தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின்
கௌரவத் தலைவர் தோழர் அருணன் எழுதிய இன்னும் ஒரு
அற்புதமான கட்டுரை. சுதந்திரப் போராட்டத்திற்கும் பரிவாரக்
கும்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்பதை அம்பலப்
படுத்தும் இக்கட்டுரையை அவசியம் படியுங்கள்
சுதந்திரப் போராட்ட வேடதாரி பராக்! அருணன்
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் மீது திடீரென்று பாசம் பொத்துக் கொண்டு கிளம்பியுள்ளது. வல்லபாய் படேலுக்கு 600 அடியில் சிலை வைக்கப் போகிறார் என்பது மட்டுமல்ல, அபுல்கலாம் ஆசாத், கிருப ளானி போன்றோர் பற்றியெல்லாம் பேசுகிறார். “அவர்களைக் காங்கிரஸ் கொண்டாடவில் லை.
நேரு குடும்பத்தை மட்டுமே புகழ்ந்து பேசிப்பேசி பிற தலைவர்களைப் புறக் கணித்து விட்டது” (தி இந்து 11-11-13) என்றும் குடம்குடமாய்க் கண்ணீர் விட்டிருக்கிறார்.அது உண்மை தான். காந்திஜிக்குப் பிறகு காங்கிரசின் தலைமை நேரு குடும்பத்தாரின் வசம் சென்றது என்பதும், ஒரு பிரதமர் இறந் தால் அவரது சிதைக்கு இன்னொரு பிரதமர் தான் தீ மூட்ட வேண்டும் என்ற அளவுக்கு வாரிசு அரசியல் உருவாகிப் போனது என் பதும், அத்தகைய சூழலில் காங்கிரஸ் மற்ற தலைவர்களை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை என்பதும் உண்மைதான்.தனது குடும்பம் செய்திட்ட தியாகம் பற்றி சமீபத்தில் ராகுலும் பேசினார்.
அந்தத் தியா கத்தைக் காட்டிலும் அதிக அரசியல் லாபத் தை அந்தக் குடும்பம் ஈட்டியது என்பதை மட்டும் சொல்ல மறந்தார். நேரு, இந்திரா, ராஜீவ் என்று வரிசையாகப் பிரதமர்களான தும், இப்போது ராகுல் அதற்குத் தயார் செய் யப்படுவதும் நேற்றைய, இன்றைய அரசியல் வாழ்வில் துருத்திக் கொண்டு நிற்கும் யதார்த்தம்.இவையெல்லாம் விமர்சனத்திற்குரிய விஷயங்களே. ஆனால், சுதந்திரப் போராட் டம் பற்றி, அதில் ஈடுபட்ட மகத்தான தலை வர்கள் பற்றிப்பேச மோடிக்கு அருகதை உண்டா எனும் கேள்வியும் கூடவே எழுந்து விடுகிறது. ஜனசங்கத்தின் தொடர்ச்சிதான் பாஜக என்று அதன் தலைவர்கள் பெருமை யோடு கூறுகிறார்கள். அந்த ஜனசங்கத்தைத் துவக்கியது ஆர்எஸ்எஸ்தான் என்பது உலகறிந்த ரகசியம். அதை, அந்த அமைப் பின் இணையதளமும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது.அந்த ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்டது 1925ல். அதே காலத்தில் தான் சுதந்திரப் போராட்ட இயக்கமும் வீறுகொண்டு எழுந்தது. குறிப்பாக 1930ல் நடந்த உப்புச் சத்தியாக்கிரகமானது மெய்யாலும் விரிந்த மக்கள் இயக்கமாக நடைபெற்றது. அன்றைய இந்தியப் பொது வாழ்வின் மைய நிகழ்ச்சி நிரலாக இருந்ததும் அதுவே.
அப்படிப்பட்ட அந்தச் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் பங்கு கொண்டதா?ஆர்எஸ்எஸ்சைத் துவக்கி நடத்தி வந்த ஹெட்கேவாரின் வாழ்க்கை வரலாறு அதனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் “டாக்டர் ஹெட்கேவார்: யுக புருஷர்” என்ற தலைப்பில் காணக் கிடைக்கிறது. உப்புச் சத்தியாக்கிரகம் தொடர்பாக அந்த அமைப்பு எடுத்த நிலைப்பாடு அதில் உள்ளது. அதைக் கேளுங்கள்:“1930 ஏப்ரலில் நடந்த உப்புச் சத்தியாக் கிரகத்தில் பங்கு கொள்ள சங்கின் தொண்டர் கள் பலரும் அனுமதி கேட்டார்கள். ஆனால், சங் மூலம் தேசிய மறுமலர்ச்சியைக் கொண்டு வரும் நிலையான, அடிப்படையான பணியை மேற்கொண்டிருந்தார் டாக்டர்ஜி. அந்த நீண்டகாலப் பணியானது - புறச்சூழல்கள் எப்படியிருந்தாலும் - தடையின்றித் தொடர, வளர வேண்டியிருந்தது. அனைத்து முக் கியஸ்தர்களுக்கும் டாக்டர்ஜி இப்படி எழுதி னார்: `இந்த இயக்கத்தில் சங் பங்கு பெறுவது என்று தீர்மானிக்கவில்லை. எனினும், பங்கு பெற விரும்புகிறவர்கள் தங்களது சொந்த ஹோதாவில் சங்சலக்குகளின் அனுமதி பெற்று பங்கு பெறலாம்.”இந்தச் சுற்றறிக்கையைப் படித்த எந்த ஆர்எஸ்எஸ் காரராவது சுதந்திரப் போராட்டத் தில் பங்கு பெறும் உற்சாகத்தைப் பெற்றிருப் பாரா? நிச்சயம் மாட்டார்.
ஆங்கில ஏகாதி பத்தியவாதிகளை இந்த மண்ணைவிட்டு விரட்டுவதை விட வேறு ஒரு வேலையை தலைவராகிய ஹெட்கேவார் தனது தொண் டர்களுக்கு வகுத்திருந்தார். அதுதான் முஸ் லிம்கள் - கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் அப் பாவி இந்துக்களை உசுப்பி விடுகிற வேலை! அதையே “இந்து தர்மம்”, “இந்துத்துவா” என்ற பெயரில் செய்து கொண்டிருந்தார். அதுவே அவருக்கு “தேசிய மறுமலர்ச்சி”! அந்த வேலைக்கு சுதந்திரப் போராட்ட இயக்கமெல் லாம் இடையூறானவை! அதனால் தான் அதில் ஈடுபடுவதை வெளிப்படையாகவே மறுதலித்தார். அந்தப் புண்ணியவாளர்.இவரது வழியில் வந்தவர்தான் மோடி. இன்றைக்குத் திடீரென - ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்போல- சுதந்திரப் போராட்டம் பற்றிப் பிரமாதமாகப் பேச ஆரம்பித்திருக்கிறார். இதிலே நகைமுரண் என்னவென்றால் “மகாத்மா காந்தி நடத்திய உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தைக் குறிக் கும் வகையில் அமைக்கவுள்ள சபர்மதி’ தண்டி பாரம்பரிய சாலை வழித்தடத்தையும் மத்திய அரசு மாற்ற விரும்புகிறது” என்று அவர் அதே உரையில் வேதனை தெரிவித்திருப்பது! சுதந் திரப் போராட்டப் பாதையிலேயே நடை போடாத பாரம்பரியத்தைச் சேர்ந்த மோடிக்கு அந்த காந்தி நடந்த தடத்தை மாற்றுவது கண்டு ரத்தக் கண்ணீர் வருகிறதாம்! இதை விட மோசடி நாடகம் வேறு உண்டோ?சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதில் லை என்று ஆர்.எஸ்.எஸ். எடுத்திருந்த முடிவு ஏதோ ஹெட்கேவாரின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல. அதுவொரு கொள்கை முடிவு. 1940 லிருந்து அதன் தலைவராகப் பொறுப்பேற்றி ருந்த கோல்வால்கர் இதைப் பட்டவர்த்தன மாகப் பறைசாற்றிருக்கிறார்.
அவரது “சிந்த னைக் கொத்து” எனும் நூலில் செய்யப்பட் டுள்ள இந்தப் பிரகடனத்தை நோக்குங்கள்:“தேசம் என்கிற நமது கருத்தியலுக்கு பூகோள ரீதியான தேசியமும், பொது அபாயம் என்பதுமே அடிப்படையாக உள்ளன. அவை, நமது மெய்யான இந்து தேசியவாதத்தின் உத் வேகமூட்டும் சாரத்தைக் கொன்று போட்டு விட்டன. அவையே `சுதந்திரப் போராட்டங் கள்’ என்பவற்றை பிரிட்டீஷ் - எதிர்ப்பு இயக் கங்களாக ஆக்கிவிட்டன. பிரிட்டிஷ் எதிர்ப்பு எனப்பட்டது தேசபக்தி மற்றும் தேசியத்திற் குச் சமமாகப் பாவிக்கப்படுகிறது. இந்தப் பிற் போக்கு கருத்து சுதந்திரப் போராட்டத்தின் முழுப் போக்கின் மீதும், அதன் தலைவர்கள் மீதும், பொது மக்கள் மீதும் அபாயகரமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.”இது எப்படி இருக்கு? பிரிட்டிஷ் ஆட்சி நடந்த அந்நியர்களின் ஆட்சி நடந்த - அந்தக் காலத்தில் அவர்களை விரட்ட நடந்த போராட் டங்கள் தேசிய இயக்கங்கள் இல்லையாம்! தேசபக்த சமர் இல்லையாம்! இப்படியொரு கருத்தியலோடு இருந்த ஆர்.எஸ்.எஸ். கடைசி வரை சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கு பெறாததில் ஆச்சரியம் இல்லை அல்லவா?சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிர சின் தலைவர்கள் மீது - அதிலிருந்த கம்யூ னிஸ்டு தலைவர்கள் மீது - எண்ணற்ற வழக்குகளைத் தொடுத்தது, அவர்களைச் சிறையில் அடைத்துச் சித்ரவதை செய்தது ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சி.
கம்யூனி ஸ்டுகள் மீது தொடுக்கப்பட்ட மீரத் சதி வழக்கு மிகப் பிரபலமானது. 1947 ஆகஸ்டில் சுதந்திரம் கிடைத்த வேளையிலும் காராக்கிர கத்தில் அடைபட்டுக் கிடந்த தலைவர்கள் பலர். அப்படி ஒரு ஆர்எஸ்எஸ் தலைவரை, அதனது பரிவாரத்தைச் சேர்ந்த தலைவரை அவர்களால் சொல்ல முடியாது. ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு அடங்கி நடந்த மிக நல்ல பிள்ளைகள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கள். இதுதான் சரித்திரம்.1942 ஆகஸ்டு போராட்டத்தில் வாஜ்பாய் பங்கு கொண்டவர் என்று இடையில் ஒரு வாணவேடிக்கை காண்பித்தார்கள் பாஜக வினர். அது துவக்கத்திலேயே புஸ்வான மாகிப் போனதை அறிவோம். அந்தச் சின்ன வயதில் தான் வேடிக்கை பார்க்க மட்டுமே போனதாகவும், அதில் பங்கேற்க வில்லை என்றும் அவர் அந்நிய ஆட்சியாளர்களிடம் அந் தக் காலத்தில் தந்திருந்த வாக்குமூலத் தை “ஃபிரண்ட்லைன்” ஏடு (பிப் 7-20, 1998) பிர சுரித்து அவர்களது மானத்தை வாங்கிவிட்டது.ஆக, மோடியின் பாரம்பரியம் சுதந்திரப் போராட்ட இயக்கப் பாரம்பரியம் அல்ல.
அதற்கு உரிமை கொண்டாட அந்தக் காலத்து காங்கிரசுக்கும், அதிலிருந்த கம்யூனிஸ்டு களுக்கு மட்டுமே உரிமை உண்டு. சுர்ஜித், ஜோதிபாசு, சுந்தரய்யா, இஎம்எஸ், பி.ராம மூர்த்தி, ஜீவா என்று பிற்காலத்தில் கம்யூ னிஸ்டு இயக்கத்தின் மகத்தான தலைவர் களாக ஓங்கி நின்றவர்கள் எல்லாம் 1930-40களில் தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர் களாகவும் திகழ்ந்தார்கள். அப்படி விரலை மடக்கி ஒருவரையும் சொல்ல முடியாது பாஜக தலைவர்களால்.இந்த லட்சணத்தில் “நாட்டுக்காகத் தியாகம் செய்த தலைவர்கள் அனைவருக்கும் பாஜக மரியாதை செய்கிறது” என்று மிக பவ் வியமாகப் பேசியிருக்கிறார் மோடி. இவர்கள் “மரியாதை” செய்த அந்த “அழகு” நமக்குத் தெரியாதா? சுதந்திரப் போராட்டத் தியாகி களுக்கெல்லாம் தியாகி மகாத்மா காந்தி. அவரைச் சுட்டுக் கொன்ற மாபாதகன் இவரது இந்துத்துவா சிந்தனையில் ஊறிப் போயி ருந்த கோட்சே!’ வரலாறு அதை மறக்குமா, மன்னிக்குமா? மோடியின் தற்போதைய வித் தாரப் பேச்சுக்களைக் கண்டு அது ஏமாந்து போகாது.இறுதியாக ஒரு விஷயம். அண்ணல் அம்பேத்கர் பற்றியும் அவர் பேசியிருக்கிறார்.
அவருக்கு பாரத ரத்னா விருது மிகவும் கால தாமதமாக வழங்கப்பட்டது கண்டு வருத்தப் பட்டிருக்கிறார். காங்கிரஸ் தலைமையின் போக்கு இது விஷயத்தில் தவறாகத்தான் இருந்தது. ஆனால், அம்பேத்கர் பற்றி இப் போது கசிந்துருகிப் பேசுகிறவர் இதற்கு முன்பு இப்படிப் பேசியதுண்டா?பேசியதில்லை என்பது மட்டுமல்ல, “பொய்த் தெய்வங்களை வணங்குவது” எனும் தலைப்பில் அம்பேத்கர் பற்றி படுமோசமாக அருண்ஷோரி நூல் எழுதிய போது அதை ரசித்துக் கொண்டிருந்தவர்கள் தாம் இந்த மோடி கூட்டத்தார். அண்மையில் கூட அருண்ஷோரியின் மற்றொரு நூலைச் சென் னையில் வெளியிட்டு அவரைக் கொண்டாடி யவர்தான் மோடி.“அரசமைப்புச் சட்ட சிற்பி எனப் போற் றப்படும் அம்பேத்கர்” என்று மோடி இப்போது பேசுகிறாரே அந்த அம்பேத்கருக்கு அரச மைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் பெரிய பங்கு ஏதுமில்லை என்று அநியாயமாகக் குறைசொல்லி எழுதியிருக்கிறார் அருண் ஷோரி தனது நூலில். அதை மோடி உட்பட பாஜக தலைவர்கள் கண்டித்தது இல்லை.
இன்று வந்து அம்பேத்கர் பெயரையும் உச்ச ரிக்கிறார்கள்!பேசாதவர்கள் பற்றியெல்லாம் பேசு கிறார்கள். பங்கேற்காத சுதந்திரப் போராட்டம் பற்றியெல்லாம் நினைவு கூர்கிறார்கள். எல் லாம் எதற்காக? அந்த நாற்காலி, அதற்காக! பிரதமர் பதவியைப் பிடிப்பதற்காக எதையும் பேசுவார்கள், எதையும் செய்வார்கள். எச் சரிக்கையாக இருக்க வேண்டியது நாம்தான். எட்டப்பன் பரம்பரையினர் திடீரென கட்டப் பொம்மன் வேடம் போடுகிறார்கள் என்பதை மக் களுக்கு அம்பலப்படுத்த வேண்டியதும் நாம்தான்.
நன்றி தீக்கதிர் 16.11.2013

Thambi ithu niyayama
ReplyDeleteஅனானி அண்ணே, இதுதான் நியாயம். இது மட்டும்தான் நியாயம். நீங்க கேட்கிறதுதான் அநியாயம்
ReplyDelete