Sunday, November 17, 2013

உங்களுக்குப் போய் பாரத ரத்னா கொடுத்தானுங்களே, அவங்க முட்டாளுங்கதான்

 https://news.uns.purdue.edu/images/+mugshots/Rao-CNR.jpg

பாத்திரமறிந்து பிச்சை போடு என்பார்கள்.
பதவிகளும் விருதுகளும் அது போல
ஆட்களின் தரம் அறிந்துதான் அளிக்க
வேண்டும் என்ற பாடத்தை கற்றுக்
கொடுத்துள்ளார் பாரத ரத்னா சி.என்.ஆர்.ராவ்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த
முட்டாள் அரசியல்வாதிகள் அறிவியலுக்கு
போதுமான நிதி எதுவும் தரவில்லை என்று
வெடித்து தள்ளியுள்ளார்.

அந்த முட்டாள் அரசியல்வாதிகள்தான்
இவருக்கு பிரதமரின் அறிவியல் ஆலோசகர்
பதவியும் இப்போது பாரத ரத்னா விருதும்
தந்துள்ளார்கள்.

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
என்று எம்.ஜி.ஆர் பாடிவிட்டுப் போனார்.
ஆனால் இவரோ தேசத்தின் மிக உயர்ந்த
விருதைப் பெறும் போதுதான் அராஜகமாக
ஆணவமாக நடந்து கொள்கிறார்.

சச்சின் டெண்டுல்கருக்கு மட்டும் பாரத ரத்னா
விருது கொடுத்தால் சர்ச்சை உண்டாகும் 
என்று இலவச இணைப்பாக இவருக்கும்
விருது கொடுத்த ஆட்சியாளர்களுக்கு
இந்த இழிவு தேவைதான். 

11 comments:

  1. PINNA UNAKA KODUPANGA PAPAERUM PENAUM IRUNTHA EZUTHITA IRUPENGALA ST...................

    ReplyDelete
  2. தமிழக‌ முஸ்லீம் சமூகத்தையே மோசமாக மக்கள் கருதும் வகையிலான வாசகங்களை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி எழுதி உள்ளதும் விகடனில் பிரசுரமானது.


    →அட‌..த்தூ... விஷம் பரப்பும் புரட்டு விகடன்.←

    ReplyDelete
  3. He was not talking for himself, but for science.
    He got Bharat Ratna because he deserved it. It was not a பிச்சை as you mentioned it.

    Truth is bitter, but thats how it is, whether you like it or not.

    Do you believe that India spends more on science? You did not tell anything on that.

    ReplyDelete
  4. உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை! என்ன எதிர்பார்க்கிறீர்கள்? விருது கொடுத்தவுடன் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் போகவேண்டும் என்றா? விருது கொடுத்த பிறகும் உண்மையை பேசி இருப்பவர் எந்த அளவு நெஞ்சுரம் உள்ளவர்!

    குறைந்த சம்பளம்.. பெரிய அளவு ரெகக்னிஷன் இல்லாமை.. குறைந்த அளவு அரசின் ஒத்துழைப்பு.. என்றெல்லாம் இருந்த போதும் நம் விஞ்ஞானிகள் சாதித்தது உண்மையிலேயே மிக அதிகம். செய்த பாவத்தை கொஞ்சம் கழுவிக்கொண்டிருக்கிறது அரசு இவருக்கு விருது கொடுத்து.

    இவருடன் விருது பெற்ற சச்சினை பாருங்கள். அவருக்கு வரும் வருவாயில் ஆயிரத்தில் ஒரு பங்காவது சி என் ராவ் வாங்குவாரா?

    மொத்தத்தில் பணம் / புகழ் மாறுமே உங்களுக்கும் அளவுகோலாக தென்படுவது ஆச்சர்யமே!

    ReplyDelete
  5. முகம் காட்ட தைரியம் இல்லாத அனானி உனக்கு பாரத ரத்னா, நோபல் பரிசு எல்லாமே கொடுக்கலாம். யாரென்று சொல்ல முடியாத கோழை நீயெல்லாம் பின்னூட்டம் போட வந்துட்ட

    ReplyDelete
  6. திரு பந்து, நாய் போல வாலை குழைக்கவும் அவசியமில்லை. கடித்து குதற வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவின் மிக உயரிய
    விருது பெறுகிற மனிதரின் அணுகுமுறை இப்படியா இருக்க வேண்டும். தடித்த வார்த்தைகளை பயன்படுத்துவது படித்தவர்க்கு அழகா? இல்லை பண்பா? எனது விமர்சனம் அவரது மோசமான செய்கைக்குத்தான். இதையே இன்னும் நாகரீகமாக அவரால் சொல்லியிருக்க முடியாதா? அப்படி செய்திருந்தால் அவரது மதிப்பு இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கும். பாவம் ஆத்திரம் கண்ணை மறைத்து விட்டது போல. சச்சின் ? - விரிவாக நாளை எழுதுகிறேன். சங்கப் பணிகளால் இன்று அவகாசம் கிடைக்கவில்லை

    ReplyDelete
  7. பொன்வண்ணன், பந்து அவர்களுக்கு எழுதிய பதில்தான் உங்களுக்கும். அறிவியலுக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதில்லை என்பது உண்மைதான். இதற்கு அரசியல்வாதிகள் மட்டுமா காரணம்? இன்னொன்று சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா கொடுக்காவிட்டால் இவருக்கு கண்டிப்பாக கொடுத்திருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை

    ReplyDelete
  8. //இன்னொன்று சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா கொடுக்காவிட்டால் இவருக்கு கண்டிப்பாக கொடுத்திருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை//
    அதாவது.. சச்சினுக்கு கொடுத்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டதால், உண்மையாகவே அதற்க்கு தகுதியுள்ள இன்னொருவருடன் சேர்த்து கொடுத்தால் எந்த சச்சரவும் வராது என்று சி என் ராவுக்கு கொடுத்தார்கள்!
    //இதையே இன்னும் நாகரீகமாக அவரால் சொல்லியிருக்க முடியாதா? //
    இப்படி சொன்னாலே யாருக்கும் உரைக்காது. மென்மையாக சொல்லியிருந்தால் இந்த நியூஸ் வெளிவந்திருக்குமா? அப்படி சொல்வதால் யாருக்கென்ன பிரயோஜனம்?

    ReplyDelete
  9. [[இன்னொன்று சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா கொடுக்காவிட்டால் இவருக்கு கண்டிப்பாக கொடுத்திருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை ]]

    நீங்கள் சொல்வது உண்மையென்றால், சச்சினுக்கு கொடுத்ததற்க்காக தானே கொடுத்து உள்ளார்கள் என்று அர்த்தம்?

    சச்சினுக்கு கொடுததக்காக நம் அரச்ச்ங்கம் ஒரு விஞ்ஞானிக்கு பாரத ரத்னா கொடுக்கணுமா? இது கேவலாமா இல்லை!

    ReplyDelete
  10. அறிவியலுக்கு மட்டுமா போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை? அரசின் அடிப்படை கடமைகளான கல்விக்கும் சுகாதாரத்திற்கும் கூட நிதி
    ஒதுக்கீடு என்பது மிக மிக குறைவு. அவற்றை தனியார்வசம்
    தாரைவார்த்திடும் திருப்பணியையும் அரசு செய்து வருகிறது. பாதுகாப்பிற்காக கூடுதல் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதில்தான்
    ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பணம் பார்க்கும் வாய்ப்பு
    அதிகம். இதைப்பற்றியெல்லாம் கூட விவாதிப்போமே

    ReplyDelete