழலை மூடி மறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்பினால் சி.பி.ஐ அதை செய்து முடிக்கும். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் சில்லறை வர்த்தக மசோதாவிலும் மாயாவதி ஆதரவு வேண்டுமென்றால் அவர் மீதான வழக்கை சி.பி.ஐ நீர்த்துப் போகச் செய்யும். அதே போல தங்களுக்கு பிடிக்காதவர்கள் யாரையாவது மிரட்ட வேண்டுமென்றால் சி.பி.ஐ யை வைத்து வழக்கு போட வைக்கும்.

அது போல போடப்பட்ட வழக்குதான் தோழர் பினராயி விஜயன் மீது போடப்பட்டது என்பதை பல வருடங்களாக ஆதாரங்களோடு விளக்கமாக சொல்லி வந்தோம். ஆனாலும் இத்தனை நாள்வரை உங்கள் மீதும் வழக்கு உள்ளதே என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இன்று திருவனந்தபுரம் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், தோழர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று சொல்லி அவரை அந்த வழக்கிலிருந்து விடுவித்து விட்டது.

முன்னர் ஒரு மாளிகையின் படத்தைக் காட்டி இதுதான் தோழர் விஜயனின் வீடு என்று பிரச்சாரம் செய்தார்கள். அந்த வீடு கேரளாவிலேயே இல்லை, துபாயில் உள்ளது, ஒரு ஷேக்கின் மாளிகை என்று நிரூபித்த பிறகு வாய் மூடிக் கொண்டிருந்தார்கள்.

இப்போது அவர்கள் கையில் இருந்த ஒரே பட்டாசும் நமத்துப் போய் விட்டது. அவர்கள் தங்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்ளப் போகிறார்கள்?

2 comments:

  1. இப்போது கம்யூனிச எதிர்பாளர்களுக்கு முச்சந்தியில் நிற்க வைத்து செருப்பால் அடித்தது போல இருக்கும். விடுங்கள் தோழரே ! அவர்களுக்கு எத்தனை சூடு போட்டாலும் திருந்த போவதில்லை !

    ReplyDelete
  2. பினராய் விஜயன் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டு நிரூபிக்கப்படவில்லை,மிகவும் சந்தோசம்.அந்த காலத்தில் திமுகாவினர் காமராஜ் மீது சாட்டிய மலிவான குற்றசாட்டு அவருடைய வாடகை வீட்டை அவருடைய சொந்த வீடென்று சொன்னது.இன்று இந்திரா கட்சிகாரர்கள் அதே மாதிரி மலிவான தந்திரத்தை தோழர் விஜயன் மேல் பயன்படுத்திஉள்ளனர் .அச்சு அம்மாவனும் தோழர் விஜயன் மேல் ஏன் குற்றம் சாட்டினார் என்பதுதான் என்னுடைய கேள்வி.

    ReplyDelete